சிறந்த எஸ்.இ.ஓ கட்டுரை எழுதுவது எப்படி?

இந்த பதிவு எஸ்.இ.ஓ தொடர்பானது என்றாலும், எஸ்.இ.ஓ கட்டுரைக்கான வழிகாட்டுதல் அல்ல. ஏனெனில், எஸ்.இ.ஓ என சொல்லப்படும் தேடியந்திர உத்திகளில் எனக்கு அறிமுகம் உண்டேத்தவிர தேர்ச்சி கிடையாது. அதைவிட முக்கியமாக எஸ்.இ.ஓ கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. எனில் எதற்காக இந்த பதிவு என்றால், எஸ்.இ.ஓ சார்ந்த சில முக்கிய குறிப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக தான்.

’சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன்’ என்பதன் சுருக்கமான எஸ்.இ.ஓ உத்தியை தேடியந்திரமயமாக்கல் என புரிந்து கொள்ளலாம். அதாவது கூகுள் உள்ளிட்ட முன்னணி தேடியந்திரங்களின் முடிவுகளில் முன்னிலை பெற ஏற்ற வகையில் உள்ளடக்கத்தை உருவாக்குவது.

நீங்கள் எழுத இருக்கும் கருப்பொருள் தொடர்பாக, கூகுளில் அதிகம் தேடப்படும் சொற்கள் செரிந்த வகையில் உள்ளடக்கத்தை உருவாக்குவது என்றும் இதை புரிந்து கொள்ளலாம். தேடியந்திரம் பொருட்படுத்தும் வகையில் எழுதுவது என்றும் குறிப்பிடலாம்.

நடைமுறையில் எஸ்.இ.ஓ என்பது, ’மானே தேனே, பொன் மானே’ போட்டுக்கொள்வது போல அமைகிறது என்பது என் எண்ணம். இன்னும் மோசமாக கூட இந்த உத்தி பின்பற்றப்படுகிறது. எஸ்.இ.ஓ உத்திகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்டும் குப்பை இணையதளங்கள் பட்டியல் பெரியது என்பது மட்டும் அல்ல, கூகுளில் அவற்றுக்கு முன்னுரிமை கிடைக்கிறது என்பதும் இத்துறையின் இருண்ட ரகசியம்.

ஆனால், இயற்கையாகவும் இந்த உத்தி அமையலாம். அதற்கான உதாரணங்களை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

பிஜிபீடியா (https://www.pgpedia.com/) மற்றும் மில்லியன்மைல்சீக்ரெட்ஸ் (https://millionmilesecrets.com/) ஆகிய இரண்டு இணையதளங்கள் தான் உதாரணங்கள்.

இந்த இரண்டு இணையதளங்களும், வெவ்வேறு தருணங்களில் கூகுள் தேடலில் தற்செயலாக இடறிவிழுந்தவை என்றாலும், அட அற்புதமான தளமாக இருக்கிறதே எனும் எண்ணத்தை ஏற்படுத்தி குறித்து வைக்கவோ, பரிந்துரை செய்யவோ எண்ண வைக்காத தளங்கள்.

இருப்பினும், இந்த தளங்களை இங்கே குறிப்பிட காரணம், அவை கூகுள் தேடலில் முன்னுரிமை பெற்றவிதத்தை சுட்டிக்காட்ட தான். ஆனால் இந்த தளங்கள் எஸ்.இ.ஓ உத்திகளுக்காகவே அமைக்கப்படும் குப்பை தளங்கள் அல்ல.

மில்லியன்மைல்சீக்ரெட்ஸ் என்பது விமான பயண திட்டமிடலுக்கு உதவும் இணையதளம். அதிலும் குறிப்பாக, குறைந்த செலவில் விமான பயணங்களை மேற்கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவும் இணையதளம். விமான சேவை நிறுவனங்கள் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளையும், பயண புள்ளிகளையும் வழங்குகின்றன அல்லவா? அத்தகைய புள்ளிகளை எல்லாம் சேர்த்து வைத்து விமான கட்டணத்தை குறைத்துக்கொள்ள வழி செய்வது இந்த தளத்தின் நோக்கம்.

கூப்பன்களாக சேகரித்து வைத்துக்கொண்டு, அவற்றின் மூலம் ஷாப்பிங் செலவை திட்டமிடும் அமெரிக்க கலாச்சாரத்தின் இன்னொரு முகமாக, பயண புள்ளிகள் கொண்டு விமான கட்டணத்தை குறைக்க திட்டமிடுவது அமைகிறது. இத்தகைய பயனாளிகளை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்ட இந்த தளம், இதற்காக எண்ணற்ற கிரெடிட் கார்டு சேவைகளை பட்டியலிடுகிறது. இந்த கார்டுகளை பயன்படுத்தினால் பயண புள்ளிகளை பெறலாம்.

இப்படி பயண புள்ளிகளை ஆசைக்காட்டி பார்வையாளர்களை இழுத்து, கிரெடிட் கார்டு கமிஷன் மூலம் வருமானம் பெறுவது இந்த தளத்தின் உத்தி. இதன் உள்ளடக்கம் முழுவதும் இந்த வர்த்தக நோக்கத்தை மையமாக கொண்டு அமைந்துள்ளது. இந்த நோக்கத்தை மூடி மறைக்காமல் இருப்பதோடு, கார்டு மூலம் கமிஷன் பெறுகிறோம் என்றும் வெளிப்படையாக குறிப்பிடட்டுள்ளது. ( குப்பை தளங்களில் இதை பார்க்க முடியாது).

விமான பயண புள்ளிகளை நாடுபவர்களுக்கு மட்டுமே இந்த தளம் ஈர்ப்புடையதாக இருக்கும். மேலும், விமான புள்ளிகள் தொடர்பான குறிச்சொற்கள் கொண்டு தேடினால் இந்த தளம் கூகுள் தேடல் பட்டியலில் தோன்றலாம்.

ஆனால், கூகுள் விபத்து என கருதக்கூடிய வகையில், ரேடியோஓஓஓ.. எனும் இணையதளம் தொடர்பான தேடலில் இந்த தளம் தேடல் பட்டியலில் வந்து நின்றது,

கம்பனின் ’கண்டேன் சீதை’ வர்ணணையைப் போல், கண்டேன் ரேடியோஓஓஓவை என சொல்லக்கூடிய வகையில் அருமையான இணையதளம் இது. வானொலி பிரியர்களை கவர்ந்திழுக்க கூடிய இந்த தளம் கூகுள் தேடல் முடிவுகளில் முன்னிலை பெற தகுதி உடையது தான் என்றாலும், இந்த தளத்திற்கான தேடலில் விமான பயண புள்ளி தளத்தை கண்டறிவது என்பது எதிர்பாராதது தான்.

வானொலி சேவை தளத்திற்கும், விமான பயண புள்ளிகளுக்கும் என்ன தொடர்பு? கூகுள் ஏன் இந்த தளத்தை தொடர்புடையதாக பட்டியலிட வேண்டும்?

மில்லியன்மைல்சீக்ரெட் தளம், விமான பயண புள்ளிகள் சலுகைகளையும், விளம்பர விவரங்களையும் பட்டியலிடுவதோடு, வலைப்பதிவு பகுதியையும் கொண்டுள்ளது. விமான கட்டணத்தை குறைப்பதற்கான வழக்கமான வழிகாட்டி கட்டுரைகள் கொண்ட இந்த பகுதியில், சில சுவாரஸ்யமான பதிவுகளும் இடம்பெறுகின்றன. அவற்றில் ஒன்று தான் வானொலி சேவையான ரேடியோஓஓஓ தொடர்பான பதிவு.

அந்த கால வானொலி பாடல்களை கேட்டு காலத்தில் திரும்பிச் செல்ல வழி செய்யும் இந்த தளத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த வானொலி பாடல்களையும் கேட்கலாம். அந்த வகையில், பயணிகள் செல்லக்கூடிய நாடுகளின் மண் சார்ந்த இசைய கேட்க உதவும் தளமாக, வலைப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

பயண ஏற்பாட்டுடன் தொடர்புடையது என்பதால் இந்த சேவை பற்றி எழுதப்பட்டுள்ளது. அதோடு, எஸ்.இ.ஓ உத்திகளும் சரியாக பின்பற்றிப்பட்டிருக்கலாம் என்பதால், கூகுளில் ரேடியோஓஓஓ என தேடும் போது மில்லியன்மைல்சீக்ரெட் தளமும் பட்டியலில் இடம்பெறுகிறது. ஒரு நல்ல பதிவு எப்படி பார்வையாளர்களை தேடி வர வழி செய்யும் என்பதற்கான உதாரணம் இது.

தளத்தின் மைய நோக்கத்திற்கு பொருத்தமான பயனுள்ள உள்ளடக்கத்தை இடம்பெறச் செய்தாலே கூகுளின் கவனத்தை பெறலாம் என்பதற்கான உதாரணமாகவும் அமைகிறது. ஆக, சிறந்த எஸ்.இ.ஓ கட்டுரையை எழுதுவது என்பது, பொருத்தமான உள்ளடக்கத்தை கண்டறிந்து சுவாரஸ்யமான முறையில் எழுதுவதாக கொள்ளலாம். இதற்கு ஏன் கீவேர்டுகளை வைத்துக்கொண்டு ஜல்லியடிக்க வேண்டும்.

இரண்டாவது தளமான, பிஜிபீடியா தளமும், இதே போலவே சற்றும் எதிர்பாராத வகையில், ’ஹோமோ லூடென்ஸ்’ (Homo Ludens ) எனும் தேடலின் போது வந்து நிற்கிறது. சிறார்களுக்கான விளையாட்டு, புத்தகங்கள், மைதானங்களை பட்டியலிடும் பிஜிபீடியா தளத்தில், சிறார்களுக்கான வளங்கள் தொடர்பான வலைப்பதிவு பகுதியும் இருக்கிறது. இதில் தான் ஹோமோ லூடென்ஸ் புத்தகம் தொடர்பான அறிமுக பதிவு இருக்கிறது.

கலாச்சாரத்தில் விளையாட்டின் பங்கு மற்றும் வரலாற்றை ஆய்வு செய்யும் இந்த புத்தகம் சிறார்களுக்கு மிகவும் கணமானது என்றாலும், சிறார் விளையாட்டு தொடர்பான ஆய்வும் இடம்பெற்றிருப்பதால், இந்த புத்தகம் மிக பொருத்தமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விளைவு கூகுள் தேடலில் முன்னிலை பெறுகிறது.

ஆக, இப்படி தொடர்புடைய பயனுள்ள விஷயங்களை அடையாளம் கண்டு எழுதுவது தான் சிறப்பாக எஸ்.இ.ஓ கட்டுரை எழுதுவதற்கான எளிய வழி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.