என்ன படம் பார்க்க‌லாம்;வழிகாட்டும் இணையதளம்.

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இருந்தது.இப்போது அந்த நிலை இல்லை.என்ன தான் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து பில்டப் கொடுத்தாலும் பதிவுலக‌ மொழியில் சொல்வதானால் மொக்கை படத்தை யாரையும் பார்க்க வைக்க முடியாது.

படம் பற்றி தயாரிப்பாளரும் விமர்சகர்களும் அஹா ஒஹோ என்று சொன்னாலும் பதிவுலகும் டிவிட்டர் வெளியும் உண்மையான லட்சனத்தை அம்பலமாக்கி விடும்.எனவே ரசிகர்களை முன் போல சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது.
இது ர‌சிக‌ர்க‌ளின் காலம். இதனை புரிந்து கொண்டுள்ள இணைய‌த‌ள‌ம் ப‌ற்றி பார்க்க‌லாம்.ஃபிலிம்கேட்டர் என்னும் அந்த தளத்தை ரசிகர்களுக்கான வழிகாட்டி என்று சொல்லலாம்.
த‌ற்போது வெளியாகியுள்ள‌ ப‌ட‌ங்க‌ளில் என்ன‌ ப‌ட‌த்தை பார்க்க‌லாம் என‌ முடிவு செய்ய‌ உத‌வுவ‌து தான் இந்த‌ தள‌த்தின் சிறப்ப‌ம்ச‌ம் .ஏற்க‌ன‌வே ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் இத‌னை செய்கின்ற‌ன‌.ஆனாலும் ஃபில்ம்கேட்ட‌ர் விஷேசமான‌து.சுவாரஸ்யமானது.

புதிய‌ ப‌ட‌ங்க‌ள், அவ‌ற்றுக்கான‌ விம‌ர்ச‌னங்க‌ள்,ர‌சிக‌ர்க‌ளின் ம‌திப்பீடு,ஆகிய‌வ‌ற்றை ப‌ட்டிய‌லிட்டு அவ‌ற்றின் மூல‌ம் பார்க்க‌ விரும்பும் ப‌ட‌ங‌க்ளை தேர்வு செய்ய‌ உத‌வுவ‌தை தான் பெரும்பாலான‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் செய்து வ‌ருகின்ற‌ன‌.இதை இன்னும் கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மாக‌ ஃபிலிம்கேட்ட‌ர் செய்கிற‌து.

பார்க்க‌ வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ளை தேர்வு செய்ய‌ உத‌வுவ‌தோடு ப‌ட‌ம் பார்ப்ப‌து தொட‌ர்பான‌ அனுப‌வ‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌ வ‌ழி செய்வ‌தே இந்த‌ தள‌த்தின் த‌னிச்சிற‌ப்பு.அந்த‌ வகையில் ர‌சிக‌ர்க‌ளுக்கான‌ முழுமையான‌ த‌ள‌மாக‌ அமைகிற‌து.
இந்த தள‌த்தின் உள்ளே நுழைந்த‌தும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ப‌ட‌ங‌க‌ளின் ப‌ட்டிய‌ல் வ‌ர‌வேற்கிற‌து.(அருகிலேயே விரைவில் வரும் படங்களின் பட்டியலும் உண்டு)அவற்றின் மீது கிளிக் செய்தால் அந்த ப‌ட‌ம் ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ,விம‌ர்சன‌ங்க‌ள் ,ரேட்டிங்,என‌ ச‌கல‌ வித‌மான‌ விவ‌ர‌ங்களையும் வ‌ரிசையாக‌ பார்க்க‌ முடிகிற‌து.ப‌ட‌ம் தொட‌ர்பான‌ டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளும் இட‌ம் பெற்றுள்ள‌து.இவ‌ற்றை ஒரு நோட்ட‌ம் விட்டாலே ப‌ட‌த்தை பார்கலாமா? என‌த்தீர்மானித்து விட‌லாம்.

இப்ப‌டி பார்க்க‌ வேண்டிய‌ ப‌ட‌த்தை முடிவு செய்த‌ பிற‌கு தான் சுவார‌ஸ்யமே ஆர‌ம்ப‌மாகிற‌து.
முத‌லில் ப‌ட‌த்திற்கான‌ உங்க‌ள் விம‌ர்ச‌ன‌க்குறிப்பையும் நீங்க‌ள் எழுத‌லாம்.அத‌னை ம‌திப்பீடு செய்ய‌லாம்.அத‌ன் பிற‌கு அந்த ப‌ட‌த்தை அப்ப‌டியே நீங்க‌ள் பார்த்த ப‌டங்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள‌லாம்.அதாவ‌து உறுப்பினராக சேரும் ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ளூக்கான‌ ப‌ட‌ங்க‌ளின் ப‌ட்டிய‌லை உருவாக்கி கொள்ள‌லாம். அந்த‌ ப‌ட்டிய‌லில் எந்த‌ ப‌ட‌த்தை எப்போது யாரோடு பார்த்தோம் என்ன‌ நினைத்தோம் போன்ற‌ விவ‌ர‌ங்க‌ளை எல்லாம் குறிப்பிட‌லாம்.

பின்னாளில் நாமே கூட‌ இவ‌ற்றை பார்த்து ர‌சிக்கலாம். அல்ல‌து ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி வைக்க‌லாம்.இதே போல‌ ம‌ற்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை பார்த்து ர‌சித்து அவ‌ர்க‌ளோடு தொடர்பு கொண்டு ந‌ட்பை பேண‌லாம்.
பார்த்து ர‌சித்த‌ ப‌ட‌ங‌க்ள் ப‌ற்றி ந‌ண்ப‌ர்க‌ளோடு பேசி ம‌கிழ்வ‌து போல‌ இந்த‌ த‌ள‌ம் மூல‌மும் திரைப்ப‌ட‌ம் தொட‌ர்பான‌ எண்ணங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

என்ன‌ ப‌ட‌ம் பார்க்க‌லாம் என்னும் கேள்வியை அடிப்ப‌டையாக‌ வைத்துக்கொண்டு உங்களுக்கான‌ திரை ந‌ட்பு உல‌கை உருவாக்கி த‌ருகிற‌து இந்த‌ த‌ள‌ம்.
ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளுக்கான‌து என‌ப‌து தான் ஒரே குறை.

 ———

http://www.filmgator.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “என்ன படம் பார்க்க‌லாம்;வழிகாட்டும் இணையதளம்.

  1. Good Info.. rottentomatoes and IMDB are best though.

    Reply

Leave a Comment

Your email address will not be published.