புகைப்பட தேடியந்திரம் ’பிக்சர்ச்’

4-Eiffelஇணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும். தகவல்களை மட்டும் அல்ல, படங்களை தேடவும் கூகுளுக்கு பழகியவர்களுக்கு இது ஆச்சர்யம் அளிக்கலாம்.

ஆனால், இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஏனெனில், உருவப்படங்களை தேடும் நுட்பத்தை பொருத்தவரை பிக்சர்ச் முன்னோடி தேடியந்திரமாக விளங்குகிறது. புத்தாயிரமாண்டில் செயல்படத்துவங்கிய இந்த தேடியந்திரம் ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் தான் கூகுள் தேடியந்திரமும் தன் பங்கிற்கு உருவப்படங்களை தேடும் வசதியை அறிமுகம் செய்தாலும், பிக்சர்ச், படங்களை தேடுவதற்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இந்த தேடியந்திரத்திற்கான நுட்பத்தை நில்ஸ் ஆண்டர்சன் மற்றும் ராபர்ட் ரிஸ்பர்க் (Nils Andersson and Robert Risberg ) ஆகியோர் உருவாக்கினர்.

உருவப்படங்கள் தேடலில் பிக்சர்ச் மூல தேடியந்திரமாக விளங்குகிறது. அதாவது, இது தனது சொந்த தேடல் நுட்பத்தை பயன்படுத்தி வலை முழுவதும் தேடி படங்களை தொகுத்தளிக்கிறது. இதற்காக பிஎஸ்பாட் எனும் வலை சிலந்தியை பயன்படுத்துகிறது.

300 கோடிக்கும் மேல் படங்களை பட்டியலிட்டு வைத்திருப்பதாக தெரிவிக்கும் இந்த தேடியந்திரத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில், தேவையான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். அதற்கேற்ப படங்கள் பட்டியலிடப்படுகின்றன. தொடர்புடைய தேடல் பதங்கள் பரிந்துரைக்கப்படுவதோடு, தேடலை மேம்படுத்திக்கொள்வதற்கான வசதியும் அளிகப்படுகிறது. வலப்பக்கம் இதற்கான வசதி தோன்றுகிறது. அதன் மூலம், படத்தின் அளவு, வண்ணம் ஆகியவற்றை மாற்றி தேடலாம்.

பிக்சர்ச் படங்களை பட்டியலிடும் போது அவற்றின் தம்நைல் தோற்றத்தையே அடையாளம் காட்டுகிறது. மூல படம் தேவை எனில், அதற்குறிய இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அந்த படங்களுக்கான காப்புரிமை விதிகளும் பொருந்தும்.

இது தவிர, பின்னணியில், இணையவாசிகளால் அதிகம் தேடப்படும் படங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றையும் தேடலுக்கான தூண்டுகோளாக கொள்ளலாம். ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் தேடலாம்.

மற்றொரு முக்கிய அம்சம், பிக்சர்ச் எல்லா தேடலையும், சிறார்களை மனதில் கொண்டு வடிகட்டி விடுகிறது. எனவே ஆபாச படங்கள் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு இல்லை.

பிக்சர்ச் அறிமுகமான காலத்தில் இதன் நுட்பத்தை லைகோஸ், ஆஸ்க்.காம் உள்ளிட்ட தேடியந்திரங்கள் உரிமம் பெற்று பயன்படுத்தின. இன்றும் பல வர்த்தக நிறுவனங்கள் படங்களை தேடும் நுட்பத்திற்கு இதன் சேவையையே நாடுகின்றன.

தேடியந்திர முகவரி: https://www.picsearch.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *