இது டாக்டர்களுக்கான பேஸ்புக்

unnamedமருத்துவ துறையினர் குறிப்பாக இளம் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், ’டெய்லிரவுண்ட்ஸ்’ செயலியை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அப்படியே இல்லை என்றாலும், சீனியர் டாக்டர்களுடன் கலந்துரையாடும் போது அல்லது மருத்துவ துறை வல்லுனர்களை தொடர்பு கொள்ள முயலும் போது, இந்த செயல் பரிந்துரைக்கப்படலாம். ஏனெனில், இந்த செயலி டாக்டர்களுக்கான பேஸ்புக்காக திகழ்கிறது.

அடிப்படையில் இந்த செயலி டாக்டர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை. ஆனால், இது பேஸ்புக் போல நிலைத்தகவல்கள், விடுமுறை கால படங்களுக்கு எல்லாம் இடம் அளிக்காமல், மருத்துவம் சார்ந்த பகிர்வுகளுக்காக என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில், டாக்டர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சிகிச்சை பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. டாக்டர்கள் தினத்தோறும், பல நோயாளிகளை பார்கின்றனர். நோயாளிகளின் நோய்க்கூறுகளை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும் அறிவும், அனுபவமும் இருந்தாலும், குறிப்பிட்ட சில நோயாளிகளின் பிரச்சனை டாக்டர்களுக்கே சவாலாக அமையலாம்.

இது போன்ற நேரங்களில் சீனியர் டாக்டர்களை அணுகி ஆலோசனை கேட்பது அல்லது துறை சார்ந்த வல்லுனரிடம் பேசுவது தான் சிறந்த வழி. இதை இணையம் மூலம் எளிதாக செய்ய வழி செய்கிறது டெய்லி ரவுண்ட்ஸ்.

டாக்டர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான நோயாளி சிகிச்சை பிரச்சனைகளை இதில் விரிவாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலியில் உறுப்பினராக இருக்கும் சக டாக்டர்கள், வல்லுனர்கள் இவற்றை படித்துப்பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இளம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான பாடக்குறிப்புகள் போலவும் இது அமையும்.

இதுவே, இந்த செயலியின் முக்கிய அம்சமாகவும் அமைகிறது. டாக்டர்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் இது வழி செய்கிறது.

டாக்டர்கள் மருத்துவ அனுபவம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்ய வேண்டும் எனும் எண்ணமே இந்த செயலிக்கான ஊக்கம் என இதன் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர்.தீபு செபின் (Dr Deepu Sebin) கூறுகிறார். டாக்டர் நிம்மி செரியன் மற்றும் டாக்டர் பிரியங் சவுபே ஆகியோருடன் இணைந்து 2014 ல் இந்த செயலியை அவர் ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவக்கினார்.

அந்த காலகட்டத்தில், சென்னை ஐஐடி வல்லுனர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்ததாகவும், அப்போது பொறியாளர்கள் ஸ்டாக் ஓவர்புளோ போன்ற தளத்தின் மூலமாக தங்களுக்குள் எளிதாக தொடர்பு கொண்டு, துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு மிக எளிதாக தீர்வு காண்பதை பார்த்து வியந்து போனதாகவும் டாக்டர் செபின் கூறுகிறார்.

மருத்துவ துறையினருக்கும் இதே போன்ற ஒரு சமூக பகிர்வு வசதி தேவை என இந்த அனுபவம் அவருக்கு உணர்த்தியது. இதன் பயனாக உருவானது தான் டெய்லி ரவுண்ட்ஸ் செயலி.

இந்த செயலியில் பகிரப்படும், நோயாளிகள் சிகிச்சை பிரச்சனைகள், மருத்துவர்களை கொண்ட குழுவால் சரிபார்க்கப்பட்ட பின்னே வெளியிடப்படுவதாக செபின் கூறுகிறார். நம்பகத்தன்மைக்கு இது உதவுகிறது.

மேலும், மருந்துகள் தொடர்பான விவரங்கள், இ.சி.ஜி சோதனை தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான மேடையாகவும் இந்த செயலி விளங்குகிறது.

இந்திய மருத்துவதுறையினர் மத்தியில் இந்த செயலி பிரபலமாக இருப்பதோடு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச மருத்துவதுறையினராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவர்களை சென்றடைவதற்கான ஏற்ற மேடையாகவும் இந்த செயலி உருவாகியுள்ளது.

செயலியை அணுக: https://www.dailyrounds.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.