ஏ.ஐ காவல்துறை தெரியுமா?

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா?

அதென்ன டூரிங் காவல்துறை என்று பார்ப்பதற்கு முன், டூரிங் சோதனை பற்றி சின்ன அறிமுகம். அதற்கு முன் ஆலன் டூரிங் பற்றி ஒரு சின்ன அறிமுகம். கணித மேதையான டூரிங், கணிணியியலின் தந்தை என போற்றப்படுபவர். கம்ப்யூட்டர் எனும் கணக்கிடும் இயந்திரம் குறிப்பிட்ட பணிக்காகவே உருவாக்கப்பட்டு வந்த காலத்தில், எல்லாவிதமான பணிகளையும் செய்யக்கூடிய பொதுத்தன்மை வாய்ந்த கம்ப்யூட்டர் சாத்தியமே எனும் கருத்தை டூரிங் முன்வைத்து இத்தகைய இயந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றும் விரிவாக விவரித்தார்.

டூரிங்கின் இந்த பொதுத்தன்மை கம்ப்யூட்டரே நவீன கம்ப்யூட்டரின் துவக்கப்புள்ளிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கம்ப்யூட்டர் மேதை என போற்றப்படும் டூரிங், முழுமையான கம்ப்யூட்டர் உருவாக்கப்படாத காலகட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவின் சாத்தியம் பற்றி நம்பியவர் டூரிங். உலகின் முதல் செஸ் விளையாடும் புரோகிராமை உருவாக்கியதும் டூரிங் தான்.

மனிதர்கள் போலவே இயந்திரங்கள் சிந்திக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்பதை விவரித்து அவர் எழுதிய மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருகளுக்கான சோதனை ஒன்றை முன்வைத்திருப்பார்.

ஏ.ஐ திறன் கொண்ட மென்பொருள் அல்லது புரோகிராம் மனிதர்களுடன் உரையாடலை மேற்கொள்ளும் போது, மறுமுனையில் இருப்பவருக்கு தான் பேசிக்கொண்டிருப்பது இயந்திரத்துடன் அல்ல மனிதருடன் எனும் உணர்வு ஏற்பட்டால், அந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவு பெற்றுவிட்டதாக கொள்ளலாம் என்பது டூரிங்கின் கருத்து.

டூரிங் விவரித்த இந்த சோதனையே, செயற்கை நுண்ணறிவுக்கான ஆதார தேர்வாக கருதப்படுகிறது.

இன்று வரை டூரிங் சோதனையில் வெற்றி பெறக்கூடிய எ.ஐ மென்பொருள் உருவாக்கப்படவில்லை என்பது தான் நிதர்சனம். சாட் ஜிபிடிக்கும் இது பொருந்தும்.

இதே போலவே, எல்லாம் வல்ல ஏ.ஐ மென்பொருள்களை கட்டுப்படுத்தி கண்காணிக்கும் காவல்துறை அமைப்பு டூரிங் காவல்துறை என சொல்லப்படுகிறது.

ஆனால் டூரிங் காவல்துறைக்கும், ஆலன் டூரிங்கிற்கும் நேரடி தொடர்பு இல்லை. டூரிங் காவல்துறை, வில்லியம் கிப்சனின் நியூரோமென்சர் நாவலில் வரும் கற்பனை காவல்துறை அமைப்பு.

ஆலன் டூரிங் கம்ப்யூட்டர் முன்னோடி என்றால் வில்லியம் கிப்சன், அறிவியல் புனைகதை முன்னோடிகளில் ஒருவர்.  இவரது நியூரோமென்சர் நாவல் அறிவியல் புனைகதைகளில் ஒரு மைல்கல்லாக கொண்டாடாடப்படுகிறது. சைபர்வெளி என பொருள்பட பயன்படுத்தப்படும் சைபர்ஸ்பேஸ் எனும் சொல் இந்த நாவல் மூலம் பிரபலமானது தான்.

இந்த நாவலில் இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும், சாட் ஜிபிடி ஏ.ஐ போலவே இந்த நாவலில் இரண்டு ஏஐ மென்பொருள்கள் வருகின்றன. ஒன்றின் பெயர் நியூரோமென்சர், மற்றொன்றின் பெயர் விண்டர்மியூட்.

இந்த இரண்டு ஏஐ மென்பொருள்களும் ஒன்றை ஒன்று மிஞ்ச முயற்சிக்கும் நிலையில், இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை என்பது இறுதியில் தான் தெரியவரும்.

ஏ.ஐ மென்பொருள்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட இந்த நாவலின் கதைக்களத்தில், அவை சுயமாக ஆதிக்கம் பெற்றிடாத வகையில் கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்படும் அமைப்பு தான் டூரிங் காவல்துறை.

ஏ.ஐ மென்பொருள்களுக்கான கட்டுப்பாடு விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என வல்லுனர்கள் வலியுறுத்த துவங்கியுள்ள சூழலில், கிப்சனின் கற்பனையான டூரிங் காவல்துறை எதிர்காலத்தில் நிஜமாகலாம்.

https://williamgibson.fandom.com/wiki/Turing_Police

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.