நீங்கள் இன்ஸ்டாகிராம் கணவரா?

instagram-husband-3-hed-2015ஆண்டின் இறுதியில் வெளியான அந்த வீடியோ யூடியூப்பில் ஹிட்களை அள்ளி 2015-ன் வெற்றிகரமான வீடியோக்களில் ஒன்றாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இணையவெளி முழுவதும் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ ரசித்து மகிழக்கூடியதாக இருப்பதோடு நம் காலத்து இணைய கலாச்சாரத்தை புன்னகைக்க வைக்ககூடியதாகவும் இருக்கிறது. அதோடு,நமது பாலின பார்வையின் சார்பு நிலை தொடர்பான விவாத்ததையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு வெற்றிகரமான வீடியோவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் கணவர் (Instagram Husband ) எனும் அந்த வீடியோ விலா நோக சிரிக்க வைக்கும் வழக்கமான யூடியூப் வீடியோக்களில் இருந்து மாறுபட்டது.இது பார்க்கும் போதே மெலிதாக புன்னகைக்க வைக்கும்; இன்ஸ்டாகிராம் மோகம் இந்த அளவுக்கு இருக்கிறதா? என்று யோசிக்கவும் வைக்கும்.

இன்ஸ்டாகிராம் பிரபலமான புகைப்பட பகிர்வு செயலி.வீடியோவுக்கு எப்படி யூடியூப்போ அப்படி தான் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராம்!
ஸ்மார்ட்போன் தலைமுறையில் பலருக்கு செல்பீ என்படும் சுயபடங்களை எடுத்து தள்ளும் மோகம் இருப்பது போலவே,பலருக்கும் பார்க்கும் காட்சிகளை எல்லாம் கிளிக் செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் பழக்கமும் இருக்கிறது.

இப்படி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வதன் மூலம் ஆயிரக்கணக்கிலும், ஏன் லட்சக்கணக்கிலும் பாலோயர்களை பெற்று இணைய நட்சத்திரங்களானவர் பலர் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் உணவு கலைஞர்கள், யோகா நட்சத்திரங்கள், இன்ஸ்டாகிராம் சுட்டிகள் … என இதற்கு நீளமான பட்டியல் இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் தங்களையும், தங்கள் கலையையும் வெளிப்படுத்தி புகழ் வெளிச்சம் பெற்றவர்கள் தவிர பல சாமானியர்கள் தங்கள் வாழ்க்கை காட்சிகளை எல்லாம் கிளிக் செய்து புகைப்படங்களாக பகிரும் பழக்கம் கொண்டுள்ளனர். இவர்கள் எதிர்பார்ப்பது, சிறிது கவனமும் நிறைய லைக்குகளும் தான்.

இதில் இன்ஸ்டாகிராம் பெண்களும் இருக்கின்றனர். அவர்கள் பின்னே இன்ஸ்டாகிராம் கணவர்களும் இருக்கின்றனர். இவர்களை தான் இந்த வீடியோவும் அடையாளம் காட்டுகிறது.

மூன்று நிமிடத்த்திற்கும் குறைவாக ஓடக்கூடிய இந்த வீடியோவில், ஆண் மகன் ஒருவர் “எனது பெயர் டிரே, நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணவர்,என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். வரிசையாக மேலும் இரண்டு ஆண்கள் அறிமுகம் ஆகி இன்ஸ்டாகிராம் கணவர்களாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர் -அதாவது, தத்தமது மனைவிகள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதற்காக அவர்களை ஸ்மார்ட்போனில் படம் பிடிக்க வேண்டியிருக்கும் கடமை இருப்பதை குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு அழகான இன்ஸ்கிராம் பெண்ணுக்கும் பின்னும் என்னைப்போல ஒருவர் இருக்கிறார்.நான் அடிப்படையில் ஒரு சுவர் போல் .. என்கிறார் ஒருவர். இன்னொருவரோ,மனைவியின் புகைப்படங்களுக்கு இடம் வேண்டும் என்பதால் என்னுடைய செல்போனில் உள்ள எல்லா செயலிகளையும் நீக்கிவிட்டேன் என்கிறார். மனைவிக்கு நான் செல்பி ஸ்டிக் போல என்று ஒருவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.

இப்படியாக மூன்று கணவர்களும் தங்கள் மனைவியை இன்ஸ்டாகிராம் புகைப்படம் எடுக்க படும் அவஸ்தையை நயமாக பகிர்ந்து கொள்கிறார். அதிலும் ஒருவரது மனைவி, தன்னை வாகாக படம் எடுப்பதற்காக கணவரிடம் இன்னும் கொஞ்சம் மேலே செல்லுங்கள் என்றும் கூறிய படி வீட்டின் கூறை வரை துரத்துகிறார்.
இப்படி வீடியோ முழுவதும், மனைவியை நேர்த்தியான இன்ஸ்டாகிராம் புகைப்படம் எடுப்பதற்காக கணவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் காட்சிகளாக விரிகின்றன. பெண்களின் இன்ஸ்டாகிராம் மோகததை கணவர்கள் பார்வையில் விவரிக்கும் இந்த தன்மை தான் இந்த வீடியோவை யூடியூப்பில் வைரலாக்கி இணையம் முழுவதும் பேச வைத்துள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் தி மிஸ்டிரி ஹவர்ஸ் எனும் பெயரில் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தி வரும் குழு இந்த வீடியோவை உருவாக்கி இருக்கிறது. நிகழ்ச்சியை நடத்திவரும் ஜெப் ஹவுட்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த வீடியோவை உருவாக்கினார். இதில் அவரது மனைவியும் நடித்துள்ளார்.
உண்மையில் மனைவியின் இன்ஸ்டாகிராம் பழக்கத்தின் மிகை வடிவமே இந்த வீடியோ என்கிறார் அவர்.நண்பர்கள் வட்டத்திலும் பலருக்கு இந்த அனுபவம் இருப்பதாக சொல்கிறார். இந்த பழக்கத்தை கிண்டலடிக்கும் எண்ணம் பற்றி நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருந்த போது எல்லோராலும் இதை புரிந்து கொள்ள முடியும் எனும் நம்பிக்கை ஏற்பட்டதால் வீடியோ தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் ஆட்வீக் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட போது, இது இந்த அளவுக்கு பெரும் வரவேற்பை பெறும் என நினைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் முதல் சில மணிநேரங்களில் சில ஆயிரம் ஹிட்களை பெற்ற வீடியோ அதன் பிறகு பல ஆயிரங்களை கடந்து, லட்சங்களையும் கடந்திருக்கிறது. இந்த பேட்டிக்கு முன் 20 லட்சம் ஹிட்களாக இருந்தது, பேட்டிக்கு பின் 25 லட்சத்தை கடந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த அளவு புகழை ஹவுட்டன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட, இதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள தவறவில்லை. வீடியோ வைரலாக பரவிய நிலையிலேயே சூட்டோடு சூட்டாக இன்ஸ்டாகிராம் கணவர் எனும் பெயரிலேயே இணையதளம் ஒன்றை அமைத்து, இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டதோடு, இதே போல சோக கதை கொண்ட உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் கணவர்கள் தங்கள் அனுபவத்தையும்,புகைப்படத்தையும் இங்கு வெளியிடலாம் என தெரிவித்துள்ளார்.
நீங்கள் இன்ஸ்டாகிராம் கணவரா எனில் உங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் என கோரும் இந்த இணையதளமும் பிரபலமாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் மோகத்தை மிக நயமாக லேசான அங்கத்த்துடன் கிண்டல் செய்துள்ளதாக இந்த வீடியோ பாராட்டப்பட்டாலும், ஒரு சிலர் இதன் பின்னே பாலின சார்பு ஒளிந்திருப்பதாகவும் குறை கூறியுள்ளனர். ஆண்களை மையமாக வைத்துக்கொண்டு பெண்கள் புகைபப்ட மோகம் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் கூறியுள்ளார். ஆண்களை பெண்கள் பயன்பாட்டு பொருளாக கருதுவதை இது உணர்த்துகிறது என இன்னொருவர் கூறியுள்ளார். ஆனால் ஹவுட்டன் , இந்த வீடியோ மூலம் இப்படி எந்த கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை என்றும் , இதை பார்க்கும் பலரும் இது நான் தான் என்றோ , அல்லது இது என் கணவர் என்றோ உணர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ பற்றி செய்தி வெளியிட்டுள்ள பெண்களுக்கான இணையதளமான ஜெஸிபெல் தளமும் இந்த விவாத்தை சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதே போலவே இசைக்கலைஞர்களின் மனைவிகள் படும் பாட்டை நகைச்சுவையாக விவரிக்கும் தி பேண்ட் வைப் வலைப்பதிவையும் ( http://thebandwifeblog.com/) சுட்டிக்காட்டியிருக்கிறது கவனிக்க வேண்டிய விஷயம்.

இன்ஸ்டாகிராம் கணவர் வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=fFzKi-o4rHw

இன்ஸ்டாகிராம்கணவர் இணைதளம்: http://instagramhusband.com/

———

தளம் புதிது; ஆண்டு கண்ணோட்ட வீடியோ

புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் விடைபெறும் ஆண்டை திரும்பி பார்க்கும் எண்ணமும் ஏற்படலாம். அந்த வகையில் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் கண்ணோட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நீங்களும் இது போல ஆண்டு கண்ணோட்ட்த்தை வீடியோவாக உருவாக்கி கொள்ள வழி செய்கிறது விடியோ (http://wideo.co/en/ ) இணையதளம். இதில் உங்கள் வசம் உள்ள புகைப்படங்களை பதிவேற்றி அவற்றைக்கொண்டு ஆண்டு கண்ணோட்ட வீடியோவை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது இந்த தளத்தின் காலரியில் இருந்து புகைப்படங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புகைப்படத்துடனும் அனிமேஷன் வடிவில் வாசகங்களையும் சேர்க்க முடியும். தனிநபர்கள் ,சிறிய நிறுவனங்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் இந்த சேவையை பயன்படுத்தி தங்களுக்கான ஆண்டு கண்ணோட்டத்தை உருவாக்கி கொள்ளலாம்.இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் எளிதாக பகிரவும் செய்யலாம்.

செயலி புதிது; இ-புக் தேடல்

நிச்சயம் செல்பீ தெரிந்திருக்கும். இப்போது ஷெல்பீயையும் தெரிந்து கொள்ளுங்கள். ஷெல்பி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்காக அறிமுகமாகி இருக்கும் புதிய செயலி. புத்தக பிரியர்களுக்கானது. ஒருவரிடம் உள்ள புத்தகத்தின் இ-புக் வடிவை தேடி கண்டுபிடிக்க இந்த செயலி வழி செய்கிறது. இதற்காக கையில் உள்ள புத்தகத்தை இந்த செயலி மூலம் புகைப்படம் ( இது தான் ஷெல்பீ) எடுத்து பதிவேற்றினால் போதும். அதன் மின்னூல் வடிவை தேடித்தருவதுடன், அதை இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி படிக்க உதவுகிறது. அது மட்டும் அல்ல, இப்படி புத்தகங்களை புகைப்படம் எடுப்பதன் மூலம் அவற்றுக்கான டிஜிட்டல் புத்தக அலமாரியையும் உருவாக்கி கொள்ளலாம். அவற்றை சக பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அடுத்து படிப்பதற்கான புதிய புத்தகத்தையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். புத்தகத்தை மின்னூலாக படிக்கலாம். ஒலிப்புத்தகமாகவும் கேட்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://www.shelfie.com/

புத்தாண்டு கொண்டாட்ட விநோதங்கள்

புத்தாண்டு என்றதும் நள்ளிரவு கொண்டாட்டமும், வானவேடிக்கையும் வாழ்த்து பரிமாற்றங்களும் நினைவுக்கு வரலாம். அமெரிக்காவின் நியூயார்க நகர சதுக்கம், பாரீசிச் ஈபுள் கோபுரம் ,ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகம் ஆகியவை புத்தாண்டு கொண்டாட்ட்த்திற்கான புகழ் பெற்ற இடங்களாக இருக்கின்றன என்பதும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் புத்தாண்டு எத்தனை விதமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா? அதாவது பல நாடுகளில் புத்தாண்டை வரவேற்க விதவிதமான வழக்கங்கள் கொண்டிருக்கின்றனர் தெரியுமா? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு தொடர்பாக உள்ள விநோதமான கொண்டாட்ட வழக்கங்களை தி லிட்டில் திங்க்ஸ் இணையதளம் பட்டியலிட்டுள்ளது:

இதன் படி தென்னமரிக்க நாடான ஈக்வேடாரில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களின் உருவ பொம்மைகளை எரிக்கின்றனராம். இதன் மூலம் கடந்த ஆண்டின் தீமை ஒழியும் என்பது நம்பிக்கையாம் . இதே போல சுவிட்சர்லாந்து நாட்டில் தரையில் ஐஸ்கீர்மை சிந்துகின்றனராம். இது அதிர்ஷ்ட்த்திற்கு வழி வகுக்கும் என்பது நம்பிக்கையாம். ஸ்பெயின் நாட்டில் அனைவரும் தொலைக்காட்சி முன் அல்லது பொது சதுக்கங்களில் கூடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது சிவப்பு உள்ளாடை அணிந்து கையில் ஒரு கோப்பை திராட்சை பழங்களையும் வைத்திருப்பார்கள். புத்தாண்டு மணி 12 முறை ஒலிக்கும் போது 12 திராட்சகளை விழுங்கினால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் நீடிக்குமாம்.
டென்மாரிக்கில் புத்தாண்டு பிறகும் போது நாற்காலியில் இருந்து குதிப்பதையும் பக்கத்துவீட்டில் தட்டை வீசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் மூலம் நட்பு தழைக்கும் என்பது நம்பிக்கை. எஸ்டோனியா நாட்டில் 7,9 மற்றும் 12 எண்கள் ராசியானவையாக கருதப்படுவதால் இத்தனை முறை சாப்பிட முடிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 மாதங்களை குறிக்க 12 பழங்களை வைத்திருக்கின்றனராம்.

——

நன்றி தமிழ் இந்திவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.