Tag Archives: password

z

பேஸ்புக் நிறுவனரின் வெற்றிப்பாதை

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்டாலும் கூட, அவர் ஹார்வர்ட்டில் படித்தவர் என்பதும், அங்கு படிக்கும் போது உருவாக்கிய பேஸ்புக் இணையதளம் தான் அவரை வெற்றிகரமான இணைய முனைவோராராகவும், இளம் கோடீஸ்வராராகவும் ஆக்கியது எனும் சுருக்கமான விவரமேனும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
எல்லாம் சரி, மார்க்கின் ரெஸ்யூம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

சிக்கலான கேள்வி தான். மார்க் வேலைக்கு செல்லாமலே லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்டதால் அவர் வேலைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திய ரெஸ்யூம் எப்படி இருந்திருக்கும் என அறிய வாய்ப்பில்லை. அதனால் என்ன, மார்க் தனக்கான ரெஸ்யூமை தயார் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை என்ஹான்ஸ்சிவி இணையதளம் உருவாக்கி காட்டியிருக்கிறது.

மார்க் வாழ்க்கை இப்போது ஒரு திறந்த புத்தகம் என்பதால் ,அவருடைய கல்வித்தகுதி, கம்ப்யூட்டர் கோடிங் அனுபவம், பேஸ்புக்கிற்கு முன் அவர் துவக்கிய இணைய சேவைகள் போன்ற விவரங்களை எல்லாம் வைத்துக்கொண்டு அவருக்கான ரெஸ்யூமை உருவாக்கியுள்ளனர்.

கண்களில் கனவுடன் பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் துடிப்புடன் விண்ணப்பிக்கும் தொழில்நுட்ப கில்லாடி ஒருவரில் ரெஸ்யூம் எப்படி நவீனமாக இருக்குமோ அப்படி அமைந்திருக்கிறது.
கல்வித்தகுதி, சாப்ட்வேர் அனுபவம், சாப்ட்வேர் சேவைகள் ஆகிய விவரங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளது என்றால், வலது பக்கத்தில், தொழில்நுட்ப பலங்கள், படித்த புத்தகங்கள், சாதனைகள், அறிந்த மொழிகள் மற்றும் ஈடுபாடுகள் ஆகிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மார்க் கல்லூரியில் உளவியலை தான் மூல பாடமாக படித்தார் எனும் தகவலும், ஆங்கிலம் தவிர சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட ஐந்து மொழிகளை அறிந்திருந்தார் எனும் தகவலும் வியப்பை அளிக்காமல் இல்லை.
பேஸ்புக்கிற்கு முன்னதாக பேஸ்மெஷ் எனும் சமூக வலைதளத்தை உருவாக்கிய விவரமும் அதன் பிறகு கோர்ஸ் மேட்ச் எனும் தளத்தை அமைத்ததும் பலரும் அறியாத தகவல்களாக இருக்கும்.
மார்கிற்கு பிடித்த மேற்கோகள் மற்றும் அவரது வாழ்க்கை பழக்கம் பற்றிய வரைபடமும் கவனத்தை ஈர்க்கின்றன.
மொத்தமாக பார்க்கும் போது இந்த ரெஸ்யூம் சிறப்பாக இருப்பதுடன், பேஸ்புக் நிறுவனரை சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக அறிமுகம் செய்து வைக்கிறது.

பக்கம் பக்கமாக வாழ்க்கை வரலாற்றை படித்துக்கொண்டிருப்பதை விட ஒருவரை அவரது சுய விவரக்கோவை ( ரெஸ்யூம்) மூலம் அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.என்ஹான்ஸ்சிவி இணையதளம் தனது அடிப்படை சேவையான புதிய ரெஸ்யூம் தயாரத்தளித்தலுக்கான புதுமையான விளம்பரமாக தான் இதை உருவாக்கி இருந்தாலும் கூட மிக அழகாக மார்க் ஜக்கர்பர்க் பற்றி இது அறிமுகம் செய்கிறது.
ரெஸ்யூம் கீழே, அதற்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை குறிப்புகள் இதற்கு இன்னும் கூட சுவாரஸ்யம் அளிக்கின்றன. மார்க்கின் தந்தை அவருக்கு அட்டாரி பேசிக் புரோகிராமிங் கற்றுத்தந்தது, பின்னர் பயிற்சியாளர் ஒருவர் மூலமாக தனியே சாப்ட்வேர் திறமை பயிற்றுவித்தது போன்ற விவரங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

மார்க் ஜக்கர்பர் ரெஸ்யூமை காண:http://blog.enhancv.com/the-success-journey-mark-zuckerbergs-pre-facebook-resume/

——
filepizza
தளம் புதிது: எளிதான கோப்பு பகிர்வு

பொருளோ,சேவையோ, இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக பெற முடிவது சிறந்து இல்லையா? எனில் கோப்பு பகிர்வுக்கு மட்டும் ஏன் இடைத்தரகர்களாக செயல்படும் இணையதளங்களை நாட வேண்டும்? இப்படி கேட்கச்செய்யும் பைல்பிட்சா இணையதளம் இடைத்தரகர் இல்லாமல் கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
கோப்புகளை பகிர இதில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் கூட கிடையாது. பைல் பிட்சா தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள ,கோப்பை தேர்வு செய்க பகுதியை கிளிக் செய்து, நாம் அனுப்ப விரும்பும் கோப்பை தேர்வு செய்து கொண்டால் போதுமானது. உடனே நம்முடைய கோப்புக்கு ஒரு இணைய முகவரி உருவாக்கி தரப்படும்.கோப்பை அனுப்புவதற்கு பதில் இந்த முகவரியை மட்டும் அனுப்பி வைத்தால் போதும். கோப்பை பெற விரும்பும் நபர் , இந்த இணைய முகவரியை டைப் செய்து இயக்கினால் அவரது பிரவுசரில் கோப்பு டவுண்லோடு ஆகத்துவங்கிவிடும்- அவ்வளவு தான்.

ஆனால் இதற்கு கோப்பை அனுப்பியவர் தனது பைல் பிட்சா பக்கத்தை மூடாமல் வைத்திருக்க வேண்டும். இந்த முறையின் சிறப்பு என்ன என்றால், கோப்பு உண்மையில் எங்கேயும் செல்லவில்லை. பைல் பிட்சா தளத்திலும் சேமிக்கப்படுவதில்லை. அனுப்புகிறவர் பிரவுசரில் இருந்து பெறுபவர் நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்கிறார். இதற்கான இணைப்பு பாலமாக மட்டுமே இந்த தளம் இருக்கிறது. சகாவிடம் இருந்து சகா ( பியர் டூ பியர்) முறை என இது குறிப்பிடப்படுகிறது. டெப் ஆர்டிசி எனப்படும் நுட்பம் இதன் பின்னே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகளைப்பொருத்தவரை கோப்புகளை அனுப்ப எளிதான வழி என்பது மட்டும் அல்லாமல்,அனுப்படும் கோப்பு இணையத்தில் எங்கும் தங்காமல் இருப்பதால் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் ஒன்று அனுப்புகிறவர் மற்றும் பெறுபவரின் இணைய இணைப்பு வேகத்திற்கு ஏற்ப தான் பரிமாற்றம் இருக்கும்.
கொஞ்சம் பாதுகாப்பான கோப்பு பகிர்வை நாடுபவர்கள் பயன்படுத்திப்பார்க்கலாம்.

இணையதள முகவரி; http://file.pizza/

——-

செயலி புதிது; எனக்கொரு இமெயில்

நமக்கு நாமே திட்டம் போல, நமக்கு நாமே இமெயில் அனுப்பிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? முக்கிய விஷயங்களை மறக்காமல் இருக்க நினைவூட்டல் சேவையாகவும், குறிப்புகளை அனுப்பவும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இமெயில் மீ செயலி இந்த வசதியை அளிக்கிறது.
இந்த செயலி மூலம் ஒருவர் தான் விரும்பும் இமெயில் முகவரிக்கு குறிப்புகளை அனுப்பி வைக்கலாம். செயலியில் ஒரு தட்டு தட்டினால், மெயில் அனுப்புவதற்கான கட்டம் எட்டிப்பார்க்கிறது. அதில் குறிப்பு அல்லது நினைவூட்டல் செய்தியை டைப் செய்து நம்முடைய மெயில் முகவரிக்கு அனுப்பி கொள்ளலாம். வேறு பலவிதங்களிலும் அனுப்பி வைக்கும் வசதி இருக்கிறது. பயனுள்ள சேவை. ஆனால் கட்டண செயலி.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.superlinear.emailme

—-

வாட்ஸ் அப் வால்பேப்பர்

வாட்ஸ் அப் சேவையில் சேட் செய்யும் போது பின்னணியில் தோன்றும் காட்சிகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் தெரியுமா? இந்த வசதியை பயன்படுத்த செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று சாட்ஸ் மற்றும் கால் – வால்பேபர் கட்டளையை தேர்வு செய்து புதிய வால்பேப்பரை பின்னணியில் தோன்ற வைக்கலாம். போனில் உள்ள எந்த கோப்பு படம் அல்லது, வால்பேப்பர் செயலிகளில் படங்களை இந்த முறையை வரவைக்கலாம். அக, உங்கள் வாட்ஸ் அப் அரட்டைகளின் போது பின்னணியும் கூட சுவாரஸ்யமாகவே இருக்கும்.


Password-01
பாஸ்வேர்டு குறிப்புகள்

உலகறிந்த ரகசியம் தான் ,ஆனால் இப்போது மீண்டும் நிருபணமாகி இருக்கிறது. ஆம், உலகின் மோசமான பாஸ்வேர்ட் எண்களின் வரிசை என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கபட்டுள்ளது. அதாவது 123456.
பெரும்பாலான இணையவாசிகள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக 12345, abc123 போன்ற பாஸ்வேர்ட்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாஸ்வேர்ட்கள் பல ஆயிரக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுவதால் பரவலானதாக இருப்பதுடன், தாக்காளர்கள் எளிதில் கைவரிசை காட்டக்கூடியதாகவும் இருக்கிறது. இப்படி தாக்காளர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் திருடப்படக்கூடிய பாஸ்வேர்ட்கள் மோசமான பாஸ்வேர்ட்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் முதல் பத்து இடங்களில் 12345 க்கும் இடமுண்டு, பாஸ்வேர்ட் எனும் பாஸ்வேர்டுக்கும் இடம் உண்டு. ஆம், பாஸ்வேர்டை கடவுச்சொல்லாக பயன்படுத்தும் அப்பாவிகளும் அதிகம் இருக்கின்றனர்.
நிற்க, இணைய உலகில் இப்போது ஆஷ்லே மேடிசன் எனும் தகாத உறவு இணையதளமும், அதன் உறுப்பினர் கணக்குகள் தாக்காளர்களால் களவாடப்பட்ட விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தளத்தில் இருந்து களவாடப்பட்ட பாஸ்வேர்ட்களில் ஆயிரக்கணக்கானவற்றை பரிசீலித்த போது எண்களின் வரிசையை பலர் பாஸ்வேர்டாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
ஆக பாஸ்வேர்ட் விஷயத்தில் இன்னமும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

————-

நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது

பாஸ்வேர்டு பொன்விதி மீறல்கள்

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வருகின்றன. இதற்கு லேட்ட்ஸ்ட் உதாரணம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் டெலி சைன் எனும் மொபைல் சேவை நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு.
இணைவாசிகளில் ஐந்தில் ஒருவர் பாஸ்வேர்டு பொன்விதியை மீறி வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது இவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் பாஸ்வேர்டை மாற்றாமல் இருக்கின்றனர். பாஸ்வேர்டு தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க அவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். இது தான் பாஸ்வேர்டு பயன்பாட்டின் பொன்விதியாக கருதப்படுகிறது. அடிக்கடி மாற்றாமல் இருந்தால் கூட பரவாயில்லை ஆண்டுக்கணக்கில் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது என்பது, தாக்காளர்களின் பணியை எளிதாக்குவதாகும்.
47 சதவீதம் பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பாஸ்வேர்டையேனும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அது மட்டுமா, 73 சதவீத இணைய கணக்குகள் அவற்றுக்கென் பிரத்யேக பாஸ்வேர்டு இல்லாமல் பயன்படுத்தப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு இணைய கணக்கிற்கு பயன்படுத்தும் பாஸ்வேர்டு இன்னொரு இணைய கணக்கை இயக்கவும் பயன்படுத்தும் நிலை பரவலாக இருக்கிறது.
இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் இமெயிலுக்கான பாஸ்வேர்டையே இன்ஸ்டாகிராம் சேவைக்கோ அல்லது வேறு சேவைகளுக்கோ பயன்படுத்துவது. ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது எளிதாக இருக்கலாம், ஆனால் தப்பித்தவறி அந்த பாஸ்வேர்டு களவாடப்பட்டால், அந்த ஒரு இணைய சேவை மட்டும் அல்லாமல் அது பயன்படுத்தப்பட்ட அனைத்து இணைய சேவைகளுக்கான கதவுகளும் தாக்காளர்களுக்கு திறக்கப்பட்டு விடும். எனவே தான் கட்டாயம் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு தேவை என்கின்றனர். ஆனால் இதன் முக்கியத்துவமும் பரவலாக அறியப்படாமல் இருப்பதையும் இந்த ஆய்வு உணர்த்துகிறது.
ஆக முதலில் பாஸ்வேர்டு விழிப்புணர்வு தேவை!


தளம் புதிது; கோப்பு மாற்றும் பூனை!

இணைய பயன்பாட்டில் கோப்புகளை மாற்றும் தேவை அடிக்கடி ஏற்படலாம்.புகைப்பட கோப்போ அல்லது வரி வடிவ கோப்பையோ ஒரு வடிவில் இருந்து இன்னொரு முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் பலகாரணங்களில் பல சூழல்களில் ஏற்படலாம். இது போன்ற நிலையில் கைகொடுக்கும் கோப்பு மாற்று சேவைகளும் இல்லாமல் இல்லை. இந்த சேவைகள் வரிசையில் கன்வெர்ட்கேட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த இணையதளம் குறிப்பிட்ட வடிவிலான கோப்புகளை எச்.டி.எம்.எல், எக்.எம்.எல், பிடிஎப் ,பிஎம்பி, ஜேபெக், ஜிஃப் என நீங்கள் விரும்பும் வடிவில் மாற்றித்தருகிறது. இதற்காக செய்ய வேண்டியதெல்லாம் மாற்ற விரும்பும் கோப்பை பதிவேற்றி விட்டு, மாற்ற விரும்பும் கோப்பை வடிவை தேர்வு செய்து கொள்வது மட்டும் தான்.
வரி வடிவ கோப்பி, வீடியோ ,புகைப்படம் என எந்த வடிவ கோப்பை மாற்றவும் இதை பயன்படுத்தலாம்.
இணையதள முகவரி: http://convertcat.com/

———-
செயலி புதிது; பிக் ஸ்டிச்

புகைப்படங்களை அழகிய புகைப்பட தொகுப்பாக்க ( கொலேஜ்) வழி செய்கிறது பிக் ஸ்டிச் செயலி. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படும் இந்த செயலி மூலம் பல புகைபப்டங்களை ஒன்றாக தைத்து தொகுப்பாக்கலாம். இதற்கான வடிவமைப்பும் ,டெம்ப்லேட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. விரும்பியதை தேர்வு செய்து கொள்ளலாம். டெஸ்க்டாப், பேஸ்புக் என எதிலிருந்தும் படங்களை எடுத்து தொகுக்கலாம். ஸ்மார்ட்போனில் புதிதாக எடுக்கும் புகைப்படங்களையும் பயன்படுத்தலாம்.
இந்த தொகுப்பை எளிதாக் எடிட் செய்யலாம். அப்பயே சமூக வலைப்பரப்பில் பகிரவும் செய்யலாம்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.bigblueclip.picstitch&hl=enபிரவுசர் குறுக்கு வழிகள்

இணையத்தில் உலாவும் போது கைகொடுக்கும் கீபோர்ட் ஷார்ட்கட் எனப்படும் குறுக்கு வழிகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே பிரவுசர் பயன்பாடு தொடர்பான சில எளிய வழிகள்.
CTRL F; இணைய பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட சொல்லுக்கான அர்த்த்தை தேட தனி தேடபெட்டி வசதி.
CTRL D ; இணைய பக்கத்தை புக்மார்க் செய்ய்.
CTRL P; செலக்ட் செய்தவற்றை அச்சிட.
CTRL W: ஜன்னலை (விண்டோ) மூட
CTRL +: சிறியதாக்க ( ஜும் இன் )
CTRL – :பெரியதாக்க (ஜிம் அவுட் )
Alt Home:ஹோம்பேஜுக்கு திரும்ப.
F5: பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை புதுப்பிக்க
CTRL T:புதிய இணைய பக்கத்திற்கான டேப்

கேள்வி பதில் நேரம்

கேள்வி பதில் சேவை என்றால் ரெட்டிட் தளத்தின் ஏ.எம்.ஏ (AMA) சேவை தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் தளத்தின் பின்னே இருக்கும் இணைய சமூகத்தின் முன் ஆஜராக அவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க இந்த கேள்வி பதில் வசதி வழி செய்கிறது. பல பரபலங்கள் இப்படி ரெட்டிட் சமூகம் முன் ஆஜராகி பதில் அளித்திருக்கின்றனர். இவ்வளவு ஏன் அமெரிக்க அதிபர் கூட இதில் பங்கேற்றுள்ளார்.
இப்போது டம்பளர் வலைப்பதிவு சேவையிலும் இதே போன்ற கேள்வி பதில் வசதி அறிமுகமாகியிருக்கிறது. டம்ப்ளர் சமூக வலைப்பின்னல் அம்சங்களை கொண்ட வலைப்பதிவு சேவையாக இருக்கிறது. இதன் பின்னும் வலுவான ஒரு இணைய சமூகம் இருக்கிறது.
இந்த சமூகத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பதில் நேரம் ( ஆன்சர் டைம் ) எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், இணைய பிரபலங்கள் ஆகியோர் இந்த சேவை மூலம் ஆஜராகி பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இணையவாசிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான அருமையான வழியாக இது இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த வசதிக்கான பகுதி ”கேளுங்கள்’ எனும் கோரிக்கையுடன் அருமையான அமைந்துள்ளது.

இணைய முகவரி: https://play.google.com/store/apps/details?id=com.bigblueclip.picstitch&hl=en

———–

jimmy-kimmel-password-798x310

உங்கள் பாஸ்வேர்டு என்ன?

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்கப்படலாம். முதல் காரணம் பற்றி அறிய இந்த பதிவின் இரண்டாம் பாதியை படிக்கவும். இரண்டாம் காரணம், உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலுடன் உங்கள் பாஸ்வேர்டை ஒப்பிட்டு பார்க்க சொல்வதற்காக.  ஆம், இந்த பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டு இருந்தால் முதலில் அதை மாற்றி விடுங்கள்.

ஸ்பிலேஷ் டேட்டா எனும்  நிறுவனம் கடந்த ஆண்டின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டாண்டு வெளியிடப்படும் பட்டியல் என்றாலும் இது மிகவும் முக்கியமானது.  இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் டென்னில் இடம்பெற்றுள்ள பாஸ்வேர்டுகளில் பாஸ்வேர்டு தொடர்பான உளவியலும் ஒளிந்திருக்கிறது.

123456 என்பதும் பாஸ்வேர்டு என்பதுமே இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதாவது இவை தான் அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டும் இவை தாம் முதலில் இருந்தன. ஆக பாஸ்வேர்டு பழக்கம் அதிகம் மாறிவிடவில்லை. அதனால் என்ன என்கிறீர்களா? அந்த அளவுக்கு பயனாளிகளின் இணைய கணக்குகள் எளிதாக தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்பு இருக்கிறது என பொருள்.

பாஸ்வேர்டில் தனித்தன்மை இல்லாமல் பொதுத்தன்மை இருந்தால் என்ன ஆகும்? ஹேக்கர்கள் லட்டு கணக்காக ஊகித்து விடமாட்டார்கள் ? இதை தான் இந்த பிரபலமான பாஸ்வேர்டு மீண்டும் நிருபிக்கிறது.

இந்த பட்டியல் எப்படி தயாரிக்கப்பட்டது தெரியுமா? சமீபத்தில் சோனி நிறுவனம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது போல அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு கொத்து கொத்தாக பாஸ்வேர்டுகள் ஹேக்கர்களால் வெளியிடப்படுவது உண்டல்லவா? அப்படி வெளியிடப்பட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை கொண்டு தான் இந்த பாஸ்வேர்ர்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் பாஸ்வேர்டு இந்த பட்டியலில் இருந்தால் உடனே மாற்றுங்கள். அதே போல , இத்தைகைய பொதுவான பாஸ்வேர்டை வைத்துக்கொள்ளும் வழக்கத்தையும் மாற்றுங்கள்.

ஆனால் இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக எழுத்துக்களும் ,எண்களும் கலந்த பாஸ்வேர்டுகள் பல இதில் உள்ளனவாம். இது போன்ற பாஸ்வேர்டுகள் பாதுகாப்பானவை. நீங்களும் இதே முறையில் முயற்சிக்கலாம். ஆனால் தயவு செய்து நீங்கள் படித்த பள்ளி , பிடித்த விளையாட்டு , பிறந்த நாள் போன்றவற்றை எல்லாம் பாஸ்வேர்டாக வைத்துக்கொண்டு ஹேக்கர்களுக்கு வேலை இல்லாமல் செய்ய வேண்டாம்

இனி, இரண்டாம் பாகத்திற்கு வருவோம். இது பாஸ்வேர்டு தொடர்பாக பார்க்க வேண்டிய வீடியோ;

பாஸ்வேர்டு விழிப்புணர்வை வலியுறுத்தும் வீடியோ!

உங்கள் பாஸ்வேர்டு என்ன என யாராவது கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? பாஸ்வேர்டை யாராவது வெளியே சொல்வார்களா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். இதே கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் நீங்கள் உங்களை அறியாமல் பாஸ்வேர்டை பகிர்ங்காமாக சொல்லிவிடும் வாய்ப்பு இருக்கிறது. சந்தேகமாக இருந்தால் , உங்கள் பாஸ்வேர்டு என்ன ? எனும் யூடியூப் வீடியோவை பார்க்கவும். இந்த வீடியோ உங்களை சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்.

ஏனெனில் இதே கேள்வியை பலரிடம் கேட்டு அவர்களது பாஸ்வேர்டை காமிரா முன் சொல்லவைத்திருக்கிறது இந்த வீடியோ. பலரும் தங்களை அறியாமல் பாஸ்வேர்டை சொல்லிவிட்டு பின்னர் நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிவதை பார்த்தால் ஐய்யோ பாவம் என இருக்கும். ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம் என்பது தான் பாஸ்வேர்டு நிதர்சனம்.

இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கு டிஜிட்டல் பூட்டாக பயன்படும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால் இந்த புரிதலை மீறி பலரும் பாஸ்வேர்டை கேட்டதும் சொல்லிவிடும் தன்மை கொண்டிருக்கின்றனர் என்பது தான் வேதனையான உண்மை.

புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மெல் இதை தனது நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா சைபர் பாதுகாப்பு பற்றியும் ஹேக்கிங் போன்றவற்றை முறியடிப்பது பற்றியும் சமீபத்தில் பேசினார். இதை குறிப்பிட்ட ஜிம்மி கிம்மெல், சைபர் பாதுகாப்பு தொடர்பாக பயனாளிகளி எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை அறிய அவர்கள் பாஸ்வேர்டை கேட்டுப்பார்க்கலாம் என்று கூறிவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பலரிடம் பாஸ்வேர்டை கேட்டு அந்த பதிலை காமிராவில் பதிவு செய்திருக்கிறார்.

ஆச்சர்யப்படும் வகையில் அல்லது அதிர்ச்சி அளிக்கும் வகையில் பலரும் பளிச் என்று தங்கள் பாஸ்வேர்டை சொல்லியிருக்கின்றனர். உதாரணத்திற்கு முதலில் கேட்கப்பட்ட பெண்ணிடம், சைபர் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி இது, உங்கள் பாஸ்வேர்டு என்ன என்று கேட்டதும், அவர் எனது செல்ல நாய் மற்றும் பள்ளி படிப்பு முடித்த ஆண்டு சேர்ந்தது என்று கூறிவிட்டு, அடுத்த கேள்விகளுக்கு நாயின் பெயர் மற்றும் பள்ளி ஆண்டை பதிலாக அளித்திருக்கிறார். அதிலிருந்து அவர் பாஸ்வேர்டை எளிதாக ஊகித்து விடலாமே.

இப்படி தான் பலரும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளனர். பாஸ்வேர்டை எப்படி வெளியே சொல்வது என புத்திசாலித்தனமாக கேட்டவர்கள் கூட, இல்லை உங்களை பாஸ்வேர்டு பலவீனமானதா என சோதிக்க வேண்டும் என கேள்விகளால் கொக்கி போட்டதும் பாஸ்வேர்டை சொல்லியிருக்கின்றனர்.

பாஸ்வேர்டு பற்றிய விழிப்புணர்வு இப்படி தான் இருக்கிறது என புரிய வைக்கும் இந்த நிகழ்ச்சியின் வீடியோ வாட் ஈஸ் யுவர் பாச்ஸ்வேர்டு எனும் பெயரில் யூடியூப்பிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

அநேகமாக இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ப்டலாம். எனவே பாஸ்வேர்டு பற்றி விழிப்புணர்வு பெறுவது அவசியம்.

பாஸ்வேர்டுக்காக விரிக்கப்படும் பொறியில் பலரும் எளிதாக சிக்கி கொள்கின்றனர் என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டும் வரும் விஷயத்தை இந்த வீடியோவும் மெய்பித்துள்ளது.

எனவே எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள். அதோடு பாஸ்வேர்டு போன்ற உலகப்புகழ் பெற்ற பாஸ்வேர்டுகளை பாஸ்வேர்டாக கொள்ளும் வழக்கத்தையும் உடனே மாற்றுங்கள்.

 

 

பாஸ்வேர்டு எச்சரிக்கை வீடியோ: https://www.youtube.com/watch?v=opRMrEfAIiI&list=RDopRMrEfAIiI#t=0

 

———–

 

பாஸ்வேர்டு பற்றிய முந்தைய பதிவுhttp://cybersimman.com/2013/07/26/password-3/

 

fingerprint1

கைரேகையிலும் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்

இணையத்திற்கான எத்தனை பாதுகாப்பான பூட்டை தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர் எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார்.
இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்டு முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிருபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லாவற்றிலுமே ஏதாவது ஒரு குறை இல்லாமல் இல்லை. மேலும் எத்தனை பாதுகாப்பான பாஸ்வேர்டாக இருந்தாலும் சரி அதற்கான கள்ளச்சாவியை தயார் செய்வதில் ஹேக்கர்கள் கில்லாடிகளாக இருக்கின்றனர்.
அதனால் தான், ஒருவரின் தனிப்பட்ட அடையாளமான முகம் அல்லது கைரேகை போன்றவ்ற்றை பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம் என்று சொல்கின்றனர். இது தொடர்பான ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நினைவில் கொள்ள வேண்டிய பஸ்வேர்டை விட , கைரேகை போன்ற பயோமெட்ரிக் முறை பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐபோன் போன்றவற்றில் இந்த பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
எப்படியும் ஒருவரது கைரேகையை இன்னொருவரால் திருடிவிட முடியாது அல்லவா? இந்த நம்பிக்கைக்கு தான் ஹேக்கர்கள் இப்போது வேட்டு வைத்துள்ளனர்.
ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர் கைரேகையை மிக சுலபமாக நக்லெடுக்க முடியும் என உணர்த்தி இணைய உலகிற்கும் பாஸ்வேர்டு வல்லுனர்களுக்கும் ஒருசேர அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
ஹேக்கர்கள் உலகில் ஸ்டார்பக் என அறியப்படும் ஜான் கிறிஸ்லர் எனும் அந்த ஹேக்கர் ஜெர்மனியில் நடைபெற்ற சோஸ் கம்ப்யூட்டர் கிளப் எனும் ஹேக்கர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தனது கண்டுபிடிப்பை பெருமையுடன் அரங்கேற்றியுள்ளார்.
கிறிஸ்லர், ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வான் டே லேயேன் கைரேகையை தான் நகலெடுத்து காட்டியிருக்கிறார். அதிலும் எப்படி தெரியுமா? பொது வெளியில் இருக்கும் அமைச்சரின் புகைப்படங்களை வைத்துக்கொண்டே அவரது கைரேகையை நகலெடுத்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுவது போன்ற புகைப்படங்களை கொண்டே கைரேகையை கிறிஸ்லர் தயார் செய்துவிட்டார். நவீன காமிராக்களின் செயல்திறன் மூலம் வெளிப்படும் புகைப்ப்டத்தின் தரம் தான் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. அதோடு வெரிஃபிங்கர் எனும் சாப்ட்வேரை துணையாக கொண்டு புகைப்படங்களில் தோன்றும் கைகளின் காட்சியை கொண்டே கைரேகையை சுட்டிருக்கிறார்.
இதே போல யாருடைய கைரேகையை வேண்டுமானாலும் திருடி ப்யோமெட்ரிக் பூட்டுகளை ஏமாற்றிவிடலாம் என்று ஹேக்கர்கள் நம்புகின்றனர்.
பயோமெட்ரிக் முறை முற்றிலும் பாதுகாப்பனதல்ல என்பது வல்லுனர்களும் அறிந்தது தான். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடி போன்ற மென்மையான பொருள் மூலம் கைரேகையை நகலெடுப்பது சாத்தியமே என கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் சிக்கலானது.
ஆனால், ஒருவர் பொருட்களை திருடும் அவசியம் இல்லாமல் பொது வெளியில் கிடைக்கும் புகைப்ப்டங்கள் மூலமே ஒருவரின் கைரேகையை தயார் செய்ய முடியும் என்னும் செய்தி கொஞ்சம் கவலைதரக்கூடியது தான்.
அதுமட்டும் அல்ல, இனி உலக தலைவர்கள் எல்லாம் பொது இடங்களில் கிளவுஸ் அணிந்து தான் தோன்ற வேண்டியிருக்கும் என்றும் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஹேக்கர் திமிறாக கூறியுள்ளார். உலகம் எப்படி போகிறது பாருங்கள்!

கைரேகை நகலெடுப்பு பற்றிய ஹேக்கர்கள் விளக்கத்தை அறிய விருப்பமா? http://www.ccc.de/en/updates/2014/ursel

காமிக்ஸ் பிரியர்களுக்கான இணையதளம்!

worms-copyமாஷபில் நான் தொடர்ந்து பார்க்கும், படிக்கும் தொழில்நுட்ப இணையதளம். மாஷபில் தொழில்நுட்ப செய்திகளை மட்டும் முன்வைக்காமால் இணைய போக்கு மற்றும் இணைய கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளையும் அடையாளம் காட்டி வருகிறது. மாஷபிலில் எனக்கு பிடித்த விஷயம், அவ்வப்போது இணையத்தின் அற்புதமான காமிக்ஸ் தளங்களை அடையாள்ம் காட்டுவது தான். காமிக்ஸ் என்றவுடன் மந்திரவாதி மண்டோரக் அல்லது ஸ்பைடர்மேன் ரகம் அல்ல! நிற்க அந்த ரக காமிகஸ்களில் எந்த குறையும் இல்லை. விஷயம் என்ன என்றால், மாஷபிலில் அடையாளம் காட்டப்படுவது இணைய காமிக்ஸ் என்பது தான்.

அதாவது இணைய நிகழ்வுகளையும் தொழில்நுட்ப போக்குகளையும் காமிக்ஸ் வடிவில் வெளிபடுத்தும் கலைஞர்களின் படைப்புகள் . இவற்றை கார்ட்டூனுக்கும், காமிக்சுக்கும் இடையிலான கலைவை என்றும் சொல்லலாம். ஒரு சில கட்டங்களில் இவை மிகவும் நுட்பமாக சொல்ல வந்த விஷயத்தை உணர்த்திவிடும். லேசான நகைச்சுவை, மென்மையான கேலி, கூர்மையான விமர்சனம் என எல்லாம் இவற்றில் உண்டு.

சமீபத்தில் ,மாஷபிலில் பென்குவின்களுக்கான வீடியோ கேம் எனும் தலைப்பில் கிளிக் செய்து போய் பார்த்தால், அது வீடியோகேம் இல்லை. அந்த தலைப்பிலான அழகான காமிஸ் கதை. பென்குவின் பறவை ஒன்று ஆர்டிக் சிமுலேட்டர் விளையாடுவது போன்ற அந்த காமிக் வெகு நுட்பமாக இருக்கிறது. http://www.safelyendangered.com/ எனும் அந்த இணையதளம் முழுவதும் இத்தைகைய காமிக் கதைகளால் நிரம்பியிருக்கிறது.

எளிதான ஆனால் நேர்த்தியான வடிவமைப்புடன் இதில் காமிக்ஸ் சித்திரங்கள் அவை வெளியான தேதிவாரியாக இடம்பெற்றுள்ளன. கிறிஸ் என்பவர் இந்த தளத்தை நடத்தி வருகிறார். காமிக்ஸ் பிரியர்களும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் விஜயம் செய்யலாம்.

இதே போல் பாஸ்வேர்டு திருட்டு தொடர்பான செய்தியை குறுக்கெழுத்து புதிர் வடிவில் காமிக்சாக வெளியிட்டவர் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.: http://cybersimman.wordpress.com/2013/11/20/password-18/

கேலி,கிண்டல்,நகைச்சுவை, நையாண்டி எல்லாம் கலந்த சித்திரக்கதை பாணி படைப்புகளை பேயோன் தளத்திலும் அடிக்கடி பார்த்து ரசித்திருக்கிறேன்.; http://www.writerpayon.com/wc/.
பேயோனின் இணையதளம் இப்போது இன்னும் சிறப்பாக இருக்கிறது : http://www.writerpayon.com/