பருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்!

Heat-wave-editபருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலை மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப்பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், வெப்ப நிலை உயர்வை 1.5 செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செயதாக வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதை செய்ய தலைகீழாக நின்றாக வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆக விஞ்ஞானிகள் தங்கள் கடமையை சரிவர செய்துள்ளனர். அவர்களின் அபாய எச்சரிக்கையை உணர்ந்து, உலகம் தனது உறக்கத்தை கலைத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்பட தயாராக இருக்கிறதா? என்பதே இப்போதைய கேள்வி.

பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதம் நாம் அறியாதது அல்ல. முன்னர் இருந்ததைவிட பூமியின் வெப்பம் மெல்ல அதிகரித்து வருவதை தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாகவே பூமி எதிநோக்கியுள்ள இந்த பிரச்சனை பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, துருவப்பகுதியில் பனிக்கட்டிகள் உருகி வழியும் நிலை உருவாகும், கடும் வறட்சியும், அதீத வெள்ளமும் உண்டாகும் என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது. சர்வதேச மாநாடுகளில் இது பற்றி உலக நாடுகள் ஆலோசித்திருக்கின்றன.

ஆனால், இந்த பிரச்சனை ஏதோ விஞ்ஞான உலக பிரச்சனை, இந்த அளவு எல்லாம் விபரீதம் நடந்துவிடாது என நினைத்துக்கொண்டிருந்தால் உடனடியாக அதை மாற்றிக்கொள்ளுங்கள். அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான ஐபிசிச்சி அறிக்கை மூலம் விஞ்ஞானிகள் இதை தான் அழுத்தந்திருத்தமாக தெரிவித்துள்ளனர். பருவநிலை பாதிப்பு என்பது ஏதோ எதிர்காலத்தில் எப்போதோ நிகழ காத்திருப்பது அல்ல, அடுத்த பத்தாண்டுகளிலேயே இதன் தீவிரத்தை உலகம் உணரத்துவங்கிவிடும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வெப்பம் அதிகரிப்பதை எப்படியாவது 1.5 செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்திவிட முயற்சிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திகைக்க வைக்கும் எச்சரிக்கை தகவல்களை பார்ப்பதற்கு முன்னர், இந்த பிரச்சனை பற்றிய பின்னணியை சுருக்கமாக பார்த்துவிடலாம். 19 ம் நூற்றாண்டின் தொழில்புரட்சி நவீன வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து, இன்றைய நவீன வசதிகளுக்கு எல்லாம் அடிப்படையாக அமைந்தது. இன்றைய டிஜிட்டல் புரட்சிக்கும் தொழில் புரட்சி தான் மூல விதை. ஆனால், தொழில்புரட்சிக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. நாம் பூமியின் வளங்களை சுரண்டத்துவங்கி, சுற்றுச்சுழலை பதம் பார்க்கத்துவங்கியதும் இதன் பக்கவிளைவாக அமைந்தன.

நிலக்கரியையும், பெட்ரோலையையும் தோண்டி எடுத்ததும், இந்த வளங்களை எரித்து காற்றை மாசாக்கியதும் கட்டுப்பாடில்லாமல் தொடர்வதன் விளைவாக, நாம் வசிக்கும் பூவியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதையே தாமதமாக தான் உணர்ந்தோம். புவியின் வெப்பம் முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளது என்பது தான் அது. ஆம், 19 ம் நூற்றாண்டுக்குப்பிறகு புவியின் வெப்பம் ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளது. அது மட்டும் அல்ல, இந்த போக்கு தொடர்வதால் வரும் காலத்தில் இது 2 முதல் 3 டிகிரி வரை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதை தான் புவி வெப்பமாதல் என்கின்றனர்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், இது தொடர்பாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இதன் விளைவாகவே 2015 ல் பாரீஸ் நகரில் பருவநிலை மாநாடு நடைபெற்றது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டன. இதற்கான செயலாக்கம் சர்வதேச அரசியலில் சிக்கித்தவித்து வரும் நிலையில், இது தொடர்பான அடுத்த அறிக்கை 2018 ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அண்மையில் தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற மாநாட்டில், ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையிலான குழு, தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஆய்வுகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் இந்த அறிக்கையை தொகுத்தளித்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் 90 க்கும் மேற்பட்ட நாடுகளைசேர்ந்த விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட்டு, இந்த அறிக்கை தயாராகியுள்ளது.

இந்த அறிக்கை தான், புவி வெப்பமயமாதலின் விபரீதங்களை எச்சரிக்கையாக சுட்டிக்காட்டியுள்ளது. உண்மையில் இந்த அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஏற்கனவே பருவநிலை மாற்றம் பற்றி அறியப்பட்ட விஷயங்களை நம்மால் இனியும் அலட்சியம் செய்ய முடியாது என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது. இது தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ கூடிய பிரச்சனை அல்ல என்பதோடு, உடனடியாக இதை சரி செய்தாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இனி வரும் ஆண்டுகளில் வெப்பம் அதிகரிப்பதை 2 செல்ஷிசுக்குள் குறைக்க வேண்டும் என்பதை 1.5 செல்ஷியசுக்குள் குறைக்க முடிந்தால் மனித குலத்திற்கு மிகவும் நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில் விளைவுகள் மிக மோசமாக அமையும்.

அரை செல்சிஷிசில் என்ன வந்துவிடப்போகிறது என கேட்கலாம். அரை டிகிரி என்பது, ஆர்டிக்- அண்டார்டிக் பகுதிகளில் பனிக்கட்டிகள் அதிகம் உருவகாமல் இருக்கவும், கடலில் உள்ள பவளப்பாறைகள் காணாமல் போகவும் இருக்க உதவும் என்கிறது அறிக்கை. அரை டிகிரி வெப்பம் உயர்ந்தால் பனிக்கரடிகள் போன்றவற்றின் வாழ்விடம் மேலும் குறைந்து போகும். அளவுக்கு அதிகமான வெப்பத்திற்கு மனித குலம் இலக்காகும். இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்ப அலை வீசும்.

மத்திய தரைக்கடல் பகுதி பாதிப்புக்குள்ளாகும். உலகின் பூச்சி இனங்கள் பல அழியும் நிலை வரும். வரலாறு காணாத வெள்ளமும், வறட்சியும் இயல்பாகும். கடல் நீர் மட்டம் உயர்ந்து பல தீவுகள் மூழகலாம்.

இப்படி எல்லாம் எச்சரிக்கும் அறிக்கை, ஒரு செல்ஷுசில் பத்தில் ஒரு பகுதியை குறைக்க முடிந்தால் கூட அதனால் ஏற்படும் அணுகூலம் அநேகம் என்கிறது. இந்த பாதிப்புகள் எல்லாம் ஏதே கண்ணுக்குத்தெரியாத வருங்காலத்தில் ஏற்படப்போவது இல்லை. அடுத்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் இவற்றை உணரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே தான் பருவநிலை மாற்றத்தை சரி செய்வதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கரியமல வாயு வெளியேற்றத்தை குறைப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது. விஞ்ஞானிகள் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர். உலகின் உறக்கம் கலையுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

https://www.nytimes.com/interactive/2018/10/07/climate/ipcc-report-half-degree.html

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலை மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப்பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், வெப்ப நிலை உயர்வை 1.5 செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செயதாக வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதை செய்ய தலைகீழாக நின்றாக வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *