உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மாற்ற வேண்டுமா?

ku-xlarge

உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா? இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா? இல்லை என்றால் இப்போதே யோசியுங்கள்!.அப்படியே இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக , நான் எனது பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? என்னும் தளத்திற்கு சென்று பாருங்கள்.

மேலே சொன்ன கேள்விக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.அதாவது உங்கள் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? என்னும் கேள்விக்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை இந்த தளம் பதிலாக சொல்கிறது.

இதன் பொருள் உங்கள் பாஸ்வேர்டு திருட்டு அல்லது ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறதா?என்று கண்டறிந்து சொல்கிறது.

நம்மூர் நாளிதழ்களை பிரிந்தால் பூட்டிய வீட்டில் பத்து பவுன் திருட்டு போன்ற செய்திகள் இடம் பெற்றிருப்பது போல , இப்போதெல்லாம் இணைய உலகில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது ஹேக்கர்கள் தாக்குதல், சில லட்சம் பாஸ்வேர்டுகள் திருட்டு எனும் வகையிலான செய்தியை படிக்க நேர்கிறது.

டிவிட்டர்,இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் என பல இணைய நிறுவங்களின் கணக்குகள் இப்படி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன. இனியும் ஆளாகலாம்.வக்கி கணக்குகள், கிரிடிட் கார்ட்டு எண்களும் களவாடப்படுகின்றன.

இது உலகின் எங்கே ஒரு மூலையில் நடக்கும் சம்பவம் என நாம் அலட்சியம் செய்வதற்கில்லை.இப்படி திருடப்பட்ட கணக்குகளில் நம்முடைய இமெயிலும் கூட இருக்கலாம்.அல்லது,நம்முடைய இமெயில் இந்த இன்னலுக்கு ஆளாகவில்லை,பாதுகாப்பாக தான் இருக்கிறது என்று உறுதி செய்து கொள்வது நல்லது தானே!.

இந்த நிம்மதியை தான், ஷுட் ஐ சேஞ் மை பாஸ்வேர்டு தளம் அளிக்கிறது. இந்த தளத்தில் உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்தால், அதை பரிசிலித்து தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறாதா இல்லையா என்று பதில் சொல்கிறது. இணைய தாக்குதலுக்கு இலக்கான லட்சக்கணக்கான இமெயில் முகவரி பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து பதில் இந்ப பதிலை அளிக்கிறது. இமெயில் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக சொல்லப்பட்டால் உடனடியாக பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி பாஸ்வேர்டை பரிசோதிப்பது இலவச சேவை .ஆனால், கட்டணம் செலுத்தினால் ஓயாமல் உங்கள் இமெயில் முகவ‌ரியை கண்காணித்து அது தாக்குதலுக்கு இலக்ககானால் உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்யப்படுகிறது.

இணையதள முகவ‌ரி:https://shouldichangemypassword.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மாற்ற வேண்டுமா?

  1. அன்பின் சிம்மன் – 10 டாலர்தான் – பயனுள்ள தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      ‍ஆம் நண்பரே,வருங்காலத்தில் மின் கட்டணம்,பால் கட்டணம் போல இது போன்ற சேவைகளுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டீருக்கலாம். இணைய பாதுக்காப்பிற்காக இந்த செலவு அவசியமே.

      அன்புடன் சிம்மன்.

      Reply

Leave a Comment

Your email address will not be published.