டிஜிட்டல் குறிப்புகள்-6 இந்த தளம் ஆன்லைன் ஆடை நூலகம்!

yellow-dress-lost-propertyநூலகம் என்றவுடன் புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும். ஆன்லைன் நூலகம் என்றாலும் அதே தான். கொஞ்சம் யோசித்தால், இசை நூலகம் கூட இருக்கிறதே என சொல்லத்தோன்றும். எல்லாம் சரி, ஆடைகளால் நூலகம் அமைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் ஆடை நூலகம் ஒன்றை அமைத்து அசத்தியிருக்கின்றனர்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இந்த ஆன்லைன் ஆடை நூலகம், பயன்படுத்தாத ஆடைப்பிரச்சனைக்கு தீர்வாக அமைவதோடு, புதிய ஆடை தேவைக்கான பதிலாகவும் அமைகிறது.

லாஸ்ட் பிராப்பர்டி எனும் பெயரில் அந்த ஆடை நூலகம் அமைந்துள்ளது. பெயரில் இருந்து ஊகிக்க கூடியது போலவே, இந்த ஆடை நூலகத்தில் இருந்து ஆடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி திரும்பி கொடுத்துவிடலாம்.

ஆடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த உறுப்பினராக சேர வேண்டும். உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான சந்தா திட்டங்கள் உள்ளன. சந்தாவிற்கு ஏற்ப, ஆடைகளை வாடகைக்கு எடுக்கலாம். ஆடைகளை திரும்பி அளிப்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆக, ஒருவர் புதிய ஆடைகளை அணியும் விரும்பம் கொண்டிருக்கிறார், ஆனால் அதற்காக காசு கொடுத்து புதிய ஆடை வாங்கவும் தயக்கம் கொண்டிருக்கிறார் எனில் இந்த ஆடை நூலகம் அவருக்கு பயனுள்ளதாக இருக்கும். சிக்கனத்தை நாடுபவர்கள் என்றில்லை, ஒரு சில முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆடைகளுக்கு என்று அதிக தொகையை செலவிட விரும்பாதவர்களுக்கும் இந்த நூலகம் ஈர்ப்புடையதாக இருக்கும்.

நிற்க, இது இந்த நூலகத்தின் ஒரு பக்கம் தான். இதன் இன்னொரு பக்கம் இன்னும் சுவாரஸ்யமானது. இந்த ஆடை நூலகத்திற்கான ஆடைகள் எங்கிருந்து வருகின்றன? அவை வாங்கப்படுவதில்லை, பெறப்படுகின்றன.

ஆடைகளில் எல்லோருக்கும் தான் விருப்பம் இருக்கிறது. பலர் புதிது புதிதாக ஆடைகளை வாங்குக்குவிக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். இவற்றில் பல ஆடைகள் ஒரு சில முறைக்கு மேல் பயன்படுத்தப்படாமல் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கலாம்.

இந்த ஆடைகளை தூக்கி போடவும் மனசு வராது. பயன்படுத்துவதற்கான சந்தர்பமும் இருக்காது. பல வீடுகளில் எதிர்கொள்ளக்கூடிய யதார்த்தமான சிக்கல் தான். பார்த்து பார்த்து ஆடை வாங்கும் பழக்கம் கொண்டவர்களிடம் கூட இத்தகைய ஆடைகள் இருக்கலாம்.

இப்படி வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் நல்ல நிலையில் உள்ள ஆடைகளை தான் லாஸ்ட் பிராப்பர்டி தளம் சேகரித்து ஆடை நூலகத்தை உருவாக்கியுள்ளது. இப்படி செய்வதன் மூலம், நல்ல நிலையில் உள்ள ஆடைகள் வீணாவதை தடுப்பதோடு, புதிய ஆடைகளுக்காக அதிக காசு செலவிட தயங்குபவர்கள் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.

இணையம் மூலம் சாத்தியமாக கூடிய அருமையான யோசனைக்கு செயல்வடிவம் கொடுத்துள்ள அருமையான யோசனை தான் இல்லையா!

இணையதளம்: https://lostproperty.clothing/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.