தருவதற்கான இணையதளம் யாகிட்

யாகிட் இணையதளத்தை கொடுப்பதற்கான இணையதளம் என்று சொல்லலாம்.கொடுப்பது என்றால் அள்ளிக்கொடுப்பதோ,கிள்ளிக்கொடுப்பதோ அல்ல.வாரிக்கொடுப்படும் அல்ல;வீசி எறியும் பொருட்களை பிறருக்கு கொடுப்பது!

வீசி எறியும் பொருட்களை பிறருக்கு தருவது கொடுப்பதாகுமா? என்று கேட்கலாம்.வீசி எறியும் பொருட்கள் என்று சொல்வதைவிட வீசி எறிய மனமில்லா பொருட்கள் என்று சொன்னால் இந்த தளத்தின் நோக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

அதாவது நமக்கு தேவையில்லாத பொருட்கள்;ஆனால் வேறு யாருக்கேனும் பயன்படக்கூடிய பொருட்கள்.இத்தகைய பொருட்களை மற்றவர்களுக்கு தருவதற்கான வழியை ஏற்படுத்தி தருவதற்காகவே உருவாக்க்ப்பட்டது இந்த தளம்.

இத்தகைய பொருட்கள் நம் வீட்டில் நிறையவே இருக்கலாம்.பயன்படுத்திய ஆடைகளில் துவங்கி பழைய டிவி,எழுதப்படாத கடந்த ஆண்டு டைரி,மேஜை,நாற்காலி,கண்ணாடி ஜார்,சின்னதாகிவிட்ட லெதர் ஷூ,மின்விசிறி என்று எல்லார் வீட்டிலும் ஏதாவது பொருட்கள் இருக்கவே செய்யும்.

இந்த பொருட்களில் என்ன பிரச்சனை என்றால் இவை நமக்கு தேவையில்லாமல் போகலாம்;ஆனாலும் அவற்றை தூக்கி எறிய மனம் வராது.காரணம் அவை இன்னும் கூட பயன்படுத்தக்கூடியவையாக இருப்பது தான்.இத்தகைய பொருட்களை பரண் மீது தூக்கி வைத்துவிடுவோம்.அல்லது கட்டிலுக்கு அடியே தள்ளிவைப்போம்.எப்போதாவது யாருக்காவது பயன்படக்கூடும் என்ற நம்பிக்கையில்.

சில நேரங்களில் இந்த பொருட்கள் தேவைப்படுபவர்களை பார்த்து அவற்றை கொடுத்து விடுவோம்.அதிலும் அந்த பொருள் தேவைப்படு அதனை வாங்ககூடிய வசதி இல்லாதவர்களாக பார்த்து இவற்றை கொடுத்தால் அவர்கள் மனதார வாழ்த்தி வாங்கி கொள்வார்கள்.

பிரச்சனை என்னவென்றால் எந்த பொருள் யாருக்கு தேவைப்படும் என்று கண்டுபிடிக்க முடியாதது தான்.அதைவிட வேதனை என்னவென்றால் தேவை மிகுந்தவர் இத்தகைய பொருள் யாரிடம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வழி இல்லாதது தான்.

இந்த இடத்தில் தான் இணைப்பு பாலமாக யாகிட் இணையதளம் வருகிறது.பொருட்களை தூக்கி எரியாமல் யாருக்காவது இலவசமாக கொடுக்க நினைத்தால் அதற்கான இணைப்பு பாலமாக விளங்ககூடிய இணையதளமாக யாகிட் அமைந்துள்ளது.

இந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது.அதற்கு காரணம் எளிமை மற்றும் பயன்பாட்டுத்தன்மை.

இந்த தளம் செயல்படும் விதம் மிகவும் எளிதானது.எந்த பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்புகிறோமோ அந்த பொருள் பற்றிய விவரத்தை இந்த தளத்தில் குறிப்பிட வேண்டும்.இதற்காக என்றே தளத்தின் முகப்பு பக்கத்திலேயே சின்ன நோட்பேட் போன்ற கட்டம் உள்ளது.நான் கொடுக்க விரும்புகிறேன் என்னும் வாசகத்தின் தொடர்ச்சியாக அந்த கட்டம் அமைந்துள்ளது.அதில் பொருட்கள் பற்றி விவரித்து விட்டு அடுத்ததாக எந்த நகரத்தில் இருந்து கொடுக்க விரும்புகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும்.

இந்த அம்சம் தான் இந்த தளத்தின் தனித்தன்மையாகவும் இருக்கிறது.காரணம் உறுப்பினர்கள் கொடுக்க முன்வரும் பொருட்களை இருப்பிடம் சார்ந்து இந்த தளம் வரைபடத்தில் பட்டியலிடுகிறது.

உதாரனத்திற்கு சென்னையில் இருந்து தர விரும்பினால் அதனை வரைபடத்தில் சென்னையின் மீது சுட்டிக்காட்டும்.வேலூரில் இருந்து தர விரும்பினால் வேலூரின் மீது சுட்டிக்காட்டும்.

இந்த அம்சம் மிகவும் முக்கியமானது.சென்னைவாசி தர விரும்பும் பொருளை மற்றொரு சென்னை வாசி பெற்று கொள்வதே எளிதாக இருக்கும்.மேலும் பொருட்களை பெற விரும்புகிறவர்கள் அதற்கான போக்குவர்த்து கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் தொலைவில் உள்ள நகரில் இருந்து பொருளை பெறுவது நடைமுறை சாத்தியமானதாக இருக்காது.

எனவே தான் இருப்பிடம் சார்ந்து பொருட்கள் பட்டியலிடப்படுவது சிறந்த அம்சமாக அமைகிறது.அது மட்டும் அல்ல இந்த தளம் இணையவாசிகள் வருகை தரும் போதே அவர்களின் நகரத்தை உணர்ந்து கொண்டு வரைபடத்தில் அவர்களின் நகரத்தை தானாக காண்பிப்பதோடு அங்கு பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை எல்லாமும் காட்டுகிறது.

பொருட்களை பெற விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருளை யாரேனும் தருவதாக கூறியிருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவிக்கலாம்.இவ்வாறு பொருள் வழங்கப்பட்டிருந்தால் யாகிட்டட் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல ஒவ்வொரு உறுப்பினர் தொடர்பாகவும் சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவர் இது வரை வழங்கியுள்ள பொருட்களின் என்ணிக்கை ,பெற்றுள்ள பொருட்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களோடு கொடுப்பதில் அவரது தரவரிசையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தளம் என்பதால் இப்போதைக்கு பட்டியல் பெரிதாக இல்லை.ஆனால் இந்த தளம் மேலும் பிரபலமானால் இந்த பட்டியல் இன்னும் சுவாரஸ்யமாக அமையலாம்.இந்த தளத்தின் செல்வாக்கு வளரும் என்று நம்பலாம்.காரணம் ஆரம்பத்தில் இந்த தளத்திற்கு விஜயம் செய்தால் சென்னையில் இருந்து யாரும் உறுப்பினர் இல்லை நீங்கள் துவக்கி வையுங்களேன் என்னும் அழைப்பை காணலாம்.

ஆனால் இப்போதோ சென்னையில் இருந்து நுழையும் போது தமிழக வரைபடத்தில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு உறுப்பினர்கள் பட்டியலிட்டுள்ள பொருட்களை பார்க்க முடிகிறது.கீபோர்டு ,பழைய புத்த்கம் உள்ளிட்டவற்றை நம்மவர்கள் தருவதாக கூறியுள்ளனர்.ஒரு சிலர் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளனர்.தொலைபேசி மூலம் ஏதாவது சேவை தர விரும்புகின்ரனரா அல்லது இதை விளம்பரமாக பயன்படுத்த முற்படுகின்றனரா என்று தெரியவில்லை.விளம்பர‌ எண்ணம் இந்த தளத்தின் நோக்கத்திற்கே எதிரானது என புரிந்து கொண்டால் நல்லது.

இணையதள முகவரி.http://www.yaakit.com/

(யாகிட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.இது அதன் திருத்தப்பட்ட கூடுதல் தகவல்கள் கொண்ட பதிவு)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.