டெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்

maகம்ப்யூட்டர்களை பதம் பார்க்கும் வைரஸ்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். வைரஸ்களில் பல ரகங்கள் இருப்பது மட்டும் அல்ல, வைரஸ்கள் போலவே வில்லங்கமான மேலும் பல மென்பொருள் சங்கதிகள் இருக்கின்றன. இவை எல்லாம் மால்வேர் என குறிப்பிடப்படுகின்றன. தீய நோக்கிலான மென்பொருள்களாக இவை அமைகின்றன.

கம்ப்யூட்டர் பயனாளிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை இலக்காக கொண்ட தீய நோக்கிலான மென்பொருள்களே மால்வேர் என அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் மேலிஷியஸ் சாப்ட்வேரின் சுருக்கமாக இது அமைகிறது. தரவுகள், சாதங்கள் மற்றும் பயனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் எந்த ஒரு மென்பொருளும் மால்வேர் தான். அதாவது தீய மென்பொருள்.

மால்வேர்களில் பல ரகங்கள் இருக்கின்றன. பரவலாக அறியப்பட்ட வைரஸ்கள் இவற்றில் ஒன்று. இவைத்தவிர வார்ம்கள், ட்ரோஜன்கள், ஸ்பைவேர்கள் ஆகிய தீய மென்பொருள்களும் இருக்கின்றன. இந்த பட்டியலில் ரான்சம்வேரும் சேர்ந்திருக்கிறது. ஆட்வேர் மற்றும் பாட்நெட்களும் கூட இந்த பிரிவில் தான் வகைப்படுத்தப்படுகின்றன. அடிப்படையில் மென்பொருள்கள் தான் என்றாலும், சேதத்தை உண்டாக்குவதே இவற்றின் நோக்கம் என்பதால் மென்பொருள் வில்லனாக கருதலாம்.

இவற்றில் வைரஸ் தான் பரவலாக காணக்கூடிய தீய மென்பொருளாக இருக்கிறது. தன்னைத்தானே செயல்படுத்திக்கொண்டு கோப்புகள் அல்லது புரோகிராம்களை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மென்பொருள்கள் பொதுவாக வைரஸ் என அடையாளம் காணப்படுகின்றன. இவற்றுக்கு சுயமாக பரவும் ஆற்றலும் உண்டு. அதாவது உருவாக்கிவிட்டுவிட்டால் போதும், முதல் கம்ப்யூட்டர் அல்லது சாதனத்திற்கு வேட்டு வைத்த பிறகு தானாக மற்ற சாதனங்களுக்கு பரவிவிடும்.

வைரஸ்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு, மூல கம்ப்யூட்டர் இல்லாமல் தன்னத்தானே பிரதியெடுத்துக்கொள்ளும் வகையான மென்பொருள்கள் வார்ம்கள் என சொல்லப்படுகின்றன. இவற்றை செயல்படுத்த மென்பொருள் பிரம்மாக்களின் கட்டளையோ அல்லது பரவ பயனாளிகளின் அசட்டுத்தனமோ தேவையில்ல.

ஒரு நல்ல மென்பொருள் போல தோற்றம் அளித்து ஆனால் வில்லங்கமான வேலையை செய்யும் மென்பொருள்கள் ட்ரோஜன் ஹார்ஸ் என சொல்லப்படுகின்றன.

பயனாளிகளின் தகவல்களை சேகரிக்கும் அல்லது திருடும் நோக்கத்தில் உருவாக்கப்படும் மென்பொருள்கள் ஸ்பைவேர் என சொல்லப்படுகின்றன. அதிக வில்லங்கத்தை ஏற்படுத்தாமல் விளம்பரத்தை மட்டும் இடைச்சொறுகளாக அளிப்பவை ஆட்வேர் என அழைக்கப்படுகின்றன.

ரான்சம்வேர் இவற்றில் இன்னும் வில்லங்கமானவை. எப்படியாவது கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் போன்றவற்றில் உள்ளே நுழைந்து அதில் உள்ள கோப்புகளை அல்லது மொத்த சாதனத்திற்கும் பூட்டு போட்டி முடக்கி வைப்பது ரான்சம்வேரின் தனித்தன்மை. இந்த பூட்டை விடுவிப்பதற்கான சாவி வேண்டும் எனில் இதை ஏவியவர்கள் கேட்கும் பினைத்தொகையை அளிக்க வேண்டும். எனவே தான் இவை ரான்ம்சம்வேர் எனப்படுகின்றன.

பாட்கள் எனப்படும் பலவகையான சிறிய தானியங்கி மென்பொருள்களும் கூட மால்வேர் என்றே கருதப்படுகின்றன.

மால்வேர்கள் கம்ப்யூட்டர் உலகில் கொஞ்சம் பழைய சங்கதி தான்.

1990 ல் யிஸ்ரேல் ரடாய் (Yisrael Rad ) எனும் கம்ப்யூட்டர் பாதுகாவலர் மால்வேர் எனும் வார்த்தையை முதன் முதலில் உருவாக்கினார்.

1971 ல் உருவாக்கப்பட்ட கிரீப்பர் எனும் வைரஸ் முதல் மால்வேராக கருதப்படுகிறது.

கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் இணைய பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனில் மால்வேர் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

டெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (Filter Bubble) – வடிகட்டல் குமிழ்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “டெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்

  1. வணக்கம்
    பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக்குத் தேரளித்த பாரி மன்னன் மயிலுக்குப் போர்வை அளித்த பேகன் போன்றவர்கள் கடையெழு வள்ளல்கள், அவர்களாவது மற்ற உயிர்கள் வருத்தப் படுவதைக்கண்டு வருந்தி அளித்தார்கள், தாங்களோ இணையப் பயனாளிகள் துன்பத்தில் வீழ்ந்து விடுவார்களோ என்றெண்ணி முன் வந்து வாரி வழங்குகிறீர்கள், ஆகவே தாங்கள் கலியுக வள்ளல் எனப் போற்றத் தக்கவர்
    என்றும் அன்புடன்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *