இணையத்தில், கொரோனா தகவல்களை தேடுவது எப்படி?

Screenshot_2020-04-04 DuckDuckGo — Privacy, simplifiedமாற்று தேடியந்திரமான டக்டக்கோ பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன். கூகுள் போல விளம்பர வலை விரிக்காமல், பயனாளிகளின் தனியுரிமையை (பிரைவசி) மதிக்கும் தேடியந்திரமாக டக்டக்கோ இருப்பதே இதற்கு காரணம்.

இப்போது, கொரோனா அலைக்கு நடுவே, டக்டகோ செயல்பாடு எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

டக்டகோவுக்குள் நுழைந்து, கொரோனா தொடர்பான தகவல்களை தேடலாம் என்று பார்த்தால், முகப்பு பக்கத்திலேயே, கோவிட்-19 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள், குறிப்புகளை நாடுங்கள் என தானாக வழிகாட்டுகிறது.

கோவிட்-19 பக்கத்திற்கான இணைப்பில் கிளிக் செய்தால், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அண்மை புள்ளி விவரங்களை பறவை பார்வையாக தெரிந்து கொள்ள முடிவதோடு, அண்மை செய்திகளையும், கொரோனா தொடர்பான அதிகாரப்பூர்வ அமைப்புகளின் தளங்களையும் பார்க்க முடிகிறது.

எல்லாமே, நம்பகமான தகவல்களை அளிக்கும் அதிகாரப்பூர்வ தளங்கள் என்பதை கவனிக்க வேண்டும். சர்வதேச முடிவுகளுக்கான பக்கத்தில், உலக சுகாதார அமைப்பின் தளம் மற்றும் அமெரிக்க அரசின் தகவல்கள் பிரதானமாக இடம் பெறுகிறது.

Screenshot_2020-04-04 covid-19 at DuckDuckGo(1)இந்தியாவுக்கான பக்கத்தை தேர்வு செய்தால், இந்திய அரசின் இணையதளம் பெறக்கூடிய சுகாதார தகவல்கள் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன. விக்கிபீடியாவின் கொரோன வைரஸ் தகவல் பக்கமும் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.

கொரோனா தொடர்பான பொய்ச்செய்திகளும், அரைகுறை தகவல்களும் எக்கச்சக்கமாக உலாவும் நிலையில், டக்டக்கோ பொறுப்பாக, கோவிட்-19 தலைப்பின் கீழ் நம்பகமான தகவல்களை பட்டியலிட்டு வழி காட்டுகிறது.

நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்: https://duckduckgo.com/?q=covid-19&ia=news

(. பி.கு: கொரோனா விஷயத்தில் கூகுளும், பொறுப்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள், தளங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.