புதியதொரு தேடியந்திரம்

மாற்று மருத்துவம், மாற்று எரிபொருள், மாற்று தொழில்நுட்பம் என்றெல்லாம் பரவலாக பேசப்படும் அளவுக்கு மாற்று தேடியந்திரம் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லை.
மாற்று தேடியந்திரத்திற்கான முக்கியத்துவத்தையும் பலரும் அறிந்திருப்பதாக தெரியவில்லை. இன்டெர்நெட் உலகில் தேடல் என்றாலே எல்லோருக்கும் கூகுல்தான் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக இன்டெர்நெட்டுக்கு புதியவர்கள் கூகுலை மட்டுமே தேடியந்திரம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர்.
கூகுல் தனது பணியை செவ்வனே செய்து வந்தாலும், கூகுலைத் தவிரவும், நூற்றுக்கணக்கான தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.அவற்றில் சிலவற்றுக்கு மாற்று தேடியந்திரம் என்னும் அந்தஸ்தை கொடுத்து கூகுலுக்கு பதிலாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கலாம்.

இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது டல்சீனியாடாட்காம். கூகுல் போன்ற சாப்ட்வேர் மூலமாக தேடல் முடிவுகளை பட்டியலிடும் தேடியந்திரங்களை விட மனிதர்கள் முனைப்போடு தேடி முடிவுகளை பட்டியலிடும் தேடியந்திரமே சிறந்தது எனும் ஒரு கருத்து நிலவுகிறது. அந்த வகையான தேடியந்திரம்தான் டல்சீனியா.

மார்க் மோரன் என்பவர் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இன்டெர்நெட் யுகத்தின் நூலகம் என்று இந்த தேடியந்திரத்தை அவர் வர்ணிக்கிறார். உங்களுக்கு தேவையான தகவல்களை தேடித்தருவதுதான் எங்கள் பணி என்றும் அவர் பெருமையோடு சொல்கிறார்.

கூகுலும் அதைத்தானே செய்கிறது. அதுவும் சிறப்பாக செய்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்டால் அதற்கு மார்க் அளிக்கும் பதில் இப்படி இருக்கிறது:
“கூகுல் உள்ளிட்ட பெரும்பாலான தேடியந்திரங்கள் நொடிப்பொழுதில் லட்சக்கணக்கான முடிவுகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றன.

ஆனால் பல நேரங்களில் இணையவாசிகள் தேடுவதை இவற்றில் பெற முடியவில்லை. பெரும்பாலானோர் முதல் பக்கத்தில் உள்ள 5 முடிவுகளை பார்த்து விட்டு, தாங்கள் தேடுவது கிடைக்கவில்லை என்று வேறு குறிப்பு சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

இப்படி குறிப்பு சொற்களை மாற்றி பார்த்து விட்டு, தங்களுக்கு தேவையானது கிடைக்கவில்லை என்று வெளியேறி சென்று விடுகின்றனர். இத்தகைய தேடியந்திர களைப்புக்கு பலர் ஆளாகின்றனர்.

இவர்கள் சார்பாக எல்லாம் அவர்கள் தேடும் சரியான முடிவுகளை பட்டிய லிட்டுத்தருவதுதான் எங்களுடைய நோக்கம்’. இணையவாசிகள் பல நேரங்களில் எதிர்பார்த்தது கிடைக்காமல் நொந்து போகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், கூகுலுக்கே முடியாதது புதியதொரு தேடியந்திரத்திற்கு எப்படி சாத்தியம்?

இங்கேதான் டல்சீனியா விசேஷ முறையை பின்பற்றுகிறது என்கிறார் மார்க்.
சாப்ட்வேரை கொண்டு இணைய பக்கங்களை பட்டியலிடாமல், இன்டெர்நெட்டில் நல்ல மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கெல்லாம் கிடைக்கின்றனவோ அந்த தளங்களை எல்லாம் குறித்து வைத்து கொண்டு அவற்றிலிருந்து தேடல் முடிவுகளை தங்கள் படை தொகுத்து தருவதாக இவர் கூறுகிறார்.

தேடியந்திரங்கள் பார்வை படாத எண்ணற்ற தகவல்கள் இன்டெர்நெட்டில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தங்களுடைய படை தேடி வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். இதன் காரணமாக இணையவாசிகளின் தேடலுக்கு பொருத்தமான முடிவுகளை தர முடிவதாக அவர் நம்பிக்கையோடு சொல்கிறார்.

பல நேரங்களில் முதல் சில பக்கங்களுக்கு பிறகு அமைந்துள்ள தேடல் முடிவுகளில்தான் அற்புதமான தகவல்கள் மறைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் என்கிறார் அவர்.

கிட்டத்தட்ட 50 ஆயிரம் மணி நேரத்திற்கு மேல் அவருடைய ஊழியர்கள் இன்டெர்நெட் தகவல் களை திரட்டி ஒழுங்கு படுத்துவதில் செலவிட்டிருக்கின்றனர். ஆகையால் நீங்கள் செலவிட வேண்டிய நேரம் குறைந்துபோய்விட்டதாக அவர் கூறுகிறார்.

பிரதான தேடியந்திரங்கள் கைவிடும் போது டல்சீனியாவை பயன்படுத்தி பார்ப்பது ஒன்றும் தவறில்லை. டல்சீனியாவில் தகவல்களை தேடுவதும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

பிரதானமாக 3 பகுதிகளாக டல்சீனியா சேவை அமைந்திருக்கிறது. முதல் பகுதி இன்டெர்நெட் வழிகாட்டி. இதில்தான் தகவல்களை தேட வேண்டும். இரண்டாவது பகுதி “செய்திக்கு பின்னே’ என்னும் பெயரில் அமைந்துள்ளது.

இன்டெர்நெட்டில் செய்தி தளங்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், பெரும்பாலான செய்தித் தளங்கள் ஒரேவிதமான செய்தி களைத்தான் முன்வைக்கின்றன. இவைகள் கண்ணில்படாமல் சிக்கும் செய்திகளை இந்த பகுதி தொகுத்து தருகிறது.

3வது பகுதி நெட்செட்ரா என்பது. இன்டெர்நெட்டில் சுவையான விஷயங்கள் மற்றும் மனிதர்களை பற்றிய விவரங்களை இந்த பகுதி தொகுத்து தருகிறது. மாற்று தேடியந்திரம் என்ற வகையில் தாராளமாக டல்சீனியாவை முயற்சித்து பார்க்கலாம்
——–
link;
www.dulcinea.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.