டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு -2

(நேற்றைய தொடர்ச்சி )
darwin4
டார்வின் புத்தகத்தை வலைப்பதிவு செய்ய முடிவு செய்ததுமே அதற்கான திட்டத்தை விட்பீல்டு வகுத்துக்கொண்டார்.ஒவ்வொரு அத்தியாமாக படித்துவிட்டு, அந்த அனுபவத்தை பதிவு செய்ய தீர்மானித்துக்கொண்டார்.முன்னுரை ம்ற்றும் மொத்தமுள்ள 14 அத்தியாயங்களையும் படித்து பதிவு செய்வது என்பதும், டார்வின் தினத்தன்று இதனை நிறைவு செய்வது என்றும் தீர்மானித்தார். அந்த அத்தியாயத்தில் டார்வின் சொல்லியிருப்பது என்ன, அதனை தான் புரிந்து கொண்ட விதம் போன்ற விஷயங்களை அவர் எழுதினார். நண்பர்களோடு உறையாடுவது போல,படிக்கும் போது தனக்கு தோன்றிய எண்ண்ங்களை பகிர்ந்து கொண்டார். கூடவே டார்வின் சொல்லும் விஷயங்களை புரிந்து கொள்ள உத்வக்கூடிய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டார். விட்பீல்டு ஒன்றும் சாதாரணமான ஆள் இல்லை. பரிணாம உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிணாம கோட்பாடு தொடர்பாக எழுதி வருகிறார்.உயிரியல் நோக்கில் மட்டும் அல்லாமல் தீவிரவாத எதிர்ப்பு முதல் இலக்கிய விமர்சனம் போன்ற விஷயங்களுக்கும் பஎரிணாம கொள்கையை பயன்படுத்துவது குறித்து அவர் எழுதி வந்திருக்கிறார்.

எனவே தனது அனுபவத்தையெல்லாம் திரட்டி , டார்வினை தான் உள்வாங்கிகொண்ட விதம் குறித்து அழகாக‌ எழுதினார். ஒரு நல்லாசிரிய நண்பன் போல ஒவ்வொரு அத்தியாயத்தின் சார‌ம்சத்தையும் , முக்கியத்துவத்தையும் சரளமாக பதிவு செய்தார்.அதே நேரத்தில் தனது கருத்துக்கள் ஒரு வழி பாதையாக நின்றுவிடாமல் , வாசகர்களின் கருத்து பரிமாற்ற‌த்திற்கும் இடமளித்தார்.

அதாவது வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக பதிவு செய்ய வழி செய்தார்.இந்த பின்னூட்ட‌ங்கள் வெறும் சம்பிராதயமாக இல்லாமல் ஒரு உரையாடலாக அமையுமாறும் பார்த்துக்கொண்டார்.

புதிதாக டார்வினை படிப்பவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே படித்தவர்களும் இதில் ப‌ங்கேற்கலாம் , கருத்து தெரிவிக்கலாம் ,தவறுகளை சுட்டிக்காட்டலாம், என அழைப்பு விடுத்தார். வாசகர்கள் அவருடன் சேர்ந்து டார்வினை படிப்பதறகான வழியாக இது அமைந்தது.வாசகர்களின் கருத்துக்களுக்கு தனது பதிலையும் விட்பீல்டு பதிவு செய்தார். இந்த உரையாடல் தன்மை பதிவுகளை உயிரோட்டம் மிக்கதாக மாற்றி தொடர்ந்து படிக்கத்தூண்டியது.

விட்பீல்டின் பதிவுகளும் உயிரோட்டம் மிக்கதாகவே அமைந்தது.முதல் அத்தியாத்தையே அவர் மிகுந்த சுவையோடு துவக்கினார்.
‘இந்த மனிதருக்கு ஒன்றுமெ தெரியவில்லை’ என்னும் வாசகத்தோடு துவங்கிய அந்த பதிவு அதிர்ச்சியை அளித்தாலும் தொடர்ந்து அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் படிக்கத்தூண்டுவதாகவும் இருந்த்து.

(நாளை தொடரும்….)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.

நெட்டும் நடப்பும்

தினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் ! பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/

Archives