நோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி

GettyImages_1044627548.0நோபல் பரிசு அறிவிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு மிக முக்கியமான விவாதத்திற்கான மைய பொருளாக அமைந்திருக்கிறது. நோபல் பரிசு தேர்வு பெண் விஞ்ஞானிகளின் பங்கு அற்ப சொற்பமாக இருப்பது ஏன் எனும் அடிப்படையான கேள்வி, விஞ்ஞானத்தில் பெண்களின் பங்கு புறக்கணிக்கப்படுவது ஏன் எனும் கேள்வியாகவும் எதிரொலிப்பதை கேட்க முடிகிறது.

இயற்பியல் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கனடா விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லாண்ட், (Donna Strickland )  கடந்த 55 ஆண்டுகளில் இந்த பரிசை பெறும் முதல் பெண் விஞ்ஞானியாக இருக்கிறார் என்பது தான் ஆச்சர்யம். இதுவே செய்தியாகி கவனத்தை ஈர்த்து கேள்வியாகவும் உருவெடுத்துள்ளது. அது மட்டும் அல்ல, இதுவரை நோபல் வரலாற்றிலேயே இயற்பியல் நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண்மணி இவர் தான் எனும் போது, பெண்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுவது தொடர்பான கேள்வி பெரிதாக எழுவதை உணர்லாம்.

நோபல் வரலாற்றை திரும்பி பார்த்தால், புகழ் பெற்ற பெண் விஞ்ஞானியான மேர் கியூரி தான், இயற்பியல் நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணி. கியூரி 1903 ம் ஆண்டில் தேர்வானார். அதன் பிறகு 1963 ல் மேரி ஜியோபெர்ட் மெயர் எனும் விஞ்ஞானி இயற்பியல் நோபல் பெற்றார். இந்த இருவருக்கு பிறகு, இப்போது 55 ஆண்டுகள் கழித்து டோனா ஸ்டிரிக்லாண்ட் இயற்பியல் நோபல் தேர்வாகியிருக்கிறார்.

லேசர் ஆய்வு தொடர்பான பங்களிப்பிற்காக டோனா இந்த விருதை பெற சக விஞ்ஞானிகள் இருவருடன் தேர்வாகியிருக்கிறார். 55 ஆண்டுகள் கழித்து பெண் விஞ்ஞானி ஒருவர் இயற்பியல் நோபல் பரிசு பெற்றிருப்பது நிச்சயம் கவனத்திற்கு உரியது தான். ஆனால் கொண்டாட்டத்திற்கு உரியதா? என்பது கேள்வி. இத்தனை ஆண்டுகளில் மூன்றே பெண் விஞ்ஞானிகள் தானா நோபல் தேர்வுக்கு உரியவர்களாக இருந்திருக்கின்றனர் என்பது இன்னும் ஆழமாக எழுப்பபடும் கேள்வி. இது அறிவியல் உலகில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பான கேள்வியாகவும் உருவெடுத்துள்ளது.

நோபல் அறிவிப்புக்கு பின் பேட்டி அளித்த டோணா, இதுவரை 3 பேர் தானா இயற்பியல் நோபலை வென்றிருக்கிறோம் என வியப்புடன் கேட்டு, இது நிச்சயம் அதிகமாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் ஆய்வில் தான், பெண் என்பதால் பாரபட்சத்தை உணரவில்லை என்றும், சமமாகவே நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், அறிவியல் உலகில் பெண்கள் சரியான முறையில் அங்கீகரீக்கப்படவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. நோபல் பட்டியலில் பெண்கள் எண்ணிக்கை இதற்கு ஒரு உதாரணம். இதற்கான காரணங்களை அலசினால், அறிவியல் உலகில் பெண்கள் மீது நிலவும் பாரபட்சம் எந்த அளவு ஆழமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. பெண்கள் உரிய முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு ஏன், மேரி கியூரிக்கு பரிசு வழங்கப்பட்ட போதே, அவர் நோபல் குழுவின் தேர்வாக இருக்கவில்லை, அவரது கணவரின் வலியுறுத்தலால் தான் சேர்க்கப்பட்டார் எனும் தகவல் சிந்திக்க வைக்கிறது.

இந்த பின்னணியில் தான் டோனாவின் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. ’டோனா’க்கள் அலட்சியப்படுத்தப்படுவதை இன்னொரு தகவலும் அழகாக உணர்த்துகிறது. பரிசு பெறுவதற்கு முன்னர், இணைய களஞ்சியமான விக்கிபீடியாவில் அவருக்கான தனி பக்கம் இருக்கவில்லை எனும் செய்தி தான் அது. டோணா தேர்வை அடுத்து உண்டான விவாதத்தின் ஒரு அங்கமாக இந்த தகவலும் வெளியானது. நோபல் பரிசுக்குறியவராக தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு விக்கிபீடியாவில் அறிமுக பக்கம் இல்லை என்பது செய்தி தானே.

விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. ஏற்கனவே விக்கி ஆர்வலர் ஒருவர் டோனா ஸ்டிரிக்லாண்ட் தொடர்பான அறிமுக பக்கத்தை உருவாக்க விரும்பியதாகவும் ஆனால் அவர் விக்கி பக்கம் உருவாக்கப்படும் அளவுக்கு பிரபலமானவர் இல்லை என கூறி நிராகரிக்கப்பட்டதாகவும் டிவிட்டரில் ஒருவர் தகவலை வெளியிட்டார். நோபல் பரிசை வென்றவருக்கே விக்கிபீடியாவில் சொந்த அறிமுக பக்கம் இல்லை எனும் தகவல் திகைக்க வைப்பதாக அமைந்தது.

ஆனால், இதில் விக்கிபீடியாவை குற்றம் சொல்வதற்கில்லை. விக்கிபீடியா இணைய ஆர்வலர்களின் பங்களிப்பால் உருவாக்கப்படுவது. அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் அதில் கட்டுரைகளை சேர்க்கலாம் என்றாலும், அதற்கு ஆதாரங்கள் வேண்டும். உதாரணமாக ஒருவரைப்பற்றிய அறிமுக பக்கத்தை உருவாக்க முயற்சித்தால், அவரைப்பற்றிய அறிமுகம் ஏன் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அவரது பங்களிப்பு தொடர்பான செய்திகள் மற்றும் விருதுகள் போன்ற தகவல்கள் இதற்கு தேவை.

donna_ulb5akடோனாவுக்கான விக்கி அறிமுக பக்கத்தை உருவாக்க முயன்ற போது, அவர் புகழ்பெற்றவராக கருதப்பட்ட போதிய ஆதாரம் இல்லை என விக்கி மாடரேட்டர்கள் நிராகரித்துவிட்டனர். ஆனால், டோனா நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட போது, இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்து, நோபல் பரிசு பெற தகுதியுள்ள பெண்மணி ஒருவருக்கே அறிவியல் ஆய்வுலகில் இது தான் நிலை என்ற உண்மை உரைத்திருக்கிறது. டோனா தொடர்புடைய ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றில் அவரது பெயர் பிரதானமாக இடம்பெறாமல், அடிக்குறிப்புகளில் தள்ளப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. டோனா என்றில்லை, ஆய்வுலகில் பெரும்பாலான பெண்களில் நிலை இது தான் என்கின்றனர்.

இவை எல்லாம் சேர்ந்து தான், அறிவியல் உலகில் பெண் சாதனையாளர்கள் போதிய அங்கீகாரம் பெறுவதில்லை எனும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆய்வு அங்கீகாரத்திற்கான மகுடங்களில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகளில் பெண்கள் மிக குறைந்த அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் உண்மை இதை இன்னும் தீவிரமாக உணர்த்துகிறது.

ஆனால், விஞ்ஞானி டோனி விஷயத்தில் உடனடியாக ஒரு மாயம் நிகழ்ந்தது. அவர் நோபல் பரிசை பெற்ற செய்தி வெளியான உடனேயே அவருக்கான விக்கிபீடியா பக்கம் உருவாக்கப்பட்டு விட்டது. பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு செவ்வாய் கிழைமை காலை 6.14 மணிக்கு அவருக்கான பக்கம் உருவாக்கப்பட்டு முதல் தகவல் பதிவு செய்யப்பட்டதாக வாக்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. அது மட்டும் அல்ல விக்கி ஆர்வலர்கள் தொடர்ந்து அவரைப்பற்றிய தகவல்களை உடனடியாக அந்த கட்டுரையில் சேர்க்கத்துவங்கினர். அவர் நோபல் பரிசு பெற்றவர், அவரது நோபல் பரிசு கட்டுரை, போன்ற தகவல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன. இதை டோனாவுக்கு கிடைத்த உடனடி அங்கீகாரம் என அட்லாண்டிக் இதழ் வர்ணித்துள்ளது. டோனா பக்கத்தில் தகவல்கள் இடம்பெற்ற வேகத்தையும், சேர்க்கப்பட்ட விதத்தையும், விக்கி கட்டுரை திருத்த பக்கத்தில் இப்போதும் காணலாம்.

ஒருவிதத்தில் டோனாவுக்கு வழங்கப்பட்ட விக்கி நீதியாக இதை கருதலாம். நோபல் பரிசை அடிப்படையாக கொண்டு அவருக்கான விக்கி பக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது. இனி அதில் அவரது சாதனைகளை இடம்பெறச்செய்வதில் எந்த தடையும் இல்லை.

ஆனால், இன்னமும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான டோனாக்களுக்கு நீதி வழங்குவது யார்?

பி.கு 1: டோனா ஸ்டிரிக்லாண்ட் விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. லேசர் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள டோனா, தன்னைப்போல மேலும் பல பெண்கள் இயற்பியல் பக்கம் வர வேண்டும் என நினைப்பவராக இருக்கிறார். லேசர் காதலி என அறியப்படும் அவர், இளம் பெண்களுக்கு இயற்பியல் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காக அறிவியல் ஆய்வை சுவை மிகுந்ததாக முன்னிறுத்தி வருகிறார்.

பி.கு 2: டோனாவுக்கு விக்கிபீடியாவில் துவக்கத்தில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும், அறிவியல் உலகில் பெண்களின் பங்களிப்பை உலகறியசெய்வதற்காகவே விக்கிபீடியா மூலமே ஜெஸ்ஸி வேடே எனும் ஆய்வாளர் போராடி வருகிறார். பெண் அறிவியல் சாதனையாளர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கான விக்கிபீடியா கட்டுரைகளை அவர் எழுதி வருகிறார். இவரைப்பற்றிய முந்தைய தகவல் திங்கள் கட்டுரை!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.