Tag Archives: இணையதளம்

எல்லாம் இன்பமயம் இணையதளம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம்.

இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் காம்.

மக்களின் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால் எல்லா செயலையும் சுவாரஸ்யமானதாக ஆக்கினால் போதும் என்னும்  எண்ணமே இந்த தளத்திற்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக மாற்றத்திற்கான விஷ்யமாகட்டும் தனி மனிதர்கள் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும் மாற்றத்திற்கான வழி எளிமையானதாகவும் சுவாயானதாகவும் இருக்க வேண்டும் என்கிறது இந்த தளம்.

இதற்கான கருத்துக்களை பரிந்துரைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சுற்றுச்சூழல் நோக்கில் சாலையில் குப்பைகளை வீசாமல் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இருப்பினும் இதனை நடைமுறை படுத்துவது சுலபமாக இருப்பதில்லை.இதற்காக அபராதம் விதிப்பதையோ அல்லது தண்டனை அளிப்பதையோ செய்வதை விட குப்பைத்தொட்டியில் வேண்டாதவற்றை போடுவதை சுவை மிகுந்த செயலாக மாற்றினால் எப்படி இருக்கும்?

அதாவது குப்பைத்தொட்டியில் குப்பைகளை போட்டதுமே விஷேச ஒலிகள் கேட்கத்துவங்கி விடும்.இந்த ஒலியை கேட்க விரும்பியே பலரும் குப்பைகளை தொட்டியில் பொடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல ஆரோக்கிய நோக்கில் லிப்டை பயன்படுத்துவதை விட மாடிபாடிகளில் ஏறிச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.ஆனாலும் பலரும் இதனை பின்பற்றுவதில்லை.மூச்சு வாங்க படிகளில் ஏறிச்செல்வதை விட ஜாலியாக லிப்டில் செல்லவே எல்லோரும் விரும்புகின்றனர்.

மாடிப்படிகளை பாடும் படிகளாக,அதாவது ஒவ்வொரு படியில் கால் வைக்கும் போதும் சங்கீத குறிப்புகள் கேட்கும் படி செய்து விட்டால் படிகளில் ஏறுவதை ரசிக்கும் படி செய்து விடலாம்.பியானோ படிகள் என்று இந்த மாடிபடிகளுக்கு பெயர் சூட்டலாம்.

இது போன்ற யோசனைகள் இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றலாம்.வரவேற்று கருத்து தெரிவிக்கலாம்.மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் உண்மையிலேயே சுவையானதாக இருக்கின்றன.

போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை பொருட்படுத்தாமல் செல்வதை தவிர்க்க,விதிகளை மதித்து நடப்பவர்களின் புகைப்படம் உடனடியாக அருகே உள்ள விளம்பர போர்டில் தோன்றச்செய்தால் எப்படி இருக்கும்?என்று ஒரு யோசனை கேட்கிறது.

அதே போல திரையரங்குகளிலோ சூப்பர் மார்க்கெட்டிலோ வரிசையில் காத்திருக்கும் போது போரடிக்காமல் இருக்க மாயக்கண்ணாடி ஒன்றின் முன் நின்ற படி அதில் தோன்று பந்தை தட்டிக்கொண்டிருக்கும் படி செய்தால் சுவாரஸ்ய்மாகவும் இருக்கும்,அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்தது போலவும் இருக்கும் அல்லவா என்கிறது மற்றொரு யோசனை.

இதைவிட சுவையாக இருக்கிறது பொழுதுபோக்கு சைக்கிள்.கூட்டமாக உள்ள இடங்களில் இந்த சைக்கிளை நிறுத்தி விட வேண்டும்.சைக்கிளோடு அழகிய விசிறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.சைக்கிளை மித்திதால் விசிறிகள் சுழலும்.வேகமாக மித்திதால் அதிக விசிறிகள் சுழலும்.போக்குவரத்து செரிசலில் சிக்கியவர்கள் இந்த சைக்கிளை மிதித்து மகிழ்ந்தால் காத்திருப்பு அலுப்பு போய்விடும்.அப்படியே உடற்பயிற்சி செய்த பலனும் கிடைக்கும்.

இப்படி எந்த வேலைக்கும் சுலபமான வழியை கண்டுபிடிக்கலாம் என்கிறது ஃபன்தியரி தளம்.

வர்த்தக நிறுவனமான வால்ஸ்வாகன் இந்த தளத்தை அமைத்துள்ளது.எதையும் சுவார்ஸ்யமாக்கினால் நடைமுறைக்கு கொண்டு வருவது சுலபமாது என்பதை நிறுவன செயல்பாட்டில் கடைபிடித்து வெற்றி கண்டை அடுத்து இந்த கோட்பாட்டை பிரபலமாக்க இந்த தளத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சுவையான கருத்துக்களும் அவற்றை விளக்கும் அருமையான வீடியோக்களும் உள்ளன.

மன்னிக்கவும் தலைப்புக்கும் இன்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.ஒரு சுவாரஸ்யம் கருதி தான் இந்த தலைப்பு.

————–

http://www.thefuntheory.com/

புகைப்பட யுத்ததிற்கு நீங்க தயாரா?

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.ஆம் இரண்டு புகைப்படங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து அவற்றில் எது சிறந்தது என தீர்மானிக்க உதவுகிறது போட்டோபேட்டில் என்னும் இணைய‌த‌ள‌ம்.இந்த‌ தள‌த்தில் நுழைந்த‌துமே ஏதாவ‌து இர‌ண்டு புகைப்ப‌ட‌ங்க‌ள் க‌ண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.அவ‌ற்றில் உங்க‌ளுக்கு எது பிடித்திருக்கிற‌தோ அதில் கிளிக் செய்ய‌ வேண்டும். அத‌ன் பிற‌கு அடுத்த‌ ஜோடி புகைப்ப‌ட‌த்துக்கு சென்றுவிட‌லாம். முத‌லில் பார்க்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் பிடிக்காவிட்டாலும் அடுத்த‌ ஜோடிக்கு போய்விட‌லாம்.ஒவ்வொரு புகைப்ப‌ட‌த்திற்கும் எத்த‌னை வாக்குக‌ள் என்ப‌து ஆர‌ம்ப‌த்திலேயே மின்னி ம‌றைந்துவிடுகிற‌து.புகைப்ப‌ட‌ங்க‌ள் எத‌ன் அடிப்ப‌டையில் தேர்வு செய்ய‌ப்ப‌ட்டு ஒப்பிட‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌து தெரிய‌வில்லை.ஆனால் வித‌வித‌மான‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்துக்கொண்டே இருக்க‌லாம்.சில உண்மையிலேயே அருமையாக‌ உள்ள‌ன்.புகைப்ப‌ட‌ங்க‌ளை நேசிப்ப‌வ‌ர்க‌ள் வ‌ரிசையாக‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்துக்கொண்டே இருக்க‌லாம்.முத‌ல் ப‌த்து இட‌ம் பிடித்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ளுக்கான‌ ப‌ட்டிய‌லும் உள்ள‌து. நீங்க‌ள் விரும்பினால் உங்க‌ள் ப‌ட‌ங்க‌ளையும் ச‌ம‌ர்பிக்க‌லாம். ஆனால் அத‌ற்கு முன்பாக‌ உறுப்பின‌ராக‌ வேண்டும்.இப்ப‌டு புகைப்ப‌ட‌ங்க‌ளை மோத‌விடுவத‌ன் நோக்க‌ம் என்ன‌வென்று தெரிய‌வில்லை.இத‌ன் ப‌ய‌ன் குறித்தும் ச‌ந்தேக‌மே எழுகிற‌து.ஆனால் சுவார‌ஸ்ய‌மான‌ த‌ள‌ம்.ஆனால் அருமையான புகைப்படங்களையும் அதன் மூலம் நல்ல புகைப்படக்கலைஞர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.சொல்ல‌ப்போனால் இத்த‌கைய‌ த‌ள‌ங்க‌ள் இண்டெர்நெட்டில் தொட‌ர்ந்து வேறு வேறு வ‌டிவில் முளைத்துக்கொண்டே தான் இருக்கின்ற‌ன‌.ஹாட் ஆர் நாட் இணைய‌த‌ள‌ம் துவ‌க்கி வைத்த‌ இணைய‌ மோக‌ம் என்று இத‌னை சொல்ல‌ வேண்டும்.இண்டெர்நெட்டின் ஆர‌ம்ப‌ கால‌த்தில் உத‌ய‌மான‌ இந்த‌ இணைய‌த‌ளம் இணைய‌வாசிக‌ள் த‌ங்க‌ள‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌திவேற்றி இணைய‌வாசிக‌ளின் புகைப்ப‌ட‌த்தோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ள‌ வ‌ழி செய்த‌து.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இவ‌ற்றுக்கு வாக்க‌ளீக்க‌லாம் என்ப‌து சுவார‌ஸ்ய‌மாக‌ அமைந்த‌து. இணைய‌வாசிக‌ளின் த‌ன்முனைப்பை கொம்பு சீவி கொள்ள‌ உத‌வும் இந்த‌ த‌ள‌ம் மிக‌வும் பிர‌ப‌லமாகி அத‌ன் பிற‌கு ம‌வுஸ் குறைந்து போனால
ும் இதே க‌ருத்தாக்க‌த்தில் புதிய‌ மாற்ற‌ங்க‌ளோடு புதிய‌ த‌ள‌ங்க‌ள் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌
.ச‌மீப‌த்திய‌ வ‌ர‌வு போட்டோபேட்டில்   

 

  .மீ

 

http://photobattle.me/

இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் இண்டெர்நெட்டிலும் இமெயிலிலும் உலா வ‌ருவ‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம்.

இந்த ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மாக‌த்தான் இருக்கும்.

ச‌ரி இதே போல‌ உங்க‌ள் தோற்றத்தையும் பார்க்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்? இப்ப‌டி உங்க‌ளின் வ‌ய‌தான புகைப்ப‌ட‌த்தை பார்க்கும் ஆசை இருந்தால் அத‌ற்கான‌ இணைய‌த‌ள‌ம் ஒன்று இருக்கிற‌து.

இன்டுவ‌ன்டி இய‌ர்ஸ் என்னும் அந்த‌ தள‌த்தில் 20 ஆண்டுக‌ள் க‌ழித்து நீங்க‌ள் எப்ப‌டி தோற்ற‌ம் த‌ருவீர்க‌ள் என்று பார்த்து ம‌கிழ‌லாம்.இத‌ற்கு நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் உங்க‌ள் அழ‌கான் புகைப்ப‌ட‌த்தை இந்த‌ த‌ள‌த்தில் ப‌திவேற்றுவ‌து ம‌ட்டும் தான்.

முக‌ உண‌ர்வு தொழில்நுட‌ப‌மான‌ பேசிய‌ல் ரிக‌க‌னைஷேச‌ன் என்று சொல்ல‌ப்ப‌டும் உத்தியை ப‌ய‌ன்ப‌டுத்தி இந்த‌ த‌ள‌ம் செய‌ல்ப‌டுகிற‌து.

20.ஆண்டா 30 ஆண்டா என்ப‌தை தேர்வு செய்து கொள்ள‌லாம். குடிப்ப‌ழ‌க்க‌ம் அல்ல‌து போதை ப‌ழ‌க்க‌ம் உண்டா என்று சொல்ல‌ கேட்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அத‌ற்கு முன் ஆணா பெண்ணா என்று சொல்லிவிட‌ வேண்டும்.

முய‌ன்று பாருங்க‌ள்.

————

http://www.in20years.com/

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்.

 இ புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அந்த வரிசையில் ஆன்ரீட் டாட் காம் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இணைய இ புத்தக நூலகம் என வ‌ர்ணித்துக்கொள்ளும் இந்த தளம் அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் விஷேசமாகவே உள்ளது.முகப்பு பக்கத்தின் மையத்தில் பெஸ்ட் செல்லர் புத்தக‌ங்கள் படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன் கீழே அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட புத்தகங்களீன் பட்டியல் மற்றும் சமீபத்திய சேர்க்கைகள் இடம் பெற்றுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதில் கிளிக் செய்தால்  டவுண்லோடு செய்து கொள்ளலாம். பிரபலாமான் இ புக் வடிவும் உட்பட பி டி எஃப் என பல வடிவங்களில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.ஆன்லைனில் இலவசமாக படிக்கலாம்.டவுண்லோடு செய்ய உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஐபோன் பிரியர்கள் அதற்கேற்ற வடிவிலும் டவுண்லோடு செய்யலாம்.

எழுத்தாள‌ர்க‌ளின் பெய‌ரை குறிப்பிட்டு தேடும் வ‌ச‌தியும் உண்டு. தலைப்பு வகைகளையு குறிப்பிட்டும் தேடலாம்.வாச‌க‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளூம் உட‌ன் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.விம‌ர்சன‌ அறிமுக‌மும் வ‌ழிகாட்டுகிற‌து.

——–

http://www.onread.com/

வார்த்தை விளையாட்டு இணையதள‌ம்.

டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவையை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் ரசனை இருந்தால் மட்டுமே இந்த சேவை செல்லுபடியாகும்.

சேவையின் பெயர்.வேர்டர்.(wordr).டிவிட்டரைப்போன்ற‌ சேவை தான் .ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு டிவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். வேர்டர் அந்த அள‌வுக்கு தாராளம் இல்லை.ஒரே ஒரு வார்த்தை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.ஆனால் அதிகபட்சம் 28 எழுத்துக்கள் கொண்ட வார்த்தையை பயன்படுத்தலாம்.

சும்மா ஜாலியாக துவங்கப்பட்டுள்ள இந்த சேவையில் பகிர்ந்து கொள்ளப்படும் புதுமையான மற்றும் வித்தியாசமான வார்த்தைகளுக்காகவே ஒரு முறைவிஜயம் செய்யலாம்.மற்றபடி பயன்ப்டுத்துவது அவரவர் விருப்பத்தை பொருத்தது.

——-]

link;http://wordr.org/