’டெக் டிக்ஷனரி’ -20 ல்; லேசி லோடிங் – சோம்பலிறக்கம்

pinterest-placeholdersஇணையத்தில் டவுண்லோடிங் ( தரவிறக்கம்)  தெரியும், அப்லோடிங் ( பதிவேற்றம்) தெரியும். லேசி லோடிங் தெரியுமா?

லேசி லோடிங் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும் கூட, நீங்கள் தினந்தோறும் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியுமா?

அப்படியா? என கேட்பதாக இருந்தால், நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் புகைப்படங்கள் சரியான நேரத்தில் தோன்றுவதற்கும், யூடியூப் உள்ளிட்ட தளத்தில் சரியான வேகத்தில் வீடியோக்களை கண்டு ரசிப்பதற்கும் லேசி லோடிங்கிற்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் லேசி லோடிங் நுட்பம் தான் இவற்றை நிறுத்தி நிதானமாக தேவையான நேரத்தில் தோன்றச்செய்கிறது.

லேசி டோடிங்கை தமிழில் சோம்பலான இறக்கம் அல்லது தாமதமான இறக்கம் என புரிந்து கொள்ளலாம். அதாவது இணைய பக்கம் அல்லது கம்ப்யூட்டர் புரோகிராமில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கொத்தாக தவறக்கம் ஆகாமல், எப்போது எது தேவையோ அப்போது அது திரையில் தோன்றுவது அல்லது பயன்பாட்டிற்கு வந்து நிற்பதை இந்த உத்தி குறிக்கிறது.

90 களில் இணையத்தை பயன்படுத்தியவர்களுக்கு இந்த உத்தியின் அருமை புரியும். ஒரு இணைய பக்கம் முழுவதுமாக திரையில் தோன்றுவதற்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும். வரி வடிவ எழுத்துக்கள், படங்கள் என எல்லாமும் திரையில் தோன்ற பல நிமிடங்கள் ஆகலாம். அந்த கால இணைய வேகம் அப்படி!

இப்படி இணைய பக்கம் தோன்றுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க லேசி லோடிங் உத்தி புரோகிராமர்களால் பின்பற்றப்படுகிறது. இந்த உத்தியில் இணைய பக்கம் எடுத்த எடுப்பில் முழுவதும் தோன்றுவதில்லை. பயனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப தோன்றுகிறது. உதாரணமாக, இணைய பக்கத்தில் நடுப்பகுதியில் புகைப்படம் இருந்தால் அது முதலிலேயே தரவிறக்கம் ஆவதில்லை. மாறாக பயனாளி அந்த பக்கத்தை ஸ்கிரோல் செய்து அந்த இடத்திற்கு வரும் போது தான் புகைப்படம் தோன்றும்.

ஜாவா ஸ்கிரிப்டை கொண்டு இந்த வித்தை அரங்கேறுகிறது. ஜாவா ஸ்கிர்ப்ட், பயனாளிகள் ஸ்கிரோல் செய்வதை கொண்டு, புகைப்பட விவரங்களை கோருகிறது. அந்த இடத்திற்கு ஸ்கிரோல் ஆகவில்லை என படமும் தோன்றவே தோன்றாது.

இதன் மூலம், இணைய பக்கம் அதிக சுமையில்லாமல் வெகு வேகமாக தரவிறக்கம் ஆக வைக்கலாம். வீடியோவிலும், இதே உத்தியை பின்பற்றலாம். யூடியூப்பில் வீடியோ பார்க்கப்படும் விதத்திற்கு ஏற்ப அது தரவிறக்கம் ஆகிறது. இணைய பக்கத்தின் பின்னே இருக்கும் எச்.டி.எம்.எல் கோடில் கூட இதை பயன்படுத்தலாம் என்கின்றனர்.

இணைய பயன்பாட்டை விரைவாக்கியதில், இந்த தாமதமாக்கும் உத்திக்கு முக்கிய பங்கிருக்கிறது. அந்த வகையில் இந்த உத்தியை சோம்பல் இறக்கம் என்பதைவிட சுறுசுறுப்பாக்கம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையில் இது மென்பொருள் பயன்பாட்டில் இருந்து இணைய பயன்பாட்டிற்கு வந்த உத்தி என்கின்றனர். மென்பொருள் உலகில் ஒரு விஷயம் தேவைப்படும் போது மட்டுமே அது தோன்றச்செய்யும் வகையிலான வடிவமைப்பு உத்தியை காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். உதாரணமாக உங்கள் கம்ப்யூட்டர் இயங்குதளம், பார்க்கப்படும் ஐகான்களுக்கு மட்டுமே தம் நைல் உருவத்தை காட்டும்.

நிற்க, லேசி லோடிங் உத்தி பரவலாக பயன்படுகிறது என்பது ஒரு புறம் இருக்க, இந்த வசதியை செயலிழக்க வைக்க விரும்பினால் அதற்கான பிரத்யேக வசதி ஒன்றையும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கூட்டல் ( ஆட் ஆன்) சேவையாக அறிமுகம் ஆகியுள்ளது.

சைடு லோடிங் பற்றி அறிய: https://techterms.com/definition/lazy_loading

சைடு லோடிங்கை தடுக்க: https://www.ghacks.net/2019/04/25/unlazy-for-firefox-disables-lazy-loading/

http://cybersimman.com/2018/03/06/tech-6/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *