இலவச இ புத்தகங்கள்.

Image
இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற்கான தளங்களும் இருக்கின்றன.

ஆனால் புத்தம் புதிய இ புக்குகள் சிலவும் கூட இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன என்பது பலரும் அறியாத விஷயம்.அதுவும் பெஸ்ட் செல்லர் ரக புத்தகங்கள்.இப்படி இலவசமாக இபுக் வடிவில் கிடைக்கும் புத்தகங்களை பட்டிய‌லிடுகிறது ஹன்ட்ரட் ஜீரோஸ் இணையதளம்.

இ காமர்ஸ் தளங்களின் மகாராஜாவான அமேசான் டாட் காம் தளத்தில் அவப்போது பெஸ்ட் செல்லர் ரக புத்தகங்கள் இலவச இபுக்காக வாசகர்களுக்கு வழங்கப்படுகின்றன.கிட்டத்தட்ட லக்கி பிரைஸ் போல தான் இவை.

பெஸ்ட் செல்லர் ரக புத்தகங்களை கட்டனம் செலுத்தாமல் படிக்க முடிவது அருமையான விஷயம் தானே.அமேசானில் இருக்கும் இந்த வசதி பலரும் அறிந்திராதது.அது மட்டும் அல்ல இந்த வசதிய அறிந்தவர்களுக்கே கூட இப்போது என்ன புத்தகம் இலவசமாக கிடைக்கிறது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.அதற்கு அமேசான் தளத்தையே கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருக வேண்டும்.

அந்த வேலையை தான் இணையவாசிகள் சார்பில் மேற்கொண்டு அமேசானில் இலவசமாக கிடைக்கும் சமீபத்திய புத்தகங்களை ஹன்ட்ரட் ஜீரோஸ் தளம் பட்டியலிட்டு தருகிறது.புதிய புத்தகங்கள முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதோடு அவற்றை பல்வேறு வகைகளின் அடிப்படையிலும் பிரித்து தருகிறது.

இபுக்குகளை கம்ப்யூட்டரிலும் படிக்கலாம்,அமேசானின் இபுக் வாசிப்பு சாதனமான கின்டில் வாயிலாகவும் படிக்கலாம்.இலவசமாக தான்.
———–

http://hundredzeros.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.