மலிவு விலை விமான டிகெட்டை தேட உதவும் இணையதளம்.

இண்டெர்நெட்டின் அருங்குணங்களில் ஒன்று சில நேரங்களில் அது உங்களை ராஜா போல உணர வைக்கும் என்பது தான்.அதாவது நீங்கள் ஒரு கட்டளையிட்டால் போதும் அதனை செய்து முடிக்க ஆயிரம் பேரை அது தேடித்தரும்.

இந்த விசுவாசத்திற்கு பதிலாக நீங்கள் சிறு தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றாலும் உங்கள் சார்பில் ஒரு வேலையை சிறப்பாக முடித்து தர பலர் தயாராக இருப்பது உங்கள் கையில் அதிகாரம் தரப்பட்டிருப்பது போன்ற உணர்வைத்தரும்.

இத்தகைய உணர்வைத்தரும் பல இணையதளங்கள் இருக்கின்றன.இப்போதைக்கு பிளைட்பாக்ஸ் இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.

பிளைட்பாக்ஸ் விமான சேவை தளங்களில் அடுத்த புதுமையாக அறிமுகமாகியிருக்கும் தளம்.நீங்கள் செல்லும் இடத்திற்கான மிக குறைந்த விலையிலான விமான டிக்கெட்டை தேடித்தருவது தான் இந்த தளத்தின் நோக்கம்.இதற்காக நூற்றுக்கணக்கான விமான டிக்கெட் நிபுணர்களை உங்களுக்கு சேவை செய்யவும் வைக்கிறது.

அதிலும் எப்படி?உங்களுக்கு சிறந்த முடிவை தேடித்தர இந்த நிபுணர்களை நான் நீ என போட்டி போடவும் வைக்கிறது.

சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா?

பயனுள்ள சேவையும் கூட!

விமான பயணத்திற்கான டிக்கெட்டை இருந்த இடத்திலிருந்தே பதிவு செய்து கொள்ள எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.இவற்றில் பல தளங்கள் மலிவு விலை டிக்கெட்டையும் தேடித்தருகின்றன.

பல் வேறு விமான சேவைகளின் கட்டண் பட்டியலை முன்வைத்து ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்வதில் துவங்கி மலிவு விலை டிக்கெட்டை கண்டு பிடித்து தருவதற்கான சூத்திரத்தை கண்டு பிடித்து வைத்திருக்கிறோம் என்று சொல்வது வரை பல் வேறு வழிகளை இந்த தளங்கள் பின்பற்றி வருகின்றன.

கொஞ்சம் மெனக்கெட்டால் நீங்கள் குறைந்த விலையிலான விமான டிக்கெட்டை கண்டு பிடித்து விடலாம்.இணையத்தில் அதற்கான வழிகள் அநேகம் இருக்கின்றன.இதில் கில்லாடிகளும் இருக்கின்றனர்.

நிற்க எல்லோருக்குமே இதில் அனுபவமோ நிபுணத்துவமோ இருக்கும் என்று சொல்வதற்கில்லை.அது மட்டும் அல்ல,இந்த வகையான தேடலுக்கு நேரமும் பொருமையும் இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை.

இந்த இடத்தில் தான் பிளைட் பாக்ஸ் தளம் வருகிறது.

விமான பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு குறைந்த விலையிலான விமான டிக்கெட்டை அதற்கான நிபுணர்கள் மூலம் தேடித்தருவதாக இந்த தளம் சொல்கிறது.அதாவது உங்கள் சார்பில் விமான டிக்கெட் தேடல் நிபுணர்கள் இணையத்தில் உலாவி மிக குறைந்த விலையிலான டிக்கெட்டை எந்த விமான நிறுவனம் வழங்குகிறது என கண்டு பிடித்து தருகின்றனர்.

இந்த சேவைக்காக ஒரு கட்டணத்தை மட்டும் நீங்கள் குறிப்பிட்டால் போதுமானது நிபுணர்கள் உங்களுக்காக களத்தில் இறங்கி விடுவார்கள்.

எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு எந்த வகையான விமான பயணத்திற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டு இதற்கான பதிலுக்கு நீங்கள் தரத்தயாராக உள்ள கட்டணத்தை குறிப்பிட்டால் நிபுணர்கள் உங்கள் சார்பில் போட்டி போட்டுக்கொண்டு தேடலில் ஈடுபட்டு மலிவான டிக்கெட் வழங்கும் விமான சேவையை பரிந்துரைக்கின்றனர்.

அந்த பதில் திருப்தி அளித்தால் மட்டுமே நீங்கள் குறிப்பிட்ட கட்டணத்தை தந்தால் போதுமானது.இல்லை என்றால் கட்டணம் திரும்ப வழஙக்ப்படும்.ஆனால் அநேகமாக தேடல் முடிவுகள் உங்கள் பயண செலவை கணிசமாக குறைக்கும் வகையில் குறைந்த விலையிலான டிக்கெட்டை க்ண்டு பிடித்து தரக்கூடியது என்பதால் கட்டணம் ஒரு பொருட்டல்ல தான்.

யோசித்து பாருங்கள் ஊருக்கு போகிறேன் என்று சொன்னவுடன் யார் யாரோ உங்களுக்காக மெனக்கெட்டு குறைந்த விலையிலான டிக்கெட்டை தேடித்தருவது சிறந்த விஷயம் தானே.

ஒரு விதத்தில் பார்த்தால் கூட்டத்தின் திறமையை பயன்படுத்தி கொள்ளும் கிரவுட் சோர்சிங் வகை தளம் தான் இதுவும்.ஆனால் இந்த வகை தளங்களில் சேவையை பயன்படுத்தி கொள்ளவோ அல்லது சேவையை வழக்கவோ எல்லோருக்கும் பொதுவாக வாய்ப்பு வழங்கப்படும்.நீங்கள் வாடிக்கையாளராகவும் பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது நிபுணராகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் பீளைட் பாக்ஸ் தளத்தை பொருத்த வரை நிபுணர்களாகும் வாய்ப்பு அத்தனை வெளீப்படையாக இல்லை.உங்களுக்கான நிபுணர்கள் தேடித்தருவார்கள் என்று சொல்கிறதே தவிர அந்த நிபுணர்கள் யார்,அவர்கள் எப்ப்டி தேர்வு செய்யப்படுகின்றனர் என்று இந்த தளம் சொல்லவில்லை.

அதனால் என்ன ,நாம் சொன்னால் குறைந்த விலையிலான விமான பயண டிக்கெட்டை கண்டு பிடித்து தர தயாராக இருக்கின்றனர்.அதில் திறமையும் பெற்றுருக்கின்றனர்.அது போதுமே.

சர்வதேச விமான பயணங்களின் போது இந்த சேவையை பயன்படுத்தி பாருங்கள்.அல்லது உங்கள் நண்பர்கள் வெளிநாடு செல்லும் போது பரிந்துரையுங்கள் .

இணையதள முகவரி;http://flightfox.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மலிவு விலை விமான டிகெட்டை தேட உதவும் இணையதளம்.

  1. SENGOTTUVEL K

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *