டிஜிட்டல் காக்டெய்ல் – எங்கே என் வேற்று கிரகவாசி?

seti-array-768x768இணைய வரலாற்றை அறிந்தவர்கள் ’செடி@ஹோம்’ முன்னோடி திட்டம் பற்றியும் அறிந்திருக்கலாம். வேற்று கிரகவாசிகள் தேடலில் ஈடுபட்டிருந்த இணைய திட்டம் இது. ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் பிரபஞ்சத்தில் வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா? எனும் கேள்விக்கு விடை காணும் நோக்கத்துடன் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலை சார்பில், செட்@ஹோம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ராட்சத தொலைநோக்கிகள் மூலம் பெறப்படும் சமிக்ஞ்சைகளில் இருந்து வேற்று கிரகவாசிகள் தொடர்பான குறிப்பு கிடைக்கிறதா என அறிவதை இந்த ஆய்வு நோக்கமாக கொண்டிருந்தது. இந்த தகவல்களை அலசி ஆராய, எக்கச்சக்கமான கம்ப்யூட்டர் ஆற்றல் தேவை என்பதால், இந்த பணியை உலகம் முழுவதும் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு பிரித்தளிக்க தீர்மானிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் ஆற்றலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து, தங்கள் கம்ப்யூட்டர்களையும் ஆய்வில் இணைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு, கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படாமல் ஓய்வில் இருக்கும் நேரத்தில், அதன் ஆற்றல் இந்த ஆய்வுக்கான அலசில் பயன்படுத்திக்கொள்ளப்படும். இதற்கு விநியோகிக்கப்பட்ட கம்ப்யூட்டிங் என்று பெயர். 1999 மே மாதம் துவங்கப்பட்ட இந்த ஆய்வு திட்டத்தில் ஐம்பது லட்சம் பேருக்கு மேல் பங்கேற்று தங்கள் கம்ப்யூட்டர் ஆற்றலை தானமாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் இனியும் கம்ப்யூட்டர் நன்கொடை தேவைப்படாது என்றும், செடி@ஹோம் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் கிடைத்த தரவுகளை எல்லாம் அலசி முடித்து விட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. https://setiathome.berkeley.edu/
ஏலியன்கள் இருப்பு பற்றி முடிவுக்கு வராமல் இந்த ஆய்வு திட்டம் முடிவுக்கு வந்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், நீங்கள் விரும்பினால், இதே போன்ற மற்ற இணைய வழி ஆய்வுகளிலும் பங்கேற்கலாம். ஸ்டான்போர்டு பல்கலை சார்பில், Folding @home மூலம் மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் உங்கள் கம்ப்யூட்டரை இணைத்துக்கொள்ளலாம். தற்போது கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியும் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக இமோஜி!
இணைய உரையாடல்களிலும், வாட்ஸ் அப் அரட்டைகளிலும் இமோஜிகளை பலவிதங்களில் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் இங்கிலாந்து அம்மா ஒருவர், கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இமோஜியை புதுமையாக பயன்படுத்தி பாராட்டுகளை அள்ளியிருக்கிறார். உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கைகளை நன்றாக கழுவுவது சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு இதை புரிய வைப்பது எப்படி? இதற்கு தீர்வாக தான், ஹன்ச் ஆர்மி எனும் பேஸ்புக் பக்கத்தை நடத்தி வரும் இங்கிலாந்து பெண்மணி, இமோஜிகளை நாடியிருக்கிறார். அவர், தன் குழந்தைகளின் கைகள் மீது, அவர்களுக்கு பிடித்தமான இமோஜிகளை வரைந்து பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆக, மாலை வீடு திரும்பும் போது, குழந்தைகள் கைகளை பார்த்தே ஒழுங்காக கை கழுவியுள்ளனரா என்பதை தெரிந்து கொண்டு விடலாம் என்பது அவர் ஐடியா. பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானோர், இந்த ஐடியாவுக்கு லைக் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதே போலவே, கொரோனா பரவாமல் தடுக்க, முகத்தில் கை வைக்காமல் இருப்பதும் நல்லது என சொல்லப்படுகிறது. இதற்காகவும் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://donottouchyourface.com/ எனும் அந்த தளம், கம்ப்யூட்டர் வெப்கேம் வழியே உங்களை பார்த்துக்கொண்டே இருந்து, முகத்தில் கை வைக்கும் போதெல்லாம் எச்சரிக்கை செய்கிறது.

இன்ஸ்டாகிராம் கலைஞர்
இன்ஸ்டாகிராமில் எத்தனையோ புகைப்பட கலைஞர்கள் கலக்கி கொண்டிருக்கின்றனர். ஆனால் தாமஸ் டியூக் எனும், புகைப்பட கலைஞர், தனது காமிரா ஆர்வத்தை, திரைப்பட ஆர்வத்துடன் இணைத்து இன்ஸ்டாகிராமில் புதுமையான படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். ஸ்டெப்பிங்த்ருபிலிம் (@steppingthroughfilm ) எனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், திரைப்படங்களில் இருந்து ஸ்டில்களை பகிர்ந்து கொள்கிறார். இதில் என்ன புதுமை என்று கேட்கலாம். டியூக், தான் பகிர்ந்து கொள்ளும் திரைப்பட காட்சி, உண்மையில் எந்த இடத்தில் படமாக்கப்பட்டதோ, அந்த லொகேஷனில் படம் எடுத்து, அதில், திரைக்காட்சியை பொருத்தி, இந்த கொலேஜை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். காட்சி எடுக்கப்பட்ட இடத்தில், படக்காட்சியை பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவமாகவே இருக்கிறது.

எல்லோருக்குமான வலை
வெப் என பரவலாக குறிப்பிடப்படும் ’வலை’யை கண்டுபிடித்தவரான டிம் பெர்னர்ஸ் லீ, திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், அவர் இணையம் பெண்களுக்கும், யுவதிகளுக்கும் பாதுகாப்பற்ற இடமாக மாறியிருப்பதாக கவலையை பதிவு செய்துள்ளார். இணையத்தில் பெண்கள், பாலியல் தொல்லை, சீண்டல், மிரட்டல் போன்ற பலவித இன்னல்களுக்கு உள்ளாவதாகவும், இவற்றின் விளைவாக பல பெண்கள் வேலையை விட்டு விலகுவது, படிப்பை கைவிடுவது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனுமதி இல்லாமல் அந்தரங்க படங்கள் பகிரப்படுவது, பெண்களின் கருத்துகள் மவுமனாக்கப்படுவது போன்ற செயல்களால், பெண்களுக்கும், சிறுமிகளுக்குமான இடமாக வலை இல்லை என முடிவுக்கு வர வேண்டியிருப்பதாக அவர் குறைப்பட்டுக்கொண்டுள்ளார். இதை மாற்றி வலை எல்லோருக்குமான இடமாக உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொலைதூர நட்பு
இணைய வசதி இருந்தால் போதும், அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். இப்படி எங்கிருந்து வேண்டுமானால் பணி செய்வதை ரிமோட் வொர்கிங் என்கின்றனர். இதில் பல்வேறு அணுகூலங்கள் உண்டு என்றாலும், தனிமை ஒரு பிரச்சனையாக இருக்கும். இந்த தனிமை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தொலைதூர பணியாளர்கள் தங்களுக்கான புதிய நண்பர்களை தேடிக்கொள்ள ரிமோட்ரவுலெட் (https://www.remoteroulette.com/) இணையதளம் உதவுகிறது. இதே போல, தனிமையில் இருக்கும் இன்னொரு தொலைதூர பணியாளரை அடையாளம் கண்டு, அவருடன் நட்பு கொள்ள பரிந்துரைக்கிறது. அதன் பிறகு, இருவரும் இமெயில் உள்ளிட்ட தங்களுக்கு விருப்பமான வழிகளில் தொடர்பு கொண்டு நட்பு வளர்க்கலாம்.

நன்றி; குமதம் இதழில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *