மோடியின் டிவிட்டர் முயற்சியும், ஸ்வீடனின் முன்னோடி திட்டமும்!

merlin_143248590_39b8f5c5-aa33-44f1-835a-979ebb6987f3-jumboபிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பெண்களிடம் ஒப்படைத்த செயல் பற்றி சீர் தூக்கி பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால், இது புதுமையானது என நீங்கள் நினைத்தால், இதற்கு முன்னரே இணைய உலகில் இதே போன்ற ஒரு முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் தான் இந்த முயற்சி அரங்கேறியது. 2011 ம் ஆண்டின் இறுதியில் ஸ்வீடன், வேறு எந்த நாடும் செய்யத்துணியாத ஒரு முயற்சியாக, தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை சாமானிய மக்களிடன் ஒப்படைத்தது. அதாவது, ஸ்வீடன் டிவிட்டர் கணக்கை (@Sweden ) வாரம் ஒரு சாமானியர் நிர்வகிப்பார் என அறிவித்தது.

ஸ்வீடனின் இந்த அறிவிப்பை ஜனநாயக புதுமை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி, நாட்டின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கை, மக்களிடம் ஒப்படைக்க பெரும் துணிச்சல் தேவை. அதைவிட அதிக நம்பிக்கை தேவை. இப்போது சமூக ஊடக உலகம் இருக்கும் நிலையில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

சமூக ஊடகம் தனிப்பட்ட தாக்குதலுக்கான களமாகவும், பொய்ச்செய்திகளும், வதந்திகளும் உலாவும் இடமாகவும் மாறத்துவங்காத கால கட்டத்தில் ஸ்வீடன் இந்த முயற்சியை மேற்கொண்டது.

ஸ்வீடன் கழகம் ( ஸ்வீடன் இன்ஸ்டிடியூட்) மற்றும் அந்நாட்டு சுற்றுலாத்துறையான விசிட் ஸ்வீடன் அமைப்புகள் இணைந்து, கியூரேட்டர்ஸ் ஆப் ஸ்வீடன் (https://curatorsofsweden.com/) திட்டத்தை துவக்கியது. இதன் கீழ், ஸ்வீடனின் டிவிட்டர் பக்கம், வாரம் ஒரு ஸ்வீடன் குடிமகனிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் சாமானியர் தங்கள் கருத்துகள், எண்ணங்கள், கதைகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவை ஸ்வீடனுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். எதற்கும் தடையில்லை. பதிவுகள், ஸ்வீடன் சட்டத்திற்கு புறம்பாக இருக்க கூடாது, தனிப்பட்ட தாக்குதலாக அமையக்கூடாது மற்றும் பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது ஆகிய விதிமுறைகள் மட்டுமே விதிக்கப்பட்டன.

வழக்கமாக மீடியாக்களில் ஸ்வீடன் பற்றி பெறக்கூடிய கருத்துக்களில் இருந்து மாறுபட்ட, பரவலான கருத்துகளை அளிப்பதே, இந்த முயற்சியின் நோக்கமாக இருந்தது.

எதிர்பார்க்க கூடியது போலவே, நாட்டின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை பொதுமக்களிடன் ஸ்வீடன் ஒப்படைத்த இந்த செயல், சர்வதேச அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இது டிவிட்டர் கணக்கை ஜனநாயக முறைப்படி நடத்தும் புதுமை முயற்சி என்றாலும், இதெல்லாம் சரியாக வருமா? என்ற சந்தேகமும், கேள்விகளும் முன் வைக்கப்பட்டன.

ஏனெனில், அரசு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் போன்றவை பொதுவாக அதிகாரிகளாலேயே நிர்வகிக்கப்படும். அவை பெரும்பாலும் அரசு கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். இன்னும் பல எழுதப்படாத விதிகள் பின்பற்றப்படும்.

இதற்கு மாறாக, நாட்டின் டிவிட்டர் பக்கத்தை பொதுமக்கள் கைகளில் ஒப்படைப்பது என்றால், ஒருவிதத்தை அதை விஷப்பரீட்சை என்றும் சொல்லலாம். மாபெரும் ஜனநாயக முயற்சி என்றும் சொல்லலாம்.

சரி, ஸ்வீடனின் இந்த டிவிட்டர் ஜனநாயக முயற்சி என்ன ஆனது என்று அறிந்து கொள்ள ஆர்வமா? பெரிதாக விபரீதம் ஏதும் நடந்துவிடவில்லை. அதற்காக சர்ச்சைகள் இல்லாமலும் இல்லை. ஆனால், ஆச்சர்யம் என்னவெனில், 2018 ல் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன், இந்த திட்டம் ஏழு ஆண்டுகள் அமலில் இருந்தது.

இந்த கால கட்டத்தில், 356 பேர் ஸ்வீடன் டிவிட்டர் கணக்கிற்கு பொறுப்பேற்றிருந்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேலான குறும்பதிவுகள் வெளியிடப்பட்டன. ஒரு லட்சத்திற்கு மேல் புதிய பாலோயர்கள் கிடைத்தனர். இந்த முன்னோடி முயற்சிக்கு நிறைய பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்தன.

ஆனால், இடையே நிறைய சர்ச்சைகளும் உண்டாயினர். டிவிட்டர் கணக்கில் வெளியான குறும்பதிவுகள் கூட பிரச்சனையை உண்டாக்கவில்லை. ஆனால் அதற்கு பாலோயர்கள் தெரிவித்த பின்னூட்டங்கள் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின. இதன் விளைவாக ஒரு சில பாலோயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.

ஒரு கட்டத்தில், போதும் இந்த இணைய பரிசோதனை என ஸ்வீடன் முடித்துக்கொண்டது. ஆனால், இதற்காக உருவாக்கப்பட்ட அதிகார்ப்பூர்வ இணையதளம் இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பகிரப்பட்ட குறும்பதிவுகள் அனைத்தையும் இப்போதும் இந்த தளத்தில் படிக்கலாம். திட்டத்தில் பங்கேற்றவர்கள் பற்றிய விவரங்களும் உள்ளன.

பொதுமக்களிடம் சமூக ஊடக கணக்கை ஒப்படைத்தால், எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பழைய குறும்பதிவுகளை படித்துப்பார்க்கலாம். தற்போதைய சமூக ஊடக நிலையுடன் ஒப்பிட்டு இதை ஆய்வும் செய்யலாம்.

சமூக ஊடகங்களில், வெறுப்புகளையும் காழ்ப்புணர்ச்சியையும், தனிமனித தாக்குதலையும் எதிர்கொள்ளும் போது, இந்த முயற்சியை ஒரு உரைகல்லாக வைத்துப்பார்க்கலாம்.

நிற்க, ஸ்வீடனின் இந்த முன்னோடி திட்டம் மற்ற நாடுகளிலும் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட வழி வகுத்தது. இங்கிலாந்து நாட்டில் @PeopleofLeeds எனும் மக்கள் கணக்கு துவக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலும் இது எதிரொலித்ததை விக்கிபீடியா மூலம் அறிய முடிகிறது:  @WeAreAustralia and @TweetWeekUSA, ,@CuratorsMexico , @BasquesAbroad

அது மட்டும் அல்ல, இப்படி சமூக ஊடக கணக்கை சுழற்சி முறையில் மக்களிடம் ஒப்படைக்கும் முறை , சுழற்சி முறை பராமரிப்பு (RotationCuration) என்றும் குறிப்பிடப்படும் நிலை உண்டானது.

சமூக ஊடக பயன்பாடு மற்றும் இணைய பயன்பாடு, அதன் தாக்கம் பற்றியெல்லாம் பேசும் போது, ஒரு போதும் ஸ்வீடனின் டிவிட்டர் முயற்சியை மறந்துவிடக்கூடாது.

இணைப்புகள்:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.