ட்ரோன்கள் மூலம் டீ டெலிவரி

மாஸ்டர் ஒரு டீ போடுங்கள் என சொல்லும் நிலை மாறி ,ட்ரோனோ ஒரு டீ கொண்டு வா என சொல்லும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் தெரியுமா?இப்படி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் ட்ரோன்கள் வீட்டு வாசலில் வந்திறங்கி சிந்தாமல் சிதறாமல் டீயை சப்ளை செய்துவிட்டு போகலாம்.

இது போன்ற அறிவியல் புனைகதை சங்கதிகள் நிஜவாழ்வில் சாத்தியமாவதற்கு அச்சாரமாக சீன நிறுவனமான அலிபாபா , ட்ரோன்கள் மூலம் டீயை டெலிவரி செய்யும் சேவையை சோதனை செய்து பார்ப்பதாக அறிவித்துள்ளது. இணைய உலகில் இந்த செய்தி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ட்ரோன்கள் என்று சொல்லப்படும் ஆல் இல்லா விமானம் உளவு விமானங்களாக பெருமளவு பயன்படுத்தப்பட்டு வந்த நிலை மாறி பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படலாம் எனும் நிலை வந்திருக்கிறது. குறிப்பாக பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியம் பற்றி தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

உலகின் முன்னணி இ-காம்ர்ஸ் நிறுவனமான அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே இது தொடர்பான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டு இது போன்ற சேவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அமேசான் பிரைம் ஏர் எனப்படும் அந்த சேவை குறித்த் ஆய்வில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தேடியந்திர நிறுவனம் கூகிள் சார்பிலும் இது போன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவை தவிர சின்னதும் பெரிதுமாக சில நிறுவனஙக்ள் ட்ரோன் டெலிவரியை முயன்று வருகின்றன்.
ட்ரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்ய தொழில்நுட்ப சாத்தியங்கள் இருந்தாலும் இவை ந்டைமுறைக்கு வர பல சிக்கல்கள் உள்ளன. அவற்றில் பாதுகாப்பு தொடர்பான கவலை பிரதானமானது. நடந்து செல்லும் போது தலைக்கு மேல் ட்ரோன்கள் விர்ரென்று பறந்து போனால் எப்படி இருக்கும்?

இது தொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சீனாவின் அமேசான் என்று வர்ணிக்கப்படும் அந்நாட்டு மின்வணிக ஜாம்பவனான அலிபாபா நிறுவனம் சமீபத்தில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி சேவையை சோதனை செய்து பார்ப்பதாக அறிவித்துள்ளது.

அலிபாபாவின் பிரிவான டவாபோ நிறுவனம் மூலம் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சோதனையிம் படி தலைநகர் பெய்ஜிங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த ட்ரோன் டெலிவரி வழங்கப்படுகிறது. சீனாவில் பிரபலமாக இருக்கும் இஞ்சி டீ அழகாக பேக் செய்யப்பட்டு இப்படி ட்ரோனில் வழங்கபடுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சோதனை 3 நாட்களுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் ட்ரோன் டெலிவரி நடைமுறைக்கு வரலாம் என்பதற்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன் ட்ரோன் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டும்.

அலிபாபா ட்ரோன் டெலிவரி வீடியோ; https://www.youtube.com/watch?v=5ce2VvZI63g

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.