உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதா?

பலமானதா ? பலவீனமானதா ? அறிவது எப்படி? இந்த கேள்விக்கு தமிழ் நாளிதழ்களில் கொலை ,கொள்ளை பற்றிய செய்திகளை போல இணைய உலகில் இப்போது பாஸ்வேர்டு களவு பற்றிய செய்திகள் தினம் தினம் திடுக்கிட வைக்கின்றன. தாக்காளர்கள் பிரபல இணைய நிறுவனங்களின் பாஸ்வேர்டுகளை லட்சக்கணக்கில் கைப்பற்றி அவற்றை ஆன்லைனில் வீசி விட்டு செல்கின்றனர். இந்த செய்திகளை பார்த்ததும் நம்ம பாஸ்வேர்டு எப்படி? என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். சந்தேகம் வரவேண்டும்! ஏனெனில் பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் சொல்லப்படும் பலவீனமான வழிமுறைகளையே நீங்களும் பின்பற்றியிருக்கலாம்.
எது எப்படியோ உங்கள் பாஸ்வேர்டு பதில் அளிக்க சுவாரஸ்யமான பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. டெலிபாத்வேர்ட்ஸ் எனும் அந்த தளத்தில் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யத்துவங்க வேண்டும். நீங்கள் முதல் எழுத்தௌ டைப் செய்த்துமே அடுத்த எழுத்து என்னவாக இருக்கும் என்பதை இந்த தளம் யூகித்து சொல்லும். அடுத்தடுத்த எழுத்துக்களையும் யூகித்து சொல்லும். இப்படியாக மூன்று முறை யூகித்து இது தான் உங்கள் பாஸ்வேர்டு என்று இந்த தளம் சொல்லும். அந்த பாஸ்வேர்டு தவறாக இருந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளலாம். காரணம் உங்கள் பாஸ்வேர்டு மற்றவர்களால் எளிதில் யூகிக்க முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது. இதற்கு மாறாக இந்த தளம் டைப் செய்யும் போதே உங்கள் பாஸ்வேர்டை யூகித்திருத்நால்…..அப்படி என்றால் முதலில் உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள். மற்றவர்கள் யூகித்து கண்டுபிடித்து விடும் அளவுக்கு உங்கள் பாஸ்வேர்டு பலவீனமாக இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
இந்த பாஸ்வேர்டு பரிசோதனையை ஆய்வு நோக்கில் மைக்ரோசாப்ட் உருவாக்கியுள்ளது. உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானது தானா என பரிசோதித்து பார்க்கலாம். ஆனால் ஆய்வு நோக்கத்திற்காக நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டை இந்த தளம் சேமித்து கொள்கிறது.
இணையதள முகவரி;https://telepathwords.research.microsoft.com/
பாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றி மேலும் அறிய விரும்பினால் ஏற்கனவே பல பதிவுகளை எழுதியுள்ளேன். பார்க்கவும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதா?

  1. அன்பின் சிம்மன்

    பயனுள்ள தகவல் தான் – சோதித்துப் பார்த்தேன் – பயன் படுத்தும் பாஸ்வேடைப் பதிவு செய்தேன் – 8 எழுத்துகள் பாஸ் மார்க் – 6 எழுத்துகள் ஃபெயில் மார்க் – ஆக மொத்தம் எனது பாஸ்வேர்ட் 14 எழுத்துகள் – மற்றவர்கள் யூகிக்க இயலாது – ஆனால் இப் பாஸ்வேர்ட் தளத்தில் சேமிக்கப் படுகிறது – அதுதான் பயம் – பார்க்கலாம்.நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      ஆய்வு நோக்கில் தான் சேமிக்கின்றனர். எனவே அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் இணையத்த்தில் எதிலும் எச்சரிக்கையுடனே இருப்பதே நல்லது.

      அனுபுடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.