பெண்ணியம் பேசும் சாட்பாட்!

,brazil,

சாட்பாட்களில் சமூகபாட்கள் என ஒரு ரகம் இருக்கிறது. வர்த்தக நோக்கில் அல்லது பிரச்சார நோக்கில் உருவாக்கப்படும் சாட்பாட்களுக்கு பதிலாக மக்களோடு சமூக நோக்கில் உரையாடுவதற்காக உருவாக்கப்படும் சாட்பாட்களை இவ்வாறு குறிப்பிடலாம்.

வணிக அல்லது பிரச்சார பாட்களில் இருந்து சமூக பாட்கள் மற்றொரு முக்கிய விதத்திலும் வேறுபடுகின்றன. இந்த பாட்கள் தங்கள் அடையாளத்தை அல்லது நோக்கத்தை மறைத்துக்கொண்டு பின்னணியில் இயங்காமல், இவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, இவற்றின் செயல்பாடுகளும் திறந்த தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

சமூகபாட்களுக்கான அருமையான உதாரணங்களில் ஒன்றாக, பெட்டானியா எனப்படு  பெட்டா சாட்பாட்டை குறிப்பிடலாம். கால்பந்தாட்டத்திற்காக மட்டும் அல்லாமல், பெண்ணிய போராட்டங்களுக்காகவும் அறியப்படும் தென்னமரிக்க நாடான பிரேசிலில் 2017 ம் ஆண்டு பெண்ணிய நோக்கிலான உரையாடலை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சாட்பாட் இது.

பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் மேடையில் மூன்றாம் தரப்பு சாட்பாட்களை உருவாகி கொள்ள அனுமதித்த போது உருவாக்கப்பட்ட லட்சத்திற்கும் மேலான சாட்பாட்களில் ஒன்றாக இது அமைந்தது. ஆனால் மற்ற சாட்பாட் போல இணைய வணிகத்தை நோக்கமாக கொள்ளாமல், அந்நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டது.

Nossas எனும் பெண்ணிய தொண்டு நிறுவனம் உருவாக்கிய இந்த சாட்பாட் பேஸ்புக் மெசஞ்சரில், பயனாளிகளின் பெண்ணியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் பெற்றுள்ளது. பெண்ணியம் தொடர்பான அடிப்படை கேள்விகளுக்கு இந்த சாட்பாட்டிடம் பதில் பெறலாம்.

இதுதவிர, பிரேசில் நாடாளுமன்றத்தில் பெண்களை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அது குறித்து உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பி எச்சரிக்கை செய்வதையும் இந்த சாட்பாட் தனது கடமையாக கொண்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பிரச்சனைகளில் பயனாளிகள் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இமெயில் அனுப்பி வைக்கவும் இந்த சாட்பாட் உதவுகிறது.

2017 ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் கருக்கலைப்பை குற்றமாக அறிவிக்கும் சட்டம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்ட போது அதற்கு எதிரான கருத்துக்களை இமெயில் வடிவில் எம்பிக்களுக்கு அனுப்பி வைத்து போராட இந்த சாட்பாட் உதவியது.

இந்த சாட்பாட்டிற்கு என்று உள்ள துணை இணையதளத்தில், தொழில்நுட்ப உலகில் பெண் முன்னோடிகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

சாட்பாட்களை எப்படி சமூக நோக்கில் பயன்படுத்தலாம் என்பதற்கு இந்த பெண்ணிய பாட் நல்ல உதாரணம். அது மட்டும் அல்ல, தொழில்நுட்ப உலகில் குறிப்பாக ஏஐ துறையில் அல்கோரிதம்களின் பெண்ணிய சார்பு பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அல்கோரிதம்களின் பெண்கள் விரோத தன்மையை பேசுவதோடு, அதற்காக போராடுவதோடு தொழில்நுட்பத்தை பெண்கள் உரிமைக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வாதிடப்படுகிறது. இதற்கான உதாரணமாகவும் இந்த சாட்பாட் திகழ்கிறது.

சாட்பாட்களின் வரலாறு மற்றும் வகைகளை அறிய யுவர்ஸ்டோரியில் எழுதி வரும் எலிசா முதல் சாட்ஜிபிடி வரை தொடரை வாசிக்கவும்!  

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.