பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஹாஷ்டேக்

isis-anchalee-engineerஹாஷ்டேகுகள் இணைய ஆயுதம் தான் சந்தேகமில்லை. இணையத்தில் குறிப்பிட்ட தலைப்பிலான விஷயத்தின் மீது கவனத்தை ஈர்க்க விரும்பினால் அதற்காக என்று ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி உலாவ விடலாம். பல ஹாஷ்டேகுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில ஹாஷ்டேகுகள் தானாக உருவாகின்றன. இப்படி உருவான ஒரு ஹாஷ்டேக் இணையத்தில் பெண் பொறியாளர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக மாறியிருக்கிறது.தொழில்நுட்ப உலகில் பெண்களின் இடம் பற்றிய விவாத்த்தையும் சூடு பிடிக்க வைத்திருக்கிறது.
ஐ லுக் லைக் ஆன் இஞ்சினியர் எனும் அந்த ஹாஷ்டேகும் ஒரு பெண் பொறியாளரால் உருவாக்கப்பட்டது தான் என்றாலும் அது திட்டமிடாமல் நடந்திருக்கிறது என்பது தான் விஷயம்.

ஐசிஸ் வென்கர் எனும் அந்த இளம் பொறியாளர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒன் லாஜிக் எனும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அந்த நிறுவனம் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இந்த விளம்பரத்திற்காக மாடல்களை பயன்படுத்தாமல் நிறுவன ஊழியர்கள் சிலரையே பயன்படுத்தியது. இவர்களில் ஐசிசும் ஒருவர். மூக்கு கண்ணாடி அணிந்த தோற்றத்துடன் ஒன் லாகின் பொறியாளர் எனும் வாசகம் பொறித்த டி ஷர்ட்டுடன் ஐசிஸ் விளம்பரத்திற்காக போஸ் கொடுத்திருந்தார்.
இந்த விளம்பரம் பற்றி அவர் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை;ஆனால் அவரே சற்றும் எதிர்பாராத வகையில் இந்த விளம்பரம் பரவலாக கவனத்தை ஈர்த்து பலரையும் பேச வைத்தது. பேஸ்புக், டிவிட்டர் என இணையவெளி முழுவதும் ஐசிஸ் புகைப்படம் பகிரப்பட்டு விவாதம் சூடு பிடித்தது.

ஐசிஸ் அழகாக இருந்தது தான் இந்த விவாதத்திற்கு காரணமாக அமைந்தது. சிலருக்கு ஒரு பொறியாளர் இத்தனை அழகாக இருப்பாரா?என்ற வியப்பு என்றால் இன்னும் சிலருக்கு இவர் பொறியாளர் தானா என்ற சந்தேகம் உண்டானது. அவர் பொறியாளராக இருக்க முடியாது, விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்ட மாடலாக இருக்க வேண்டும் என்று பலரும் சந்தேகித்தனர். இவற்றை எல்லாம் கருத்துக்களாக பகிர்ந்து கொள்ளவும் செய்தனர்.

ஐசிஸ் இந்த புகழ் வெளிச்சத்தை எதிர்பார்க்கவும் இல்லை; விரும்பவும் இல்லை. அதிலும் விவாதத்தின் கருப்பொருள் அவரை கவலையில் ஆழ்த்தியது. பெண் பொறியாளர்களை பழக்கப்பட்ட ஒரு வரையறைக்குள் அடைப்பதை அவர் விரும்பவில்லை.இயல்பாகவே தனிமையை விரும்பும் தன்மை கொண்டவர் தன்னைப்பற்றி இணையத்தில் எல்லோரும் பேசுவதை ரசிக்கவில்லை என்றாலும், இந்த கவனத்தை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தார்.

மீடியம் வலைப்பதிவு சேவையில் இந்த விஷயம் பற்றி விளக்கி நீள் பதிவு ஒன்றை எழுதினார். தான் பணியாற்றும் நிறுவனத்திற்காக அவசரகோலத்தில் எடுக்கப்பட்ட ஒரு விளம்பர பட்த்தில் தோன்றியது தனக்கு இந்த அளவுக்கு கவனத்தை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்தவர், பெரும்பாலானோர் நல்லவிதமாக கருத்து தெரிவித்திருந்தாலும் சிலர் எதிர்மறையான விதமாக கருத்து கூறியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார். பெண் பொறியாளர்கள் பற்றிய ஒரு சார்பு நிலை கொண்ட கருத்துக்களை பணியிடத்திலே கூட சில முறை எதிர்கொண்டுள்ளதை குறிப்பிட்டிருந்தார். இப்படி கருத்து தெரிவித்தவர்கள் மற்றபடி நல்லவர்களாக இருந்தாலும் ஒரு ஆண் எனும் வகையில் அவர்கள் மனதில் பெண்கள் பற்றி சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட எண்ணங்கள் இருந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த காரணத்தினாலேயே தனக்கு கிடைத்துள்ள கவனத்தை ஆக்கப்பூர்வமான விவாதத்தை ஏற்படுத்த பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக கூறி, ஐ லுக் லைக் ஆன் இஞ்சினியர் எனும் ஹாஷ்டேகை உருவாக்கி இருந்தார். பெண் பொறியாளர்கள் பற்றிய கட்டமைப்புகளையும், மாயைகளையும் தகர்க்கும் வகையில் இந்த ஹாஷ்டேகுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். தொழில்நுட்ப துறையில் உள்ள பெண்கள் பலரும் இந்த ஹாஷ்டேகை பயன்படுத்தி தங்கள் பணி அனுபவம் மற்றும் ஆற்றல் பற்றிய கருத்துக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகி, இந்த ஹாஷ்டேக் மிகவும் பிரபலமானது. நாசாவில் பணியாற்றும் பெண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

தொழில்நுட்ப உலகின் பெண்களின் நிலை பற்றிய ஆக்கப்பூர்வமான விவாத்தை உண்டாக்கும் இணைய இயக்கமாக இந்த ஹாஷ்டேக் உருவாகி இருக்கிறது. இதே பெயரில் ஒரு இணையதளத்தையும் ஐசிஸ் அமைத்திருக்கிறார். இந்த விவாதத்தை மேலும் வளர்த்து பெண்கள் மத்தியில் தொழில்நுட்ப ஆர்வத்தை அதிகரிக்க செய்ய இது உதவும் என அவர் நம்புகிறார்.

தளம் புதிது; கோப்புக்கு ஒரு தூது

டிராப் பாக்ஸ் சேவையை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். கோப்புகளை சேமிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் டிராப் பாக்ஸ் கணக்கை பயன்படுத்தியும் வரலாம். டிராப் பாக்ஸ் போலவே கூகுள் டிரைவ் உள்ளிட்ட சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போது டிராப் பாக்சிற்கே ஒரு டிராப் பாக்ஸ் சேவை அறிமுகமாகி இருக்கிறது தெரியுமா? பலூன்.இயோ தான் அந்த சேவை.
பலூன்.இயோ இணையதளம் என்ன செய்கிறது என்றால் டிராப் பாக்ஸ் கணக்கு இல்லாதவர்களிடம் இருந்து கூட கோப்புகளை பெற்றுக்கொள்ள வழி செய்கிறது. இதற்காக பலூன்.இயோ தளத்தில் நுழைந்து ஒரு பிரத்யேக இணைய முகவரியை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அந்த முகவரியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் இருந்து கோப்புகளை கோரலாம். கோப்புகளை அந்த முகவரியில் சமர்பித்தால் போதும், அதை உருவாக்கியவர் டிராப் பாக்ஸ் கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும். குழுவாக செயல்படுவதில் துவங்கி, திருமண நிகழ்ச்சிக்கான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளச்செய்வது வரை பல விதங்களில் இந்த பலூனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணையதள முகவரி; https://balloon.io/

செயலி அறிமுகம்; தாகம் தணிக்கும் செயலி

செயலிகளில் தான் எத்தனை வகை; பில் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் செயலிகளும் கூட இருக்கின்றன. இப்போது சரியான அளவு தண்ணீர் குடிப்பதை நினைவூட்ட ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா? இதற்காக என்றே வாட்டர் யுவர் பாடி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படு இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுக்கிறது. முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்பிக்க வேண்டும். அதனடைப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை தீர்மானித்துக்கொள்கிறது. தண்ணீர் குடிக்க பயன்படும் கிளாசின் அளவு, நாள் முழுவதும் நினைவூட்ட வேண்டுமா போன்ற விவரங்களை தெரிவித்து நமக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். காலையில் 8 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்றால், அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்த செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.northpark.drinkwater&hl=en
firefox

பிரவுசர் குறிப்பு

இணையத்தில் உலாவ நீங்கள் எந்த பிரவுசரை பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி, இரண்டு விஷயங்களை உறுதியாக சொல்லாம். ஒன்று பெரும்பாலான நேரங்களில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இணையதள பக்கங்களை (டேப்கள்) திறந்து வைத்திருக்கலாம். இன்னொன்று பல நேரங்களில் இந்த பக்கங்களை அனைத்தையும் அப்படியே சேமித்து வைக்கவும் விரும்பலாம். ஆம் எனில் உங்கள் பிரவுசரிலேயே அதற்கான எளிதான வழி இருக்கிறது. நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்துபவர் என்றால் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இணைய பக்கங்கள் அனைத்தையும் சேமிக்க விரும்பினால் , ஏதேனும் ஒரு பக்கத்தில் மவுசில் வலப்பக்கம் கிளிக் செய்தால் வரும் மெனு கட்டங்களில் புக்மார்க் ஆல் டேப்ஸ் என்பதை கிளிக் செய்தால் அனைத்து பக்கங்களும் சேமிக்கப்பட்டு விடும். இதற்கென தனிப்பெயரும் கொடுக்கலாம். குரோம் பிரவுசரிலும் இதே போன்ற வசதி இருக்கிறது. சேமித்த போல்டரில்; நடுவே கிளிக் செய்தால் சேமித்த பக்கங்கள் அனைத்தும் பிரவுசரில் வரிசையாக எட்டிபார்க்கும். பிரவுசரில் உள்ள , பார்த்து கொண்டிருந்த பக்கங்களை மீண்டும் வர வைக்கும் ரெஸ்டோர் வசதியை விட இது எளிமையானது.

எரிக்காமல் எரிக்க; யூடியூப் ஆச்சர்யம்

யூடியூப் தளத்தில் வீடியோக்கள் லட்சகனக்கில் கொட்டிக்கிடக்கின்றன. இவை பெரும்பாலும் பொழுதுபோக்கு ரகம் என்றாலும் அருமையான கல்வி வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதே போல விஞ்ஞான விளக்கங்களை சுவாரஸ்யமாக அளிக்கும் யூடியூப் சேனல்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றில் ஒன்றான பியர்ட்ட் சயன்ஸ் கய் சேனலில் அன்மையில் டாலர் நோட்டை எரிப்பது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது . டாலர் நோட்டை எரிப்பது என்றால் உண்மையில் எரிப்பது அல்ல; அது தீப்பற்றிக்கொள்ளும் ஆனால் எரியாது. ( இல்லை என்றால் இது சட்ட விரோத செயல்) . அது எப்படி தீப்பற்றியும் நோட்டு எரியாமல் இருக்கும்? அதற்கான விளக்கத்தை இந்த வீடியோ வழங்குவது தான் சுவாரஸ்யம். 91 சதவித ஐசோபிரோபைல் ஆல்கஹாலில் அதே அளவில் நீரை ஊற்றி அந்த கரைசைலில் டாலர் நோட்டை மூழ்க வைத்து எடுத்து பற்ற வைக்க வேண்டும். இப்போது சுற்றி தீப்பற்றிக்கொள்ளும்; ஆனால் நோட்டி எரியாது. ஏனெனில் ஆல்கஹால் தீயில் உண்டாகும் வெப்பத்தை அதில் கலந்திருக்கும் நீர் உறிஞ்சுக்கொண்டுவிடும் என்பது தான் காரணம்.
ஆனால் அளவு சரியில்லை என்றால் ரிஸ்காகிவிடும்.எனவே எச்சரிக்கை தேவை!
‘வீடியோ விளக்கத்தை காண: Bearded Science Guy

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.