வலை 3.0: சென்னையில் செயல்பட்ட இணைய தகவல் பலகை சேவை

bbsசென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி.

வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும் முக்கியம். பாருங்கள், சமூக வலைத்தளங்களை எல்லோரும் பயன்படுத்துகிறோம். சமூக வலைத்தளம் என்றதும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தான் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், பேஸ்புக்கிற்கு முன்னரே சமூக வலைத்தளங்கள் உருவாகிவிட்டன என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம்.

பிரன்ஸ்டர், மைஸ்பேஸ் போன்ற தளங்கள் தான் இன்றைய சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கு முன்னோடி. அதிலும் மைஸ்பேஸ் ஒரு காலத்தில் இணையத்தில் கொடி கட்டிப்பறந்தது. அது மட்டும் அல்ல, பயனாளிகள் தங்களுக்கான பக்கங்களை உருவாக்கி கொள்வதில் மைஸ்பேஸ் வழங்கிய வசதி பேஸ்புக்கின் டைம்லைன் சேவைகளை எல்லாம்விட செறிவானது. சந்தேகம் எனில் பழைய மைஸ்பேஸ் பக்கங்களை கண்டறிந்து பாருங்கள்.

மைஸ்பேசை பேஸ்புக் பின்னுக்குத்தள்ளியது இணைய வரலாறு என்றாலும், சமூக வலை வரலாற்றில் மைஸ்பேஸ் இடத்தை மறுப்பதற்கில்லை.

மைஸ்பேஸ் மட்டும் அல்ல, அதற்கு முன் தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டுஇன் அறிமுகம் ஆகியிருந்தது. அதற்கும் முன், பழைய பள்ளி நண்பர்களை தேட உதவும் கிலாஸ்மேட்ஸ் தளமும், அமெரிக்க இந்தியரால் துவக்கப்பட்ட ஹை5 தளமும் அறிமுகம் ஆகியிருந்தன.

நிற்க, சமூக வலைப்பின்னல் தளங்களை வரலாற்றை பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு இரண்டு விஷயங்கள் மட்டும்:

ஒன்று, சிக்ஸ்டிகிரீஸ் தளம் தான், உலகின் முதல் அதிகாரப்பூர்வ சமூக வலைப்பின்னல் தளமாக கருதப்படுகிறது.

இரண்டாவது விஷயம், சிக்ஸ்டிக்ரீஸ் தளத்தில் இருந்து சமூக வலைப்பின்னல் யுகம் துவங்குகிறது என்றாலும், இதற்கு ஒரு முன் வரலாறும் இருக்கிறது. பி.பி.எஸ் என பிரபலமாக குறிப்பிடப்படும் தகவல் பலகை சேவை தான் அது.

தகவல் பலகை சேவை வசதியை, இணையம் பிரபலமாவதற்கு முன்னதாகவே, இணைய வசதி போன்ற இணைப்பு வசதியை சாமானிய மக்கள் பயன்படுத்த வழி செய்த சேவை என வர்ணிக்கலாம். ஒரு தொலைபேசி இணைப்பு மற்றும் மோடம் ( அப்படி ஒரு சாதனம் இருந்தது- இன்னமும் இருக்கிறது). வழியே ஒரு மைய டெர்மினிலில் ( கம்ப்யூட்டர்) உள்ளே நுழைந்து, தகவல்களை அணுகி, நாமும் தகவல்களை இடம் பெற வைக்க தகவல் பலகை வசதி வழி செய்தது.

இன்றையை வாட்ஸ் அப்பில் நாம் செய்யும் அநேக விஷயங்கள் தகவல் பலகையில் செய்யலாம். அதாவது, தகவல்களை வாசிக்கலாம், பகிரலாம், உரையாடலாம், இன்னும் பல செய்யலாம். ஆனால் அதன் இடைமுகம் கொஞ்சம் சிக்கலாக இருக்கும்.

உண்மையில் தகவல் பலகை வசதியின் வரலாற்றை புரிந்து கொண்டால், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக சேவையை இன்னும் கொஞ்சம் பொறுப்பாக பயன்படுத்த தோன்றும்.

பிபிஎஸ்- தகவல் பலகை வரலாறு பற்றி இணையத்தில் எளிதாக தெரிந்து கொள்ளலாம். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்தியாவிலும் பல தகவல் பலகை சேவை செயல்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இணையம் 1995 ல் பொது மக்களுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னரே தகவல் பலகை வசதி வந்துவிட்டது. முதல் தகவல் பலகை சேவை கொல்கத்தாவில் அறிமுகம் ஆனதாக அறிய முடிகிறது.

இவ்வளவு ஏன் நம்ம சென்னையிலும் தகவல் பலகை சேவை செயல்பட்டிருக்கிறது. பிரபலமான சென்னைக்கல்லூரி ஒன்றில் பிபிஎஸ் சேவை செயல்பட்டதற்கான தகவலை இணையத்தில் இந்திய தகவல் பலகை தொடர்பான தேடலில் பார்த்தேன். அது எந்தக்கல்லூரி யூகிக்க முடிகிறதா? கல்லூரி பெயர் மட்டும் போதாது, அதற்கான இணைய ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியுமா? உங்களுக்கான க்ளு. லைவ்வயர் எனும் சேவை இதற்கு உதவியிருக்கிறது.

சென்னையில், ஐஐடி உள்ளிட்ட வேறு இடங்களில் இந்த வசதி செயல்பட்டதா என அறிய விருப்பம். தகவல் பலகை பயன்படுத்திய பழைய ஜாம்பவான்கள் அல்லது, அத்தகைய நபர்களை அறிந்தவர்களும் தகவல் தரவும்.

இணைய வரலாற்றை, இணையதளங்கள் மூலம் விவரிக்கும் வலை 3.0 தொடருக்கான தேடலின் ஒரு பகுதியாக தெரிந்து கொண்ட விஷயங்கள் இவை. உங்களுக்கும் ஆர்வம் இருந்தால், வலை 3.0 பதிவுகளை படித்துப்பார்த்து கருத்து சொல்லவும்;

http://cybersimman.com/?s=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+3.0

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.