அமெரிக்காவின் இசை நகரம்

தமிழகத்தின் திருவையாறை போல அமெரிக்காவின் ஆஸ்டின் இசை மயமான நகரம்.
டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஆஸ்டின், அந்த மாகாணத்தின் 4வது பெரிய நகரம் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவிலேயே 16வது பெரிய நகரம், 2006ல் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றின்படி வாழ்வதற்கேற்ற நகரம்,நாட்டிலேயே பசுமையான நகரம் என்றெல்லாம் ஆஸ்டின் புகழப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் விட ஆஸ்டின் என்றதும் நினைவுக்கு வரும் விஷயம் இந்த நகரத்தின் இசை தன்மைதான். ஆஸ்டின் நகரத்தில் அடியெடுத்து வைத்தீர்கள் என்றால், இசை வானில் மிதக்கத் தொடங்கிவிடுவீர்கள். காரணம் ஆஸ்டினில் தினமும் எங்காவது ஒருஇடத்தில், இசை கச்சேரி நடந்தவண்ணம் இருக்கும். அமெரிக்கர்கள் இசையை ரசிக்கும் விதமே அலாதிதான்.
கேசட், சிடி, எம்.பி.3, இப்போது ஐபாடு ஆகியவற்றில் பாடல்களை கேட்டு ரசிக்கும் அதே நேரத்தில் தங்கள் அபிமான இசைக்குழு நேரில் பாடுவதை கேட்டு ரசிக்கும் வழக்கம் அவர்களின் இசை ரத்தத்தில் கலந்திருக்கிறது. எனவே பிரபலமான குழுக்கள் முதல் இசை உலகில் அடியெடுத்து வைக்கும் புதிய குழுக்கள் வரை அனைத்து இசைக்குழுக்களும், ரசிகர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது உண்டு.
அந்தவகையில் அமெரிக்காவை இசைக்கச்சேரிகளின் தேசம் என்று அழைக்கலாம். அமெரிக்கா இசைக் கச்சேரிகளின் தேசம் என்றால் அதன் தலைநகரம் ஆஸ்டின். அந்த அளவுக்கு ஆஸ்டின் நகரில் நாள்தோறும் இசைக்கச்சேரிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற அமெரிக்க பெரு நகரங்களையெல்லாம் விட, ஆஸ்டினில் நேரடி இசைக்கச்சேரிகள் அதிகம் நடக்கின்றன.
நகர நிர்வாகம் இதனை மிகுந்த பெருமையோடு, நேரடி இசை நிகழ்ச்சியின் தலைநகரம் என்னும் அடைமொழியின் மூலம் குறிப்பிடுகிறது.
ஆஸ்டினில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கென்றே பிரத்யேக வீதிகள் இருப்பதோடு, விமான நிலையம், ஏரிக்கரை, பூங்காக்கள், நகர மண்டபங்கள் என்று எந்த இடத்தில் வேண்டுமானாலும் கச்சேரிகள் நடைபெறும். எல்லா இடங்களிலுமே உணவு விடுதி மற்றும் பார் வசதி உண்டு. பல இசைக்கலைஞர்கள் ஆஸ்டினை தங்கள் சிறந்த ஊர் என்று பெருமை யோடு கூறிக்கொள் கின்றனர். நகர நிர்வாகமும் இசையின் பங்களிப்பை நன்கு உணர்ந்திருக்கிறது. நகரின் பொருளாதாரத்தை இசையே இயக்குகிறது என்பதையும் நகர நிர்வாகம் அறிந்து வைத்திருக்கிறது.
நகரில் இசை நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் இசைக்கடன் வழங்குகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இசை ரசிகர்களை பொறுத்த வரை ஆஸ்டின் இசை விருந்து படைக்கும் நகரம் என்று சொல்ல வேண்டும். ஆனால் அந்த விருந்தை முறையாக பரிமாற வேண்டாமா? அந்த நோக்கத் தோடு தொடங்கப் பட்டிருப்பது தான் ஆஸ்டின்அன்லாக் டாட்காம் இணையதளம்.
ஆஸ்டினில் எண்ணற்ற இசைக் குழுக்களும், பாடகர்களும் இசை நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கும் போது உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்வதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது அல்லவா என்று கரிசனத்தோடு கேட்கும் இந்த தளம், நகரில் நடைபெற்று கொண்டிருக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கான கைகாட்டி மரமாக விளங்குகிறது.
ஆஸ்டின் நகரில் எந்த இடத்தில், எந்த இசைக்குழு நிகழ்ச்சியை நடத்துகிறது என்பதை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆஸ்டினில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளின் பட்டியலை இந்த தளம் வழங்குகிறது.
இந்த பட்டியலை பார்த்து எந்த நாள், எந்த இடத்தில் அபிமான இசைக்குழு நிகழ்ச்சியை நடத்துகிறது என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் தங்களுடைய அபிமானக்குழு எப்பொழு தெல்லாம் இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் புதிய இசைக்குழுக்கள் தங்களுக்கான ரசிகர்களை தேடிக் கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம். அந்த வகையில் இந்த தளம், இசைக்குழுக் களுக்கும், ரசிகர்க ளுக்குமிடை யிலான பாலமாக விளங்குகிறது.
புதிய குழுக்களின் இசை சொக்கவைத்தால், இந்த தளத்தின் மூலமே அந்த குழுவின் பாடல் ஆல்பத்தையும் வாங்கும் வசதி இருக்கிறது.
இசைப்பிரியர்கள் தங்கள் அபிமானக் குழுக்களை பின் தொடர முடிவது போல, தகுதி வாய்ந்த இசைக் குழுக்கள் தங்களுக்கான ரசிகர்களை தேடிக் கொள்ளவும் ஏற்ற இடமாக இந்த தளம் விளங்குகிறது.
—–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “அமெரிக்காவின் இசை நகரம்

  1. நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி..

    Reply

Leave a Comment

Your email address will not be published.