புத்தகங்களுக்கு டிரைலர் வசதி; ஸ்கிரிப்டு அறிமுகம்

getty_1087036132_2000133320009280297_392316திரைப்பட பிரியர்களுக்கு நெட்பிளிக்ஸ் போல, இசைப்பிரியர்களுக்கு ஸ்பாட்டிபை போல, புத்தக பிரியர்களுக்கு ஸ்கிரிப்டு (Scribd) விளங்குகிறது. நீங்கள் அறிந்திருக்க கூடியது போல, நெட்பிளிக்ஸ் திரைப்படங்களுக்கான ஸ்டீரீமிங் சேவை. கட்டணம் அல்லது சந்தா செலுத்து நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் உள்ளிட்ட படங்களையும், தொடர்களையும் பார்த்து ரசிக்கலாம். இசை ஸ்டீரிமிங் சேவையான ஸ்பாட்டிபையில் பாடல்களை கேட்டு மகிழலாம்.

அதே போல, ஸ்கிரிப்டு தளத்தில் நீங்கள் விரும்பிய புத்தகங்களை படித்து மகிழலாம். அந்த வகையில் ஸ்கிரிப்டு தளத்தை புத்தகங்களுக்கான டிஜிட்டல் நூலகம் என வர்ணிக்கலாம். இ- புக் எனப்படும் மின்னூல் வடிவில் லட்சக்கணக்கான புத்தகங்களை வாசிக்கலாம். புத்தகங்கள் மட்டும் அல்ல பத்திரிகளைகளையும் அவற்றின் டிஜிட்டல் வடிவில் படிக்கலாம். அதோடு, ஒலி வடிவில் ஆடியோ புத்தகங்களையும் கேட்கலாம்.

ஸ்கிரிப்டு ஆதியில், கோப்பு பகிர்வு சேவையாக அறிமுகமானாலும், பின்னர் புத்தகங்களை வாசிக்க வழி செய்யும் டிஜிட்டல் நூலகமாக தன்னை மாற்றிக்கொண்டது. இந்த பிரிவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

புத்தகங்களை வாசிக்க விரும்புகிறவர்களுக்கும், புதிய புத்தகங்களை கண்டறிய விரும்புகிறவர்களுக்கும் ஸ்கிரிப்டு சொர்கம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் முகப்பு பக்கத்தில் எப்போதும் புதிய புத்தகங்கள் அறிமுகத்தை பார்க்கலாம். எந்த புத்தகத்தை கிளிக் செய்தாலும், அந்த புத்தகம் தொடர்பான மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

புத்தகத்தை பின்னர் படிக்க சேமிக்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உண்டு. வாசகர்கள் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் தங்களுக்கான சொந்த நூலகத்தையும் உருவாக்கி கொள்ளலாம். அதோடு ஸ்கிரிப்டு சேவையை டெஸ்க்டாப், ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்திலும் அணுகலாம்.

ஆனால், ஒன்று ஸ்கிரிப்டு சேவையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். ஸ்கிரிப்டு சேவை பற்றி தெரிந்து கொள்ள, 30 நாள் முன்னோட்ட சேவையும் அளிக்கப்படுகிறது.

எதற்கு இந்த ஸ்கிரிப்டு புராணம் என்றால், இந்த சேவை அண்மையில் ஸ்னேப்ஷாட் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. ஸ்னேப்ஷாட் வசதியை புத்தகங்களுக்கான டிரைலர் போன்றது என்கிறது ஸ்கிரிப்ட். அதாவது, புத்தகத்தின் உள்ளடக்கம் தொடர்பான முன்னோட்டத்தை சுருக்கமாக அளிக்கிறது இந்த வசதி.

இணையத்தில் புழங்குபவர்களுக்கு, புத்தக சுருக்க சேவைகள் நன்கு பரிட்சியமாக இருக்கலாம். பிளின்க்லிஸ்ட் போன்ற தளங்கள், நான் பிக்‌ஷன் என குறிப்பிடப்படும் அபுனைவு ரக புத்தகங்களுக்கான சுருக்கங்களை அளிக்கின்றன. புத்தகங்களை படிக்க ஆர்வம் உள்ளவர்கள், ஆனால் பல்வேறு காரணங்களால் முழு புத்தகத்தையும் படிக்க முடியாதவர்கள், அவற்றின் சாரம்சத்தை தெரிந்து கொள்ள புத்தக சுருக்க சேவைகள் வழி செய்கின்றன.

தற்போது ஸ்கிரிப்டு தன் பங்கிற்கு புத்தக சுருக்க சேவையை ஸ்னேப்ஷாட் வடிவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற புத்தக சுருக்க சேவைகள் போல, புத்தகம் படிக்க முடியாதவர்களுக்கு என்றில்லாமல், புதிய புத்தகத்தை வாசிக்க விரும்புகிறவர்கள், அது பற்றி தெரிந்து கொள்வதற்கான முன்னோட்ட வசதியாக இது அமைகிறது.

புத்தகத்தின் முக்கிய அம்சங்களை 15 நிமிடங்களில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த வசதி அமைந்திருப்பதாக ஸ்கிரிப்டு குறிப்பிடுகிறது. முதல் கட்டமாக அபுனைவு வகை புத்தகங்களுக்காக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கிரிப்டு ஆசிரியர் குழு, இந்த புத்தக முன்னோட்டங்களை பிரத்யேகமாக தயாரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஸ்கிரிப்டு அதன் பயனாளிகளுக்கு அவர்கள் வாசித்த புத்தகங்கள் அடிப்படையில், அடுத்து வாசிக்க கூடிய புதிய புத்தகங்களை பரிந்துரை செய்து வருகிறது. இந்த புத்தக பரிந்துரை வசதியின் நீட்டிப்பாக தற்போது ஸ்னேப்ஷாட் முன்னோட்ட வசதி அறிமுகம் செய்யப்படுவதாக ஸ்கிரிப்ட் தெரிவித்துள்ளது.

புதிய புத்தகங்களை வாசகர்கள் கண்டறிவதற்கான சுவாரஸ்யமான வழியாகவும் இது இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் பதிப்பாளர்களுக்கும் இது தங்கள் புத்தகங்களை வாசகர் பார்வையில் வைக்க புதிய வழியாக அமையும்.

சில மாதங்களுக்கு முன் சோதனை வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இப்போது முழுவீச்சாக அறிமுகம் ஆகியுள்ளது. ஆனால், ஸ்கிரிப்டு சந்ததாரர்கள் மட்டுமே இந்த வசதியை அணுக முடியும். ஸ்கிரிப்டு டிஜிட்டல் நூலகத்தில் உறுப்பினராக சேர இதுவும் நல்லதொரு தூண்டுதல் தான்.

ஸ்கிரிப்டு இணையதளம்: https://www.scribd.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.