டிஜிட்டல் டைரி -பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம் ‘லிப்ரா’ பிட்காயினுக்கு போட்டியா?

librafb_660x450_062019111042முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில், மார்க் ஜக்கர்பர்கின் நிறுவனம் வளர்ச்சி திட்டங்களில், கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக் அண்மையில் தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை வெளியிட்டிருக்கிறது.

லிப்ரா எனும் பெயரில், பேஸ்புக் அடுத்த ஆண்டு இந்த டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இதற்கான விரிவான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. பேஸ்புக்கின் இந்த திட்டத்தில் விசா, மாஸ்டர்கார்டு, பேபால் என நிதி உலக ஜாம்பவான்கள் எல்லாம் இணைந்திருக்கின்றன.

பிளாக்செயின் நுட்பம் சார்ந்த பிட்காயின் போன்ற ஒரு டிஜிட்டல் நாணயத்தை பேஸ்புக் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த பல மாதங்களாக, வதந்திகளும், செய்திகளும் வெளியாகி கொண்டிருந்த நிலையில் பேஸ்புக், லிப்ராவுக்கான திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம் நிதி உலகில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும், இது மற்ற நாணயங்களுக்கு போட்டியாக அமையுமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் சார்ந்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம், பிட்காயின் போன்ற டிட்டல் நாணயங்களுக்கு அங்கீகாரத்தை தேடித்தரும் என்றும் கருதப்படுகிறது. பிட்காயினுக்கு, பேஸ்புக்கின் லிப்ரா போட்டியாக அமையும் என கூறப்பட்டாலும், பிட்காயினுக்கும், லிப்ராவுக்கும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. லிப்ராவை புரிந்து கொள்ள இந்த வேறுபாடுகளை அறிந்து கொள்வது அவசியம்:

திறவு மூல நாணயம்: கிரிப்டோ கரன்சி எனப்படும் எண்ம நாணய வகையின் முன்னோடியான பிட்காயின், சடோஷி நாகமோட்டோ எனும் அனாமதேய தனிநபர் அல்லது குழுவால் உருவாக்கப்பட்டது. இதன் தோற்றம் ரகசியமானது என்றாலும் அடிப்படையில் இந்த நாணயம் மிகவும் வெளிப்படையானது. அதாவது திறந்தவெளி தன்மை கொண்டது. பொதுவாக நாணயங்களை மத்திய வங்கிகள் வெளியிடுவது போல, பிட்காயினை எந்த ஒரு மைய அமைப்பும் வெளியிடுவதில்லை, கட்டுப்படுத்துவதும் இல்லை. யார் வேண்டுமானாலும் பிட்காயினுக்கான கிரிப்டோ வாலெட்டை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். ஏன் அவர்களே சொந்த வாலெட்டை உருவாக்கி கொள்ளலாம். பயனாளிகள் தங்களுக்கான முனையத்தை (node ) நடத்தி யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். பேஸ்புக்கின் லிப்ராவில் இந்த அம்சங்கள் எல்லாம் கிடையாது. பேஸ்புக் அங்கம் வகிக்கும் லிப்ரா சங்கம் எனும் அமைப்பால் அது வெளியிடப்படும். ஒருவிதத்தில் பார்த்தால், மற்ற அரசு நாணயங்களின் டிஜிட்டல் வடிவம் போன்றது தான் இது.

நிர்வாகம்: பிட்காயின் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டால் அது கட்டுப்பாடுகளே கிடையாது. மைய அமைப்பும் கிடையாது. பிட்காயின் சமூகத்தில் உள்ள டெவலெப்பர்களும், பயனாளிகளுமே அதை கூட்டாக தீர்மானிக்கின்றனர். பிட்காயினில் அதிருப்தி என்றால் வெளியேறி வேறு ஒரு நாணயம் உருவாக்கி கொள்ளலாம். பல போட்டி நாணயங்கள் இவ்வாறு உருவாகியுள்ளன. ஆனால் லிப்ரா, அதற்கான மைய அமைப்பால் நிர்வகிக்கப்படும். கட்டுப்படுத்தப்படும் என்றும் புரிந்து கொள்ளலாம். இந்த அமைப்பில் இடம்பெறும் நிறுவனங்கள் 10 மில்லியன் டாலர் உறுப்பினர் கட்டணம் செலுத்தி தங்கள் பங்கு முனையங்களை அமைத்துக்கொள்ளலாம். எனவே பிட்காயின் போன்ற சமூக நிர்வாகம் லிப்ராவில் சாத்தியம் இல்லை.

மையமற்ற தன்மை: பிட்காயின் மையமில்லாதது. ஆங்கிலத்தில் இதை டிசெண்ட்ரலைஸ்டு என்கின்றனர். இது தான் பிட்காயினின் ஆதார பலம். தொழில்நுட்ப நோக்கில், அதன் அடிநாதமான பிளாக்செயின் நுட்பம் இதை சாத்தியமாக்குகிறது. பிட்காயினை இயக்கும் நிரல்களை யார் வேண்டுமானாலும் டவுண்லோடு செய்து இயக்கலாம். ஆனால் பேஸ்புக்கின் லிப்ராவில் மையமாக சிலம் நோடுகள் இருக்கும். இதை லிப்ரா நிர்வாகம் நினைத்தால் முடக்கலாம்.

அனுமதி வேண்டாம்: பிட்காயினில் இணைய, அதை பயன்படுத்த எவருடைய அனுமதியும் தேவையில்லை. பிட்காயினில் பணம் அனுப்பாவும் யாருடைய அனுமதியும் அவசியம் இல்லை. பிட்காயினில் பயனாளிகள் யார் என்பதும் ஒரு பொருட்டு அல்ல. லிப்ராவில் அப்படி இல்லை, கிரிப்டோ நாணயங்கள் தடை செய்யப்பட்ட பல நாடுகளில் லிப்ரா அறிமுகமாக வாய்ப்பில்லை.

பாதுகாப்பானது: பிட்காயினை பொருத்தவரை அதன் பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானது. ஹேக்கர்கள் அதில் கைவரிசை காட்ட முடியாது. லிப்ரா மையம் கொண்டது என்பதால் பல வகை தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

மதிப்பு எப்படி? பிட்காயினின் மதிப்பு அதன் பற்றாக்குறை தன்மையால் வருகிறது. புழக்கத்தில் உள்ள பிடிகாயினுக்கு வரம்பு இருக்கிறது. உருவாக கூடிய மொத்த பிட்காயினுக்கும் வரம்பு இருக்கிறது. எனவே, பிட்காயினை மெயின் செய்து உருவாக்குவதில் அதன் மதிப்பு இருக்கிறது. லிப்ரா அடிப்படையில், மற்ற நாணயங்கள் சார்ந்திருக்கும் என்பதால், அதன் மதிப்பு ஓரளவு நிலையானதாக இருக்கும். ஆக, பிட்காயின் கோடீஸ்வரர்கள் போல லிப்ராவில் யாருக் கோடீஸ்வரராக முடியாது.

மூன்றாம் தரப்பு: பிட்காயின் ஒரு சுயேட்சையான அமைப்பு. அதில் யாரும் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதில்லை. பரிவர்த்தனைகளுக்கு நம்பிக்கை அளிக்க மூன்றாம் தரப்பு இல்லை. பயனாளிகளே கூட்டாக, பரிவர்த்தனைக்க்கான பதிவேட்டை பராமரிக்கின்றனர். லிப்ராவில் பேஸ்புக் இடைத்தரகர் போல செயல்படும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *