டெக் டிக்ஷனரி – 21 கார்ட் கட்டிங் (cord-cutting) – கம்பி துண்டிப்பு

54e9fa7aeab8ea6663b11b03-750-563உள்ளடக்கம் பாயும் ( ஸ்டிரீமிங்) யுகத்தில் நீங்கள் கம்பி துண்டிப்பவராக இருப்பது இயல்பானது தான். இதை தான் கார்டு கட்டிங் என்கின்றனர். அதவாது கேபில் இணைப்பை துண்டிப்பது என பொருள்.

செயற்கைகோள் தொலைக்காட்சிகள், கேபில் டிவி யுகத்தை கொண்டு வந்தன. ஒரே ஒரு தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்த காலம் போய், சி.என்.என், பிபிசி துவங்கி பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான சேனல்களை பார்ப்பதற்கான வாய்ப்பை கேபில் டிவி யுகம் கொண்டு வந்தது. வீட்டிலிருந்தே ஹாலிவுட் படங்களை பார்ப்பதை இது சாத்தியமாக்கியது. உள்ளூரிலும் ஏகப்பட்ட சேனல்கள் பெருகின.

ஆனால், என்ன இருந்தாலும் தூர்தர்ஷன் கட்டணம் வசூலிக்கவில்லை, கேபிள் சேனைகள் அப்படி இல்லை. கட்டண சேனல்களாகவும் இருந்தன. விளைவு, கேபிள் கட்டணம் எகிறியது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கேபிள்களுக்கு பெரும் தொகை கட்ட வேண்டியிருந்தது.

இப்படி கேபில் டிவிகள் கட்டண கொள்ளை நடத்துவதாக பயனாளிகள் புழுங்கி கொண்டிருந்த நிலையில் தான், இணையம் வழியே உள்ளடக்கத்தை பாய்ந்தோடச்செய்யும் ஸ்டிரீமிங் சேவைகள் அறிமுகமாயின. நெட்பிளிக்ஸ் பிரபலமாக்கிய ஸ்டிரீமிங் யுகம் இன்னொரு மாயத்தையும் செய்தது.

திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட உள்ளடக்கம் நேரடியாக இணையத்தில் வெளியாகவும் வழி செய்தன. இந்த முறை ஓவர் தி டாப் சேவை எனப்படுகிறது. அதாவது எந்த தனி ஒளிபரப்பு சேவையின் தயவும் இல்லாமல் இணையம் வழி உள்ளடக்கம் காண்பது.

இதன் பயனாக, கேபிள் டிவிகளுக்கு அடிமையாக இருந்த பலர், உங்க சேவையும் வேண்டாம், கட்டண கப்பமும் வேண்டாம், நாங்க ஸ்டிரிமீங் பக்கம் போய்க்கொள்கிறோம் என்று நகர்ந்து வந்துவிட்டனர். இப்படி ஸ்டிரிமீம்ங் சேவைக்கு மாறும் வாய்ப்பால், கேபிள் இணைப்பை துண்டிப்பதே கார்டு கட்டிங் என சொல்லப்படுகிறது. தமிழில் கம்பி துண்டிப்பு.

பெரும்பாலும் இலவச இணைய வழி சேவை அல்லது குறைந்த கட்டண இலவச சேவைக்காக இப்படி கேபில் டிவி மற்றும் மூல ஒளிபரப்பில் இருந்து பயனாளிகள் தங்களை துண்டித்துக்கொள்கின்றனர்.

ஸ்டிரிமீங் யுகத்தில் உள்ளடக்க விநியோகமும், பொருளாதாராமும் மாறியிருக்கிறது என்பதன் அறிகுறி இது.

நிற்க, டிஜிட்டல் நேட்டிவ்ஸ் எனப்படும் புதுயுக தலைமுறையினர், ஸ்டிரிமீங் அற்புதத்தை உணர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் பெரும்பாலும் கேபிள் சந்தா செலுத்தும் பழக்கம் இல்லாதவர்களாக வளர்கின்றனர் என்கின்றனர். இந்த பிரிவினர் கார்டு நெவர் (Cord-nevers

) தலைமுறையினர் எனப்படுகின்றனர். கம்பியில்லா தலைமுறை என புரிந்து கொள்ளலாம்.

http://cybersimman.com/tag/digital/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.