காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்

இதைவிட சுவாரஸ்யமான அலாரம் சேவை இருக்க முடியாது என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு புதுமையான துயிலெழுப்பும் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த அலாரம் செயலி உங்களை நீங்களே செல்ஃபி படம் எடுத்துக்கொள்வதன் மூலம் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளச்செய்கிறது.

காலையில் தூக்கத்தில் இருந்து விழிக்க நினைவூட்டும் அலாரம் சேவைகளுக்கு ஸ்மார்ட்போன் யுகத்தில் பஞ்சமே கிடையாது.ஆனாலும் என்ன தூக்க கலக்கத்துடன் அலாரம் அலறலை அமைதியாக்கி விட்டு இன்னும் கொஞ்சம் தூங்கும் பழக்கம் தான் பலருக்கும் இருக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் வரை விடாமல் அடித்துக்கொண்டிருக்கும் துயிலெழுப்பும் செயலிகளும் கூட அநேகம் இருக்கின்றன.

இந்த வரிசையில் துயெலுழும் பழக்கத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக்கும் வகையில் புதுமையான செயலி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது.

ஸ்னேப் மீ அப் எனும் இந்த செயலி ஸ்மார்ட்போன் யுகத்து பழக்கமான செல்ஃபி எடுப்பதை காலையில் துயிலெழ அழகாக பயன்படுத்திக்கொள்கிறது.

மற்ற அலாரம் செயலிகளை போலவே இதிலும் காலையில் துயிலெழுப்புவதற்கான நேரத்தி செட் செய்து கொள்ளலாம். மறுநாள் காலையில் குறிபிட்ட நேரம் வந்ததும் அலாரம் ஒலியெழுப்பி துயிலெழுப்பும்.அதன் பின்னர் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.இதற்குள் செயலி போனின் காமிராவை ஆன் செய்திருக்கும். அலாரம் ஒலியை நிறுத்த வேண்டும் என்றால் ஸ்மார்ட்போனை கையில் எடுத்து அதை நோக்கி முகம் பார்த்து அழகாக (!) ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மின்விளைக்கையும் ஆன் செய்தாக வேண்டும். உங்கள் புகைப்படத்தை பார்த்த பின் தான் செயலி அமைதியாகும்.

எப்படி, போனை கையில் எடுத்து காமிராவை பார்த்து போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் தூக்கம் தானாக கலைந்து போகத்தானே செய்யும். அதை தான் இந்த செயலி செய்கிறது.
அலாரம் ஒலியை விரும்பிய வகையில் அமைத்துக்கொள்ளலாம். அதோடு நீங்கள் தினமும் எடுக்கும் செயலிகளை மை ஸ்னேப்ஸ் என் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். மற்றவர்களுடன் ஷேர் செய்யலாம். ( அதிகாலை நேர செல்ஃபியை ஷேர் செய்வது கொஞ்சம் விஷப்பரிட்சை தான்). எனவே புன்னகையுடன் படம் எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பினால் தினமும் உங்களை விழிக்கச்செய்ய உங்கள் செல்ஃபி காலரியில் இருந்தே ஒரு புகைப்படம் காண்பிக்கப்படும் வசதியும் இருக்கிறது.

செல்ஃபி மோகத்தை அழகாக பயன்படுத்திக்கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படுகிறது. அடுத்த கட்டமாக ஐபோனுக்கும் வரலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.dehun.snapmeup&hl=en

——–

தினமணி நெட்டும் நடப்பும் தொடரில் ,இமெயில் சார்ந்த கேள்விகள் மற்றும் சிந்தனைகளை மையமாக கொண்ட கட்டுரை: http://www.dinamani.com/junction/nettum-nadappum/2015/05/15/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article2814106.ece

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.