Tag Archives: ஃபேஸ்புக்

அந்த நான்கு இணையதளங்கள்

அடிக்க‌டி பார்க்கும் இணைய‌த‌ள‌ங்க‌ள் என்னும் ப‌ட்டிய‌ல் எல்லோரிட‌மும் இருக்க‌லாம்.அத்த‌கைய பட்டிய‌ல் உங்க‌ளிட‌மும் இருந்தால் அவ‌ற்றில் நான்கு இணைய‌தளங்க‌ளை தேர்வு செய்து கொண்டு  ‘ஃபேவ்4’ இணைய‌தள‌த்தின் ப‌க்க‌ம் செல்லுங்க‌ள்;அங்கு உங்க‌ளுக்கு ஆச்ச‌ர்ய‌ம் காத்திருக்கும்.

அந்த‌ நான்கு தளங்க‌ளையும் ஃபேவ்4 முக‌ப்பு ப‌க்கத்தில் தோன்ற‌ செய்ய‌லாம். அத‌ன் பிற‌கு ஒவ்வொரு முறை இண்டெர்நெட்டில் உலாவும் போதும் நேராக ஃபேவ்4 ப‌க்க‌த்திற்கு போனால் போதும் உங்க‌ள் அபிமான‌ இணைய‌த‌ள‌ங்க‌ளில் உலாவாலாம்.

காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்க்கும் அல்லது கடவுள் படத்தை பார்க்கும் வழக்கம் பலருக்கு இருப்பது போல இண்டெர்நெட்டில் நுழைந்ததுமே கூகுல் அல்லது யாஹூ அல்லது ஃபேஸ்புக் தள‌த்தை பார்க்கும் ப‌ழ‌க்க‌ம் இணைய‌வாசிக‌ள் ப‌ல‌ருக்கு இருக்க‌லாம்.

அவ‌ர்க‌ளுக்கான‌ சேவை தான் இந்த‌ இணைய‌த‌ள‌ம்.கூகுல் முக‌ப்பு ப‌க்க‌ம் போல‌ ஃபேவ்4 த‌ள‌மும் மிக‌ மிக‌ எளிமையாக‌ துர‌வ‌ற‌ கோல‌த்தில் காட்சிய‌ளிக்கும். அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌த்தில் நான்கு லோகோக்க‌ள் ம‌ட்டுமே இருக்கும்.அந்த‌ லோகோவில் எதை கிளிக் செய்தாலும் அத‌ற்கான இணைய‌த‌ள‌த்திற்கு சென்று விட‌லாம்.

இணைய‌வாசிக‌ள் அந்த‌ லோகோக்க‌ளை மாற்றிக்கொள்ள‌லாம் என்ப‌தே விஷ‌ய‌ம்.ஒவ்வொருவ‌ரும் தாங்க‌ள் தின‌ந்தோறும் த‌வ‌றாம‌ல் செல்லும் த‌ள‌ங்க‌ளை தேர்வு செய்து இந்த‌ இடத்தில் வைத்துக்கொள்ள‌லாம்.

அவை ஃபேஸ்புக்காக‌வோ ,ஜிமெயிலாக‌வோ,வேறு எந்த‌ த‌ள‌மாக‌வோ இருக்க‌லாம்.

உங்க‌ள் அபிமான‌ த‌ள‌ங்க‌ளாக‌ திக‌ழும் நான‌கை தேர்வு செய்து இந்த‌ த‌ள‌த்தில் லோகோவாக்கி கொண்டு விட்டால் போதும் தின‌மும் த‌னித‌த்னியே அந்த‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்ல‌ வேன்டிய‌ அவ‌சிய‌மில்லை.

த‌ற்போதே கூட‌ பிர‌வுச‌ர்க‌ளில் தின‌மும் பார்க்க‌ கூடிய‌ ஒரு இணைய‌த‌ள‌த்தை தோன்றும்ப‌டி செய்ய‌லாம். அதை விட‌ ஒரு ப‌டி மேலே சென்று நான்கு இணைய‌த‌ள‌ங்க‌ளை இண்டெர்நெட்டில் அடியெடுத்து வைத்த‌வுட‌ன் அணுக‌ இந்த‌ த‌ள‌ம் வ‌ழி செய்கிற‌து.

தின‌மும் இண்டெர்நெட்டில் உலாவி வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு உண்மையிலேயே ப‌ய‌னுள்ள‌ த‌ள‌ம்.ஆனால‌ நான்கு த‌ள‌ம் ம‌ட்டுமே என்னும் வ‌ரைய‌ரை சில‌ருக்கு அதிருப்தியை த‌ர‌லாம்.

எதிர‌கால‌த்தில் கூகுல் தேட‌ல் பெட்டிஅயை இட‌ம்பெற‌ செய்வ‌து உட்ப‌ட‌ கூடுத‌ல் வ‌ச‌தியை அளிக்க‌ இந்த‌ த‌ள‌ம் திட்ட‌மிட்டுள்ள‌து. நீங்க‌லும் உங்க‌ள் எதிர‌ப்பார்ப்பை குறிப்பிட‌லாம். அதே போல‌ இதில் உள்ள‌ த‌ள‌ங்க‌ளின் ப‌ட்டிய‌லில் உங்க‌ள் அபிமான‌ த‌ள‌ம் விடுப்ப‌ட்டிருந்தால் அத‌னையும் குறிப்பிட‌லாம்.

எளிய‌ சேவை தான் ;ஆனால் சுவார்ஸ்ய‌மான‌து.

………..

பின் குறிப்பு. இந்த‌ ப‌ட்டிய‌லில் நான் தேர்வு செய்ய‌க்கூடிய‌ அபிமான த‌ள‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் இதோ;1;யாஹூ.2;ரீடிப்.3;டிக்.4;ஸ்விட்ச்டு.
நீங்க‌ளும் உங்க‌ள் ப‌ட்டிய‌லை குறிப்பிட‌லாம்.
 ———-

http://fav4.org/

திருடர்களுக்கு வழிகாட்டும் இணையதளம்

எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான் புதிதாக அறிமுகமாகியுள்ள இணையதளம் ஏற்படுத்தியுள்ளது.

இணைய உல‌கில் பெரும் பரபரப்பையும் கூடவே விவாதத்தையும் உண்டாக்கியிருக்கிறது அந்த தளம். பிளீஸ்ராப்மீ என்பது தான் அந்த தளத்தின் பெயர்.அதாவது என்னை கொள்ளையடி என்று பொருள்.இன்னும் சரியாக சொல்வதனால் எங்கள் வீட்டிற்கு திருட வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது போல் தான்.

இதென்ன வம்பாக இருக்கிறதே என நினைக்க தோன்றுகிறதா? உண்மையில் இந்த தளம் அதை தான் செய்கிறது. யாரெல்லாம் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு செல்கின்றனர் என்னும் விவரத்தை பட்டியலிடுவது தான் இந்த தள‌த்தின் நோக்கம்.

இந்த‌ விவ‌ர‌த்தை திர‌ட்டுவ‌து ஒன்றும் க‌டின‌மான‌ விஷ‌ய‌ம் அல்ல‌.டிவிட்ட‌ர்,ஃபேஸ்புக் போன்ற‌ த‌ள‌ங்க‌ளில் ப‌ல‌ரும் இந்த‌ விவ‌ர‌ங்க‌ளை அவ‌ர்க‌ளாக‌வே விரும்பி ப‌கிர்ந்து கொள்கின்ற‌னர்.அவ‌ற்றை எல்லாம் ஒரே இட‌த்தில் திர‌ட்டித்த‌ருகிற‌து இந்த‌ த‌ள‌ம்.

இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் திருட‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌தாகி விடுமே என்று கேட்க‌லாம்.இந்த‌ தள‌த்தைப்பார்த்து விட்டு திருட‌ர்க‌ள் த‌ங்க‌ளின் இல‌க்கை தேர்வு செய்து கைவ‌ரிசை காட்டுவ‌து சுல‌ப‌மாயிற்றே என்னும் ச‌ந்தேக‌மும் நியாய‌மான‌து தான்.

இந்த‌ த‌ள‌ம் செய்ய‌ விரும்புவ‌தும் இதை தான்.திருட‌ வாருங்க‌ள் என்று அழைப்பு விடுப்ப‌த‌ல்ல;ஆனால் திருட‌ வாருங்க‌ள் என்று அழைப்பு விடுப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பு இருப்ப‌தை உண‌ர்த்துவ‌து தான் இத‌ன் உண்மையான‌ நோக்க‌ம். அதிர்ச்சி வைத்திய‌ம் என்று சொல்வார்க‌ள் இல்லையா?அதே போல இணைய‌த்தில் ப‌கிர்ந்து கொள்ள‌ப்ப‌டும் விவ‌ர‌ங்க‌ள் எந்த‌ அள‌வுக்கு ஆப‌த்தான‌வை என்ப‌தை திருட‌ர்க‌ளுக்கான‌ அழைப்பு மூல‌ம் இந்த‌ த‌ள‌ம் சுட்டிக்காட்டுகிற‌து.

டிவிட்ட‌ர் போன்ற‌ வ‌லைப்பின்ன‌ல் சேவைகளில் ப‌ல‌ரும் த‌ங்க‌ளைப்ப‌ற்றிய‌ அந்த‌ர‌ங்க‌ விவ‌ர‌ங்க‌ளை எந்த‌வித‌ த‌ய‌க்க‌மும் இன்றி ப‌கிர்ந்து கொள்கின்ற‌ன‌ர்.பார்த்த‌து,ப‌டித்த‌து, கேட்ட‌து எல்லாவ‌ற்றையும் வெளியிடுப‌வ‌ர்க‌ள் ஊருக்கு போகும் போது ம‌ற‌க்காம‌ல் டிவிட்ட‌ரிலும் சொல்லிவிட்டு சொல்கின்ற‌ன‌ர்.அதே போல‌ விடுமுரைக்கு செல்லும் போதும் டிவிட்ட‌ரில் தெர்விக்கின்ற‌ன‌ர். ஃபேஸ்புக் உறுப்பின‌ர்க‌ள் ப‌த்தியிலும் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் இருக்கிற‌து.

 இணைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் த‌ம‌து ப‌யண‌ திட்ட‌த்தை அறிந்திருப்ப‌து ந‌ல்ல‌து ம‌ற்றும் அவ‌சிய‌ம் என்னும் எண்ன‌த்தில் ப‌ல‌ரும் இத‌னை செய்கின்ர‌ன‌ர். சில‌ருக்கு த‌ங்க‌ள் செய‌ல்க‌ளை இணைய‌த்தில் ப‌றைசாற்ரிக்கொள்ளாவிட்டால் த‌லையே வெடித்து விடும்.

என்வே அதையும் ப‌கிர்ந்து கொள்ள அவ‌ர்க‌ள் த‌ன்முனைப்பு உந்தி த‌ள்ளுகிற‌து. இந்த‌ ப‌கிர்வு க‌லாச்சார‌ம் இண்டெர்நெட் கால‌ இய‌ல்பு என்றாலும் கூட‌ இதில் உள்ள‌ ஆப‌த்தை பெரும்பாலானோர் உண‌ர்வ‌தில்லை.

 இணிடெர்நெட்டில் ஒரு த‌க‌வ‌லை ப‌கிரும் போது உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ட்டும் அத‌னை பார்ப்ப‌தில்லை.வேன்டாத‌வ்ர்க‌ளும்,விஷ‌மிக‌ளும் அவ‌ற்றை பார்க்கும் வாய்ப்பு இருக்கின்ற‌து.

உதார‌ண‌த்திற்கு ஒருவ‌ர்,தான் வெளியூருக்கு செல்வ‌தை தெரிவிக்கிறார் என‌ வைத்துக்கொள்வோம். அப்போது அவ‌ர் தன‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் த‌க‌வ‌ல் சொல்ல‌வில்லை. த‌ன‌து வீடு பூட்ட‌ப்ப‌ட்டிருக்கும் என்ப‌தையும் திருடும் எண்ண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு தெரிவிக்கின்ற‌ன‌ர்.

என‌வே டிவிட்ட‌ர் ப‌திவை பார்த்து விட்டு ஒருவ‌ர‌து வீடு பூட்ட‌ப்ப‌ட்டிருக்கும் என்ப‌தை தெரிந்து கொண்டு க‌ய‌வ‌ர்க‌ள் க‌ண்ண‌ம் வைக்க‌கூடும்.ஏற்க‌ன‌வே ஒரு சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ல் இப்ப‌டி ந‌ட‌ந்துள்ள‌ன‌.எதிர்கால‌த்தில் திருட‌ர் ம‌ற்றும் கொள்ளைய‌ர்க‌ள் டிவிட்ட‌ர் போன்ற‌ சேவைகளில் உலா வ‌ருவ‌த‌ன் முல‌மே த‌ங்க‌ளுக்கான‌ சுல‌ப‌ இல‌க்கை தேர்வு செய்து விட‌ முடியும் என‌ அஞ்ச‌ப்ப‌டுகிற‌து.

வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது எதை வெளியிடுவ‌து அதை வெளியிடாம‌ல் இருப்ப‌து என‌ எச்ச‌ரிகையாக‌ இருக்க‌ வேண்டும் என்று நிபுண‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். அது ம‌ட்டும் அல்லாம‌ல் இப்போது போர்ஸ்கொய‌ர் போன்ற‌ இருப்பிட‌ன் உண‌ர் சேவை மூல‌ம் ஒருவ‌ரின் இருப்பிட‌ம் சார்ந்த‌ விவ‌ரங்கள் இணைய‌த்தில் வெளியிட‌ப்ப‌டுகிற‌து.

இவையெல்லாம் திருட‌ வ‌ரலால் என‌ அழைப்பு அன்றி வேரென்ன‌?என்று சொல்லாம‌ல் சொல்வ‌த‌ற்காக‌ நெத‌ர்லாந்தை சேர்ந்த‌ இளைஞ‌ர‌க‌ள் பிளீஸ் ராப்மீ த‌ள‌த்தை அமைத்துள்ள‌ன‌ர். இண்டெர்நெட்டில் வெளியிட‌ப்ப‌டும் விவ‌ர‌ங்க‌ளால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ஆப‌த்துக்க‌ள் ப‌ற்றி ப‌ல‌வித‌ங்களில் நிபுண‌ர்க‌ள் எச்ச‌ரித்த‌ போதும் பெரும்பாலானோர் அத‌ன் தீவிர‌த்தை உண‌ர்ந்த‌தாக‌ தெரிய‌வில்லை.

ஆனால் இந்த‌ த‌ள‌த்தில் யாரெல்லாம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்க‌ள் என்னும் விவ‌ர‌ம் திருட‌ வாருங்க‌ல் என்னும் அழைப்போடு வெளியாவ‌தை பார்க்கும் போது ப‌கீர் என்று இருக்கும் அல்லவா?அந்த‌ நொடியில் டிவிட்ட‌ர் ப‌கிர்வுக‌ள் எத்த‌கைய‌ அபாய‌ம் மிக்க‌வை என்ப‌து உரைக்கும் அல்ல‌வா? அத‌னை தான் செய்வ‌தாக‌ இந்த‌ த‌ள‌த்தின் நிறுவ‌ன‌ர்க‌ள் சொல்கின்ர‌ன‌ர்.

முத‌ல் பார்வைக்கு இந்த‌ த‌ள‌ம் திருட‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌து போன்ர‌து என்றாலும் உண்மையில் விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்துவ‌து தான் இத‌ன் குறிக்கோள். இந்த‌ த‌ள‌ம் இண்டெர்நெட் உல‌கில் ப‌ர‌வ‌லான‌ க‌வ‌னிப்பை பெற்றுள்ள‌து.ப‌ல‌ர் இந்த‌ த‌ள‌த்தை பொருப்ப‌ற்ற‌ செய‌ல் என்று விம‌ர்சித்துள்ள‌ன‌ர். ஆனால் இந்த‌ தள‌த்தில் குறிப்பிட‌ப்பிட‌ப்ப‌ட்டிருப்ப‌து போல் நீங்க‌ள் வெளியூர் செல்வ‌தை அறிவிக்கும் போது நீங்க‌ள் வீட்டில் இல்லாத‌தை உல‌கிற்கு அறிவித்துக்கொண்டிருக்கிறீர்க‌ள் என்ப‌தை இந்த‌ த‌ள‌ம் மிக‌ அழ‌காக‌ உண‌ர்த்துகிற‌து.

ந‌ம் கால‌த்து பிர‌ச்ச‌னைப்ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தும் அழாகான‌ த‌ள‌ம் இது என்றே தோன்றுகிற‌து. அத்ற்கேற்ப‌வே இத‌ன் உரிமையாள‌ர்க‌ள் இந்த‌த‌ள‌த்தை இண‌டெர்நெட் அந்த‌ர‌ங்க‌ பிர‌ச்ச்னைக‌ள் சார்ந்த‌ விழிப்புண‌ர்வு ப‌ணிக்கு வ‌ழ‌ங்க‌ த‌ய‌ராக‌ இருப்ப‌தாக‌ அறிவித்துள்ள‌ன‌ர்.

———-

http://pleaserobme.com/

இன்டர்நெட் கால காதல் : ஓர் அலசல்!

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காக‌வே இந்தப் படம் கவனத்திற்குரியது.

 ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் நடந்த அதிசயம் இது.

ஆனால், தற்போதைய தலைமுறை இந்தப் படத்தையே ஓர் அதிசயமாக பார்க்கக்கூடும்! ஒரு பெண்ணிட‌ம் பேச‌ ஏன் இத்த‌னை த‌ய‌ங்க‌ வேண்டும்? அவ‌ள் ப‌க்க‌த்தில் செல்ல‌வே ஏன் ப‌ய‌ந்து ந‌டுங்க‌ வேண்டும்?

இப்ப‌டி ப‌ல‌ கேள்விக‌ள் எழ‌க்கூடும். அந்த‌ நாய‌க‌னின் த‌விப்பும், அத‌னை ராஜேந்த‌ர் க‌வித்துவ‌மான‌ முறையில் சொன்ன‌தும் இந்த‌ கால‌ இளைஞ‌ர்க‌ளுக்கு புரியாத‌ புதிராக‌ இருக்க‌லாம்.

இந்த‌ செல்போன் யுக‌த்தில் காத‌ல் என்ப‌து ஒரு எஸ் எம் எஸ் தொலைவில் தான் உள்ள‌து. ஒரு பெண்ணை பிடித்திருக்கிற‌தா, அப்ப‌டியென்றால் எப‌ப்டியாவ‌து அவ‌ள் செல்போன் எண்ணை வாங்கிவிட்டால் ஒரே ஒரு எஸ் எம் எஸ்-சில் தொட‌ர்பு கொண்டுவிட‌லாம். அத‌ன் பிற‌கு அதே எஸ் எம் எஸ்-சில் தொட‌ங்கி இமெயில், ஃபேஸ்புக், டிவிட்ட‌ர் என எத்த‌னையோ வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன‌.

அது ம‌ட்டுமா… கால‌மும் ச‌மூக‌மும் நிறையவே மாறிவிட்ட‌ன‌. பெண்க‌ளோடு பேச‌த் த‌ய‌ங்கும் அச‌ட்டு ஆண் பிள்ளைக‌ள் இன்று அரிதாகிவிட்ட‌ன‌ர். இது ஆணும் பெண்ணும் கை கோர்த்து திரியும் கால‌ம்.

என‌வே, ‘ஒரு த‌லை ராக‌’ காத‌ல் இன்றைய‌ இன்டர்நெட் த‌லைமுறைக்கு குழ‌ப்ப‌த்தை த‌ர‌லாம். ஆனால் 1980க‌ளில் நில‌விய‌ மனோநிலையை இந்த‌ப் ப‌ட‌ம் பிர‌திப‌லிக்கிற‌து என‌ப‌தை நினைவில் கொள்ள‌ வேண்டும். காத‌லை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு த‌ங்க‌ளுக்குள்

ம‌ருகிய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இளைஞர்க‌ள் அந்த‌ப் ப‌ட‌த்தின் நாய‌க‌னில் த‌ங்களைக் க‌ண்டு ஆறுதல் அடைந்த‌தே அந்த‌ப் ப‌ட‌த்தை பெரு வெற்றி பெற‌ வைத்த‌து. காத‌லைச் சொல்ல‌ முடிவ‌தை வெற்றியாக‌வும், காத‌ல் தோல்வியை கூட‌ காதலின் வெற்றியாக‌வும் க‌ருதிய‌ கால‌த்தின் ப‌ட‌ம் அது.

 இன்றைய இன்டர்நெட் த‌லைமுறை அந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்து சிரிக்க‌லாம். அல்ல‌து, கால‌ம் எப்ப‌டி மாறிவிட்ட‌து என்று விய‌ந்து போக‌லாம்.

இல்லை அதற்கு மாறாக, படத்தை பார்க்கும் இன்டர்நெட் தலைமுறை தங்களை கொடுத்து வைத்த தலைமுறை என்று நினைத்து மகிழும் வாய்ப்பும் இருக்கிற‌து. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கால மாற்றம் இருபாலரும் சந்தித்து பேசிக்கொள்வதை சகஜமாக்கியிருக்கிற‌து என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி காதலர்கள் இடையிலான தகவல் தொடர்பை இன்னும் சுலபமாக்கியிருக்கிறது.

இன்றுதான் காதலை வெளிப்படுத்தவும் காதலை வளர்த்துக்கொள்ளவும் எத்தனை வழிகள் இருக்கின்றன. காதலர்கள் ஒயாமால் செல்போனிலே பேசிக்கொண்டே இருக்கலாம். தொலைபேசியை போல வீட்டில் உள்ளவர்கள் கவனிப்பார்களே என்ற அச்சம் இல்லாமல் செல்போனில் தனனை மறந்து காதல் வானில் மிதக்கலாம். பேசு முடியாத‌ நிலை என்றால் இருக்க‌வே இருக்கிற‌து எஸ் எம் எஸ். குறுஞ்செய்திக‌ளை அனுப்பியே காத‌ல் உரையாட‌லில் மூழ்க‌லாம்.

இன்னும் க‌டித‌ பாணி காத‌லை விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்கு இருக்க‌வே இருக்கிற‌து இமெயில் வ‌ச‌தி. இல்லை என்றால் இன்டர்நெட் அர‌ட்டையில் ஈடுப‌ட‌லாம். ஐ எம் சாட் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

எல்லாம் சுத‌ந்திர‌மான‌வை. அந்த‌ர‌ங்க‌மான‌வை. காத‌லனின் க‌டிதம் அம்மாவிட‌ம் சிக்கிகொண்டால் என்ன‌ செய்வ‌து என்னும் அச்ச‌ம் இமெயில் கால‌ காத‌லிக்கு கிடையாது. காத‌ல் ப‌ரிமாற்ற‌த்துக்கு ம‌ட்டும‌ல்ல‌ காத‌ல் தேட‌லுக்கும் கூட‌ இன்டர்நெட்டே கைகொடுக்கும். முன் போல பீச்சிலோ பார்க்கிலோ காத‌ல் த‌வ‌ம் செய்ய‌த் தேவையில்லை.

வ‌லைப்பின்ன‌ல் சேவையான‌ ஃபேஸ்புக் அல்ல‌து ஆர்குட்டில் வ‌லைவீசி ஒத்த‌க‌ருத்துள்ள‌வ‌ர்க‌ள் இணைவ‌து சுல‌ப‌ம் தான். ஃபேஸ்புக்கில் புகைப்ப‌ட‌த்துட‌ன் கூடிய‌ அறிமுக‌ ப‌குதியின் மூல‌ம் இள‌சுக‌ள் த‌ங்க‌ள‌து விருப்பு வெறுப்புக‌ளை வெளிப்ப‌டுத்தி அத‌ன‌டிப்ப‌டையில் ஜோடி தேடிக்கொள்ள‌லாம். க‌ண்ட‌வுட‌ன் காத‌ல் என்ப‌து போல‌ காத‌லை வெளிப்ப‌டுத்த‌ அவ‌ச‌ர‌ப்ப‌ட‌ வேண்டிய கட்டாய‌மும் இல்லை. ஃபேஸ்புக்கில் த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் செய்த‌ப‌டி ஒருவ‌ர் ம‌ன‌தை ஒருவ‌ர் புரிந்து கொள்ள‌ முற்ப‌ட்டு எல்லாம் ச‌ரி என்றால் காத‌ல் முடிவை அறிவிக்க‌லாம். அதோடு காத‌லில் விழுந்தேன் என்ப‌தை அறிவிக்க‌ ஃபேஸ்புக்கை விட‌ சிற‌ந்த‌ வழியில்லை.

ரொம்ப‌ சுல‌ப‌மாக‌வும் ந‌ய‌மாக‌வும் இத‌னை செய்ய‌லாம். அதில், உள்ள‌ ஸ்டேட்ட‌ஸ் ப‌குதியில் மாற்ற‌ம் செய்வ‌த‌ன் மூலம் காதல் செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். அதே போல ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ட்டிய‌லில் இருந்து வில‌க்கி காதல‌ன் அந்த‌ஸ்த்துக்கும் கொண்டு செல்ல‌லாம். இவ்வ‌ள‌வு ஏன் அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் அறிவிக்காத‌ வ‌ரை காத‌லுக்கு அதிகார‌ப்பூர்வ‌ அந்த‌ஸ்து இல்லை என்று க‌ருத‌ப்ப‌டும் வ‌ழ‌க்க‌ம் உருவாகியுள்ள‌து தெரியுமா? ஃபேஸ்புக்கில் வெளியீட்டால் தான் காத‌லிலேயே சேர்த்தி என‌ நினைக்கும் அள‌வுக்கு நில‌மை இருக்கிறது.

 குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை கூட‌ காத‌ல் வாக‌ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். பெரும்பாலும் செய்தி வெளியீட்டுக்கே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ந்தாலும் இத‌ன் ப‌கிர்வு த‌ன்மையை காத‌ல‌ர்க‌ளும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம்.

அதிலும் க‌ண்ட‌தும் காத‌ல் கொண்டு விடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் நேற்று தியேட்டரில் அவ‌ளைப் பார்த்தேன், பார்த்த‌தும் ம‌ன‌தை ப‌றிகொடுத்துவிட்டேன் என்று ஒரு டிவிட்ட‌ர் செய்தியை த‌ட்டிவிட்டு காத‌ல் உல‌கில் நுழைய‌லாம். அவ‌ளும் கூட‌ அந்த‌ டிவிட்டை பார்த்துவிட்டு ‘காத‌லா, காத‌லா’ என அழைத்து ப‌தில் செய்தி மூல‌ம் காத‌லை உறுதிப்ப‌டுத்த‌லாம்.

அநேக வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன். அவ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்வ‌து அவர‌வ‌ர் கையில் தான் இருக்கிற‌து. ஃபிளிக்க‌ர் மூல‌ம் புகைப‌ப‌ட‌ காத‌லில் ஈடுப‌ட‌லாம். யூடியூப் வ‌ழியே வீடியோ காத‌லிலும் திளைக்க‌லாம். அது ம‌ட்டுமா இன்று காத‌ல் வ‌லை வீசுவ‌த‌ற்கான‌ நீர் ப‌ர‌ப்பும் ப‌ர‌ந்து விரிந்து கிட‌க்கிற‌து.

 சும்மா உள்ளூரில் தான் காத‌ல் த‌வ‌ம் இருக்க‌ வேண்டும் என்றில்லையே. இன்டர்நெட்டில் நுழைந்து விட்டால் வைய‌மே ந‌ம‌க்கான‌ இட‌மாகிவிடாதா? ஊர், ந‌க‌ர‌ம் என்ற‌ வ‌ரைய‌ரை இல்லாம‌ல் இமெயில் முல‌மோ ம‌றுப‌டியும் ஃபேஸ்புக் முல‌மோ யாரை வேண்டுமானால் தொட‌ர்பு கொண்டு ந‌ட‌பை வளர்த்துக் கொண்டு காத‌ல் ப‌ய‌ண‌த்தையும் துவ‌க்க‌லாம்.

இன்டர்நெட்டின் வ‌ருகைக்கு பின் காணாம‌லே காத‌ல் த‌த்துவ‌த்துக்கு புத்துயிர் கிடைத்திருக்கிற‌து. நேரில் பார்க்க‌மாலேயே இமெயில் வாயிலாக‌ அறிமுக‌மாகி… காத‌லர்களாகி… அதன்‌ பின், முத‌ல் முறையாக நேரில் ச‌ந்தித்துக்கொண்ட‌ ந‌வீன‌ காத‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்ற‌ன‌ர். இதெல்லாம் ஒரு த‌லை ராக‌ த‌லைமுறைக்கு சாத்திய‌மாகாத‌ வ‌ச‌திக‌ள். மற்ற துறையைப் போலவே இன்டர்நெட் காத‌ல‌ர்க‌ளூக்கும் புதிய‌ க‌த‌வுக‌ளை திற‌ந்துள்ள‌து.

ஆனால், ஒன்று… இன்டர்நெட் காத‌ல் ஆப‌த்துக்க‌ள் நிறைந்த‌து என‌பதை ம‌ற‌ந்துவிட‌க் கூடாது. இமேயில் மூல‌ம் அறிமுக‌மாகி தப்பான‌வ‌ர்க‌ளின் வ‌லையில் விழுந்து ஏமாந்த‌வ‌ர்க‌ளும் க‌ணிச‌மாக‌ உள்ள‌ன‌ர். கியுபா முன்னாள் அதிப‌ர் காஸ்ட்ரோவின் ம‌க‌ன் இப்ப‌டி அமெரிக்க‌ வாலிப‌ர் ஒருவ‌ரை கொல‌ம்பிய‌ அழ‌கி என‌ நினைத்து ஏமாந்த‌ க‌தையும் இருக்கிற‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ஃபேஸ்புக் புதிய‌ உற‌வுக்கு எப்ப‌டி உத‌வுகிற‌தோ அதே போல‌ உற‌வுக்கும் வேட்டு வைக்க‌லாம். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளில் ப‌ல‌ர் ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ள் அல்ல‌து முத‌ல் காத‌ல‌னை/காதலியை தேடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தும், அவ‌ர்க‌ளில் சில‌ர் இதில் வெற்றி பெற்று ப‌ழைய உற‌வை புதுப்பித்துக் கொண்டு புதிய‌ உற‌வில் சிக்க‌லை தேடிக்கொள்வ‌து குறித்தும் இன்டர்நெட் உல‌கில் ப‌திவுக‌ள் இருக்கின்ற‌ன.

எனவே, எச்சரிக்கை தேவை! ஆதி கால‌ காத‌லோ இன்டர்நெட் காத‌லோ, காத‌லுக்கான‌ பொன்விதிக‌ள் எப்போதுமே பொதுவ‌னாவை.

அதை நினைவில் கொண்டால் காத‌ல் வ‌ச‌ப்ப‌டும்!

———–

நன்றி;யூத்புல் விகடன்

டிவிட்டருக்கு ஒரு சோதனை

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை  கண்டறிவதற்கான பரிசோதனையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 அந்த‌ ஐந்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும் ஐந்து நாட்க‌ள் ஒரு பண்ணைவீட்டில் தங்க உள்ளனர்.இந்த நாட்களின் போது அவர்கள் கடுமையான செய்தி விரதம் மேற்கொள்வார்கள்.அதாவ‌து டிவி பார்க்க மாட்டார்கள்.நாளிதழ் படிக்க மாட்டார்கள்.வனொலியும் கேட்க மாட்டார்கள்.இண்டெர்நெட்டிலும் உலாவக்கூடாது.
அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உலா வரலாம்.அவ்வளவு தான்.அதனை கொண்டே அவர்கள் தங்கள் செய்தி நிறுவனங்களூக்கு உலக நடப்பு பற்றி செய்தி க‌ண்ணோட்டத்தை வழங்க வேண்டும்.

இவ‌ற்றைத்த‌விர‌ வேறு க‌ட்டுப்பாடுக‌ளும் உண்டு.அந்த‌ ப‌ண்ணை வீட்டில் இருக்கும் க‌ம்ப்யூட்ட‌ர்க‌ளில் ப‌ழைய‌ த‌க‌வ்ல்க‌ள் எதுவும் இல்லாம‌ல் வெறுமையாக்வே இருக்கும். அவ‌ர்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும் செல்போனை கொண்டு இண்டெர்நெட்டில் உலா வ‌ர‌ முடியாது.

டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் இர‌ண்டுமே செய்தி வெளியீட்டில் உத‌வுவ‌தாக‌ பேச‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. அதிலும் குறிப்பாக‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ர் புதிய‌ செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌வும் செய்திக்ளை வெளியிட‌வும் ஏற்ற‌தாக‌ இருப்ப‌தாக‌ புக‌ழ‌ப்ப‌டுகிற‌து.

ஈரான் தேர்த‌ல் பிர‌ச்ச‌னையின் போது டிவிட்ட‌ர் அட‌க்கு முறைக்கு ந‌டுவே செய்தியை வெளிக்கொண‌ர்வ‌தில் பெரும் புர‌ட்சியையே உண்டாக்கிய‌து. ச‌மீப‌த்தில் ஹைதி நில‌ந‌டுக்க‌த்தின் போது கூட‌ டிவிட்ட‌ர் செய்தி வெளியிட்டு சாத‌ன‌மாக‌ பேரூத‌வி புரிந்த‌து.

அதே நேர‌த்தில் டிவிட்ட‌ர் மூல‌ம் பொய் செய்திக‌ளையும் வ‌த‌ந்திக‌ளையும் வெளியிடுவ‌தும் சுலப‌மாக‌ இருக்கிற‌து.என்வே டிவிட்ட‌ர் செய்திக‌ளீன் ந‌ம்ப‌க‌த்த‌ன‌மை குறித்த கேள்விக‌ள் உள்ள‌ன‌.
இந்த‌ பின்ன‌ணியில் டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக்கின் செய்தி வெளியீட்டுத்தன்மையின் வ‌ர‌ம்புக‌ளை ப‌ரிசோதித்து பார்த்து விடுவ‌து என்று தீர்மானித்து தான் இந்த‌ ப‌ரிசோத்னைக்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
அடுத்த் மாத‌ம் முத‌ல் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ இந்த‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் க‌ன‌டா,சுவிஸ்,பிரான்ஸ்,பெல்ஜிய‌ம்,நாடுக‌ளைச்சேர்ந்த‌ வானொலி நிருப‌ர்க‌ள் ப‌ங்கேற்க‌ உள்ள‌ன‌ர். பிரான்சில் இந்த‌ சோத்னை நிக‌ழ‌ உள்ள‌து.

செய்தி வெளியிட்டில் டிவிட்ட‌ரை எந்த‌ அள‌வுக்கு ந‌ம்ப‌லாம் என்று இந்த‌ சோத‌னை உண‌ர்த்தும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இண்டெர்நெட்டில் ம‌னோவ‌சிய‌ ப‌ரிசோத‌னை

உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர்.

கிறிஸ் ஹுயுஜ்ஸ் என்பது அவரது பெயர்.முறைப்படி ம‌னோவசிய கலையை கற்றுக்கொண்டு செயல்பட்டு வருவதாக கூறும் ஹுயுஜ்ஸ் இண்டெர்நெட் மூலம் அதிகமானோரை மனோவசியத்தில் ஆழ்த்தி கின்னஸ் சாதனை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கான முயற்சியில் நாளை(4 ம் தேதி) ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். நாளை உலக மனோவசிய தினம் என்பது கவனிக்க தக்கது.

மனோவ‌சிய‌ம் ப‌ல‌ரும் அறிந்த‌து தான. ம‌னோவ‌சித்துட‌ன் க‌ல‌ந்துள்ள‌ ஒருவித‌ புதிர்த்த‌ன்மை ம‌ற்றும் அச்ச‌ உண‌ர்வை மீறி அந்த‌ க‌லை அறிவிய‌ல் பூர்வ‌மான‌து ம‌ற்றும் ம‌ருத்து ஆயுத‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

இத்த‌கைய‌ ந‌ம்பிக்கை கொண்ட‌ ஹுயுஜ்ஸ் ம‌னோவ‌சிய‌த்தின் ச‌க்தியை உண‌ர்த்துவ‌த‌ற்காக‌ இண்டெர்நெட் வ‌ழியே ம‌னோவ‌சிய‌ம் செய்ய‌ திட்ட‌மிட்டிருக்கிறாராம். இத‌ற்காக‌ சோஷிய‌ல் டிரான்ஸ் என்னும் இணைய‌தள‌த்தையும் அமைத்திருக்கிறார்.

இண்டெர்நெட் வ‌ழியே எப்ப‌டி ம‌னோவ‌சிய‌ம் செய்ய‌ முடியும் என்ற‌ ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.இது சாத்திய‌மே என்று சொல்லும் ஹுயுஜ்ஸ் ஹெட்ஃபோன் மூல‌ம் த‌ன்னிட‌ம் காதுக‌ளை கொடுத்தால் போதும் வ‌சிய‌ம் செய்துவிடுவேன் என்கிறார்.என‌வே ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் ஆகிய‌ ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் இணைய‌த‌ள‌த்தில் உறுப்பின‌ர்க‌ளாக‌ உள்ள‌வ‌ர்க‌ள் இந்த‌ முய‌ற்சியில் ப‌ன்கேற்க‌லாம் என்றும் தெரிவித்துள்ளார்.வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்க‌ள் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் தொட‌ர்பு கொள்ள‌ சிற‌ந்த‌ வ‌ழி என்று கூறும் ஹுயுஜ்ஸ் ம‌னோவ‌சிய‌ம் குறித்த‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌ இவை ஏற்ற‌ சாத‌ன‌மாக‌ இருக்கும் என்றும் ந‌ம்புகிறார்.

ம‌னோவ‌சிய‌ம் என்ற‌துமே சில‌ருக்கு ச‌ந்தேக‌மும் அச்ச‌மும் இருக்க‌லாம்.ஆக‌வே நிக‌ழ்ச்சி துவ‌ங்குவ‌த‌ற்கு முன் ப‌ல்வேறு கேள்விக‌ளூக்கு ப‌தில‌ளிக்க‌வும் திட்ட‌மிட்டிருக்கிறார் ஹூயுஜ்ஸ்.

18வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இதில் ப‌ங்கேற்க‌லாம்.ஆனால் கர்ப்பினிக‌ள் மற்றும் உள‌விய‌லிர‌ச்ச்னை உள்ள‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்க‌ கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத‌னிஅ ஒரு வ‌கையான‌ ச‌மூக‌ ப‌ரிசோத‌னை என்று அவ‌ர் குறிப்பிடுகிறார்.ம்னோவ‌சிய‌த்தின் ஆற்ற‌ல் மீது அள‌வில்லா ந‌ம்பிக்கை கோண்டுள்ள‌ நான் ப‌ல‌ரும் ப‌ல‌க‌லைக‌ழ‌க‌ங்க‌ள் போன்ற‌ இட‌ங்க‌ளில் ந‌டைபெறும் ம்னோவ‌சிய‌ காட்சி நிகழ்ச்சிக‌ளின் போது அதனை அறிமுக‌ம் செய்து கொள்வ‌தை குறிப்பிட்டுவிட்டு அத‌ன் ஆதார‌ குண‌மான‌ ந‌ல்ல‌ க‌ட்ட‌ளைக‌ளின் ச‌க்தியை உண‌ர்த்த‌ விரும்புவ‌தாக‌வும் தெரிவித்துள்ளார்.

காட்சி நிக‌ழ்ச்சிக‌ளை ந‌ட‌த்தும் போது இண்டெர்நெட் மூல‌ம் ஓரு ம‌னோவ‌சிய‌ நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்தினால் என்ன‌ என்றும் கேட்டுள்ளார்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍…………
பின் குறிப்பு;ம‌னோவ‌சியத்தின் மீது என‌க்கு ஈர்ப்பு உண்டென்றாலும் இந்த‌ ப‌திவை த‌க‌வ‌ல் நோக்க‌த்துட‌னே எழுதியுள்ளேன். மேலும் இண்டெர்நெட் எத்த‌கைய‌ வாய்ப்பிக‌ளை எல்லாம் ஏற‌ப்டுத்தி த‌ருகிற‌து என்ப‌தை உண‌ர்த்துவ‌த‌ற்கான‌ உதார‌ண‌மாக‌வே இத‌னை க‌ருதுகிறேன். ம‌ற்ற‌ப‌டி இந்த ம‌னோவ‌சிய‌ ப‌ரிசோத‌னையில் ஈடுப‌ட‌லாம் என்று நான் ப‌ரிந்துரைக்க‌வில்லை. அது அவ‌ர‌வ‌ரின் சொந்த‌ விருப்ப‌ம்.

………

அன்புட‌ன் சிம்ம‌ன்

———

http://www.socialtrance.com/