டிஜிட்டல் குறிப்புகள் –ஒரு தந்தையின் டிஜிட்டல் பாசம்

sleep-blanket-seung-lee-2அருகே உள்ள படத்தை பாருங்கள். இதை பார்த்ததுமே, படுக்கை விரிப்பு என்பதை யூகித்து விடலாம். ஆனால், அந்த படுக்கை விரிப்பில் உள்ள வடிவமைப்பு பற்றி ஏதேனும் யூகிக்க முடிகிறதா? ஒரு தந்தையின் பாசம் டிஜிட்டல் வடிவில் இப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பது தான் விஷயம்.

ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த படுக்கை விரிப்பில் உள்ள நீல வண்ண பகுதியும், இடைப்பட்ட கிரே வண்ண கோடுகளும், இதை உருவாக்கிய டிஜிட்டல் படைப்பாளி சுயேங் லீயின் செல்லக்குழந்தையின் முதல் ஆண்டு தூக்க பழக்கத்தை குறிக்கிறது.

ஆம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தந்தையான லீ, முதல் ஆண்டில் தனது குழந்தை படுத்து தூங்கிய நேரத்தையும், விழித்திருந்த நேரத்தையும் கோடுகளாக்கி அவற்றையே வடிவமைப்பாக கொண்டு குழந்தைக்கான படுக்கை விரிப்பை உருவாக்கியிருக்கிறார். தாய்மார்கள் ஸ்வெட்டர் பின்னுவது போல லீ, இந்த படுக்கை விரிப்பை பின்னியிருக்கிறார்.

சும்மாயில்லை, 42* 45 அங்குலம் கொண்ட இந்த படுக்கை விரிப்பை, 1,85,000 நூலிழை கொண்டு உருவாக்கி இருக்கிறார். இதற்கு 100 நாட்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கிறது. ஓய்வாக கிடைத்த நேரத்தை எல்லாம் படுக்கை விரிப்பை பின்ன பயன்படுத்தியதாக பாசக்கார லீ கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கு தேவையான தகவலுக்கு அவர் அதிகம் கஷ்டப்படவில்லை. குழந்தையின் தூக்கத்தை கண்காணிக்க பயன்படுத்திய பேபி கனெக்ட் எனும் செயலியில் இருந்து இதற்கான தரவுகளை எடுத்திருக்கிறார். கொஞ்சம் புரோகிராமிங் தெரியும் என்பதால், இந்த தரவுகளை ஜாவா ஸ்கிரிப்ட் கொண்டு, படுக்கை விரிப்பிற்கான நூலிழைய வடிவமைப்பு குறிப்புகளாக மாற்றியிருக்கிறார்.

ஓவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் ஒரு பின்னல் என கணக்கு வைத்துக்கொண்டு, தூக்கத்திற்கு ஒரு வண்ணம், விழித்திருப்பதற்கு ஒரு வண்ணம் என கொண்டு, வடிவமைப்பை அமைத்திருக்கிறார்.

இந்த படைப்பை தூக்க படுக்கை விரிப்பு எனும் பெயருடன் தனது டிவிட்டர்ன் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். கூடவே, இதை உருவாக்கிய விதம் மற்றும் நோக்கத்தையும் தொடர் குறும்பதிவுகளாக வெளியிட்டுள்ளார். https://twitter.com/Lagomorpho/status/1150109615545131008

தரவுகளை கொண்டு, மகனின் முதலாண்டு தூக்கத்தை படுக்கை விரிப்பாக உருவாக்கியது மிகவும் திருப்தி அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த படுக்கை விருப்பு மகனுக்கு பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும், லீ, ஒரு இணைய காமிக்காரர். இந்த படுக்கை விரிப்பு படைப்புக்கு சக இணையவாசிகளிடம் இருந்து கிடைத்துள்ள பாராட்டுகளும், வரவேற்பும் ஊக்கம் அளிப்பதாகவும் அவர் மைமாடர்ன்நெட் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

இணைய யுகத்தில் பாசத்தை இப்படி ஹைடெக்காகவும் வெளிப்படுத்தலாம். நிற்க சில மாதங்களுக்கு முன், ஜெர்மனியை சேர்ந்த ஒருவர், பேரூந்துக்காக காத்திருந்த நேரம் தொடர்பான தரவுகளை கொண்டே ஒரு ஸ்கார்ப்பை உருவாக்கியதாகவும் அறிய முடிகிறது. தர்வுகளால் வடிவமைக்கப்பட்ட அந்த ஸ்கார்ப் இபே தளம் மூலம் அதிக விலைக்கு வாங்கப்பட்டதும் செய்தியாகி இருக்கிறது.

இணைப்பு: https://mymodernmet.com/sleep-blanket-seung-lee/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *