அந்தரங்கம் நான் அறிவேன்!

திருவாளர் தீமை!
அமெரிக்காவின் ஜிம் பவுலர் தன்னைத்தானே இப்படித்தான் அழைத்துக் கொள்கிறார். அவர் நடத்தி வரும் இணையதளத்தை அறிந்த வர்கள், இந்த பெயர் பொருத்தமானதே என்று கூறுகின்றனர். ஆனால் இப்படி அழைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவரது நோக்கத்தை நியாயப்படுத்தி விட முடியாது என்றும் தீர்மானமாகச் சொல்கின்றனர்.
.
பவுலரின் இணையதளம் பெரிய அளவில் வெற்றி பெற்று வரும்போதும் கூட எதிர்ப்பாளர்கள் அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. பவுலரோ, விமர்சனங் களைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார்.

இந்த தளம் சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்பது. இதனை தொடங்கும் போதே எனக்குத் தெரியும் என்று ஒப்புக் கொள்ளும் பவுலர், உண்மையில் இன்டெர் நெட்டின் ஆற்றலை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியே தன்னுடையது என்றும் தெம்பாக கூறுகிறார்.

அதற்கேற்பவே விற்பனை பிரதிகளில் பலர் இந்த தளத்தை மிகவும் பயனுள்ளது என்று வரவேற்றுள்ளனர். ஆனால் இன்னும் பலரோ இந்த தளத்தை மனதார சபித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி என்னதான் செய்கிறது இந்த தளம்?

விசிட்டிங் கார்டுகளை எல்லாம் தொகுத்து தருகிறது!
வர்த்தக தொடர்புகளுக்கான விவரங்களை அறிவதற்கான தளம் என்றே பவுலர் இதனை வர்ணிக்கிறார்.

அதாவது வியாபார நிமித்தமாக வர்த்தக நோக்கில் யாரையாவது தொடர்பு கொள்ள விரும்பினால் அவர்களின் அலுவலக முகவரி போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள ஜிக்சா (டீடிஞ்ண்ச்தீ.ஞிணிட்) இதுதான் தளத்தின் பெயர், முகவரி உதவுகிறது.

உதாரணத்திற்கு விற்பனை பிரதிநிதி ஒருவர் தனது நிறுவன பொருள் பற்றி விளக்கி கூற, குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள உயரதிகாரியை சந்திக்க விரும்புகிறார் என வைத்துக் கொள்வோம். அந்த அதிகாரியின் அலுவலக முகவரியை தெரிந்து கொள்ள அவர் அலைபாய்வார் அல்லவா? அந்த விவரத்தை எளிதாக தெரிந்து கொள்வதற்கான இடம்தான் “ஜிக்சா’ காரணம் வர்த்தக தொடர்புகளுக்கான அடையாளமாக கருதப்படும் விசிட்டிங் கார்டுகளின் சங்கமமாக இந்த தளம் திகழ்கிறது.

எனவே ஒருவர் தன்வசம் உள்ள விசிட்டிங் கார்டுகளை இந்த தளத்தில் சமர்ப்பிக்கலாம்அதாவது அதில் உள்ள விவரங்களை இதில் இடம் பெற வைக்கலாம்.

இப்படியாக விசிட்டிங் கார்டுகளுக்கான மாபெரும் தொகுப்பாக இந்த தளம் உருவாகி வருகிறது. ஆகவே விற்பனை பிரதிநிதிகள் யாரேனும் தொடர்பு முகவரியை தேடும் பட்சத்தில் இந்த தளத்தில் தேடிப்பார்த்தாலே தேவையான விவரங்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். சம்பந்தப்பட்ட நபரின் பெயரை கொண்டு தேடும் வசதியும் உண்டு.
(அ) பொதுவாக நிறுவனங்களை குறிப்பிட்டு அதில் பொறுப்பு வகிப்பவர்களையும் தேட முடியும்!

விற்பனை பிரதிநிதிகளுக்கு இந்த வசதி நிச்சயம் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பவுலரே ஒரு காலத்தில் விற்பனை பிரதிநிதியாக இருந்தவர்தான். அதனால்தான் இதற்கான தேவையை உணர்ந்து “ஜிக்சா’ தளத்தை அமைத்திருக்கிறார்.

மேலோட்டமாக பார்த்தால் இதனை நல்ல முயற்சி என்றே சொல்லத் தோன்றும். விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய பிரமுகர்களின் விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள முடிவது நல்லதுதானே என்று தோன்றலாம். ஆனால் இன்னொரு கோணத்தில் இருந்துப் பார்த்தால் இதனால் ஏற்படக் கூடிய விபரீதங்கள் புரியும்.

விசிட்டிங் கார்டு என்பதே தொடர்பு கொள்வதற்கான அறிமுகச்சீட்டுதான் என்றாலும், அதனை யார் யாருக்கு தருவது என்பது, உடமையாளரின் உரிமை அல்லவா? விசிட்டிங் கார்டை ஒருவர் தருகிறார் என்றால் தன்னோடு தொடர்பு கொள்ள அனுமதி வழங்குகிறார் என்றும்தான் பொருள்! அறிமுகம் இல்லாத வர்களுக்கும், அந்நியர் களுக்கும் ஒருவர் விசிட்டிங் கார்டை கொடுக்க வாய்ப்பில்லை.

அப்படியிருக்கும் போது ஒருவரின் விசிட்டிங் கார்டு, உலகமே பார்க்க அம்பலத்தில் ஏற்றப்படுவது ஏற்புடையதுதானா? இது அவருடைய தனிப்பட்ட உரிமை மீதான ஊடுருவல் இல்லையா?

இந்த காரணத்தினால்தான் பெரும்பாலானோர் இந்த தளத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர். அனுமதி இல்லாமல் ஒருவருடைய தொடர்பு முகவரியை அனைவரும் பார்க்க பகிரங்கப்படுத்துவது அநாகரீகமான செயல் என்று கடுங்கோபத்துடன் கூறுகின்றனர்.

பவுலரோ விமர்சனங்கள் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. தொடர்பு முகவரி போன்ற விவரங்களை தொலைபேசி டைரக்டரி உள்ளிட்ட கையேடுகளில் இருந்து எடுக்க முடியும் என்று கூறும் அவர் அந்த தேடலை முறைப்படுத்தி, எளிமையாக்கி தந்திருப்பதாக கூறுகிறார். மேலும் பொது வெளியில் புழங்கக்கூடிய வர்த்தக தொடர்பு விவரங்களை மட்டுமே தமது தளத்தில் இடம் பெற வைப்ப தாகவும்,செல்போன் எண் போன்ற அந்தரங்க தகவல்கள் தவிர்க்கப் படுவதாகவும் கூறுகிறார். அதோடு யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் தங்களைப் பற்றிய விவரம் இருக்கிறதா என்பதை பார்த்து அதில் தவறு இருந்தால் மாற்றங்களை செய்ய முடியும் என்றும் கூறுகிறார். (ஆனால் முழுமையாக தளத்தில் இருந்து நீக்குவது சாத்தியம் இல்லை).

இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் அவரது நோக்கம் முழுவதும் வணிகமயமாக இருப்பதும், தகவல்களை திரட்ட கையாளப்படும் வழிகளும்தான் கவலையை ஏற்படுத்துகின்றன.

இந்த தளத்தை பயன்படுத்த 25 டாலர் கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும். அதன் பிறகு இதன் மூலம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு முகவரிக்கும் ஒரு டாலர் கட்டணம் தர வேண்டும். கட்டணம் தரத் தயாராக இல்லை என்றால் விசிட்டிங் கார்டுகளை சமர்பித்து அதற்கு இணையான புள்ளிகளை பெற்று அந்த புள்ளிகளை கொண்டு முகவரிகளை வாங்கிக் கொள்ளலாம். புள்ளிகள் வேண்டாம் என்றால் கார்டுகளை சமர்பித்தவுடன் அதற்கான கொள்கையை பெற்றுக் கொள்ளலாம்.

இப்படி விசிட்டிங் கார்டு விவரங்களை விற்பதும், வாங்குவதும் வர்த்தக பிரமுகர்களை முகஞ்சுளிக்க வைத்துள்ளது. தனிப்பட்ட உறவின் அடிப்படையில் கொடுக்கும் வர்த்தக தொடர்பு விவரத்தை இப்படி விற்பது நம்பிக்கையை மீறும் இழிவான செயல் அல்லவா? என்றும் கேட்கின்றனர். அது மட்டுமல்ல, முற்றிலும் மற்றவர்களின் முயற்சியின் அடிப்படையில் தகவல்களை சேகரித்துக் கொண்டு அதன் மூலம் வருவாய் ஈட்டுவதும் சரிதானா என்றும் கேட்கின்றனர்.

இந்த கேள்விகளை மீறி “ஜிக்சா’ தளத்தில் லட்சக்கணக்கான வர்த்தக தொடர்பு விவரங்கள் அரங்கேற்றப் பட்டிருக்கிறது என்பதே விஷயம்!
———–
link;
www.jigsaw.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “அந்தரங்கம் நான் அறிவேன்!

  1. Galeel

    மிக்க நன்றி நன்பரே !!!

    Reply
  2. வடுவூர் குமார்

    எப்படியெல்லாம் யோசிக்கிறங்க!!

    Reply
  3. butterflysurya

    Good Business Idea..

    எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா..

    Reply
  4. //டீடிஞ்ண்ச்தீ.ஞிணிட்//

    ஏங்க! இது உங்களுக்கே அநியாயமா தெரியலை 🙁

    Reply
  5. டீடிஞ்ண்ச்தீ.ஞிணிட்

    இது என்னங்க.. ஆங்கிலத்தில் தந்தீங்கன்னா நானும் பார்ப்பேன்ல

    Reply
    1. cybersimman

      it is http://www.jigsaw.com. i have given the link at bottom

      Reply

Leave a Comment

Your email address will not be published.