டெக் டிக்ஷனரி- 22 சர்ஃபிங் (surfing )- இணைய உலாவுதல்

jeanarmourpollyஇணையமும், வலையும் பல புதிய வார்த்தைகளை வாரி வழங்கியிருக்கின்றன.. அதே நேரத்தில், பல தொன்மையான வார்த்தைகளின் அர்த்தத்தையும் மாற்றியிருக்கின்றன அல்லது இணைய மொழியில் சொல்வது எனில் அப்டேட் செய்திருக்கின்றன.

இப்படி, இணையம்+ வலையால் புதுப்பிக்கப்பட்ட வார்த்தைகளின் வரிசையில் தான் சர்ஃபிங் எனும் ஆங்கில சொல் வருகிறது. பாரம்பரிய பொருள் படி பார்த்தால் சர்ஃபிங் என்றால், கடல் அலை மீது சறுக்குதல் என அர்த்தம். ஆனால், 1990 களுக்குப்பிறகு, இந்த சொல்லுக்கு இணையத்தில் உலாவுதல் என பொருள் கொள்ளப்படுகிறது.

சர்ஃபிங் என்றால், இணையத்தில் உலாவுதல் அல்லது இன்னும் கொச்சையாக சொல்வது எனில் இணைய மேய்தல் என பொருள் கொள்ளப்படுவது பரவலாக அறியப்பட்டதாக இருந்தாலும், இந்த பதத்தை இந்த பொருளில் முதன் முதலில் பயன்படுத்தியது யார் என்பது தெரியுமா?

ஜீன் ஆர்மர் பாலி (Jean Armour Polly ) என்பவர் தான் முதல் முதலில் இந்த பதத்தை பயன்படுத்தினார். பாலி ஒன்றும் சாதாரண நபர் இல்லை. இணைய அம்மா ( நெட்மாம்) என பாராட்டப்படும் பாலி, இணைய பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். எழுத்தாளர், நூலகர், இணைய தூதர் என பல முகங்களை கொண்ட, பாலி வலை அறிமுகமான காலத்தில், அம்மாக்கள் மற்றும் சிறார்களுக்கு இணையத்தில் வழிகாட்ட இண்ட்நெர்நெட் யெல்லோ பேஜ்ஸ் எனும் வழிகாட்டி புத்தகங்களை எழுதி வந்தார்.

இணைய கழகம் அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாகவும் திகழும், பாலி, 1992 ல் வில்சர்ன் லைப்ரரி புல்லிடன் இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார். சர்ஃபிங் தி இண்டெர்நெட் என்பது தான் கட்டுரையின் தலைப்பு. இந்த கட்டுரையில் தான் அவர், இணையத்தில் உலாவுதல் என்றால் என்ன என்பதை, சரஃபிங் த இண்டெர்நெட் எனும் பதத்துடன் விளக்கியிருந்தார். இந்த கட்டுரையை அவர் இணையத்திலும் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து, இணையத்தில் உலாவுவதை விவரிக்க சர்ஃபிங் எனும் வார்த்தை பிரபலமானது.

இணைய பயன்பாட்டை விவரிக்கும் இந்த கட்டுரையை எழுதும் போது, இணையத்தை விவரிக்க சரியான உவமையை தேடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது விளம்பர படம் ஒன்றில், தகவல் சறுக்காளர் என பொருள்படும், இன்பர்மேஷன் சர்ஃபர் எனும் பதத்தை பார்த்து ஊக்கம் பெற்று, சர்ஃபிங் தி இண்டெர்நெட் எனும் சொற்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தை விவரிக்கும் உவமை, அதற்கான திறனையும், தேவைப்படும் உறுதியையும் உணர்த்த வேண்டும் என விரும்பியதாகவும், அதே நேரத்தில் அதில் உள்ள சவால்கள், குழப்பம், ஆபத்துகளையும் உணர்த்த வேண்டும் என நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் சர்ஃபிங் எனும் வார்த்தை கச்சிதமாக உணர்த்துவதோடு, இணையத்தில் இன்றளவும் சரியாக பொருந்துகிறது.

netmombookபாலி, நெட்மாம் எனும் சொந்த இணையதளத்தை நடத்தி வருகிறார். https://www.netmom.com/

இந்த தளத்தில் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். சர்ஃபிங் வார்த்தை இடம் பெற்ற மூலக்கட்டுரையை படிக்க விரும்பிலாம், குடென்பெர்க் திட்ட இணையதளத்தில் அதை வாசிக்கலாம்: www.gutenberg.org/ebooks/49

இணைய வரலாறு என்று வரும் போது லிவிங் இண்டெநெட் தளத்தை அடித்துக்கொள்ள முடியாது. இதில், சர்ஃபிங் வார்த்தையை பாலி பயன்படுத்தியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னரே ஒரு சில யூஸ்நெட் குழுக்களில் இதன் பயன்பாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாலி சுயேட்சையாக இந்த வார்த்தையை உருவாக்கியதும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது: https://www.livinginternet.com/w/wu_surf.htm

=

டெக் டிக்ஷனரி-22 சைபர் லோஃபிங் (cyberloafing ) – மின்வெளி திரிதல்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *