ஜூம் சந்திப்புகளின் பக்க விளைவுகளும், பின் விளைவுகளும்!.

http___com.ft.imagepublish.upp-prod-us.s3.amazonawsநம்மவர்களை சும்மா சொல்லக்கூடாது, ஒரு சில மென்பொருள் சேவைகளை வெறித்தனத்துடன் தழுவிக்கொண்டு விடுகின்றனர். ’பேஸ்புக்’ இதற்கு நல்ல உதாரணம். பேஸ்புக் அறிமுகமான அமெரிக்காவில், இளம் தலைமுறையினர் இதை வயோதிகர்களின் கூடாரம் என ஒதுக்கி தள்ளி ’ஸ்னேப்சேட்’ போன்ற புதுயுக சேவைகளை நாடத்துவங்கிய போது, நாம் வலைப்பதிவுகளை கூட கிடப்பில் போட்டுவிட்டு, பேஸ்புக் டைம்லைனில் அடைக்கலம் ஆனோம்.

இதே போல ’வாட்ஸ் அப்’ சேவையையும் ஆரத்தழுவிக்கொண்டோம். இடையே ’டிக்டாக்’கையும் ஆராதிக்க துவங்கினோம்.

இந்த வரிசையில் இப்போது ’ஜூம்’ செயலியும் சேர்ந்திருக்கிறது. லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் ஜூமில் நடத்தப்படுவதில் வியப்பில்லை ஆனால் இலக்கிய கூட்டங்களும், விவாத நிகழ்ச்சிகளும் கூட ஜூமுக்கு இடம்பெயர்ந்துள்ளது. திடிரென பார்த்தால் எல்லோரும் ஜூமில் ஏதாவது ஒரு கூட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

ஜூம் என்பது வீடியோ உரையாடல்களுக்கான வினைச்சொல்லாகி இருப்பதை, நம்மவர்கள் இன்னும் இயல்பாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர்.

நிற்க, நம்மவர்களின் ஜூம் மோகத்தை விமர்சிப்பதோ, கேலி செய்வதோ நோக்கம் இல்லை. ஜூம் சந்திப்புகள் கொண்டு வந்திருக்கும் வேறு விதமான சிக்கல்கள் பற்றி பேசுவதற்காகவே, இந்த சுட்டிக்காட்டல்.

கொரோனா பாதிப்பு காலத்தில், வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டியிருப்பதாலும், நேரடி சந்திப்புகளை தவிர்க்க வேண்டியிருப்பதாலும், அலுவல் நோக்கிலும் சரி, தனிப்பட்ட நோக்கிலும் சரி, மற்றவர்களுடன் உரையாட வீடியோ சந்திப்புகளை நாட வேண்டியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பலரும் உற்சாகத்துடன் அல்லது வேறு வழியில்லாமல், வீடியோ சந்திப்புகளை நாடத்துவங்கியுள்ளனர். நேரில் சந்திக்க முடியாத சூழலில், இப்படி மெய்நிகராக வீடியோ வடிவில் பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும் நல்லது தான். இன்னொரு விதத்தில் பார்த்தால், இதுவரை வர்த்தக உலகில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த வீடியோ சந்திப்பு இப்போது, வெகுஜனமயமாகி இருப்பதாகவும் கொள்ளலாம். இதுவும் நல்லது தான்.

ஆனால், இந்த வீடியோ சந்திப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நாம் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது தான் விஷயம். ஒரு வாரமாக இடைவிடாமல் ஜூம் கூட்டங்களில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறேன், முடியல’ என அலுத்துக்கொள்வதை மீறி, ஜூம் பாணி சந்திப்புகள் வேறு சில பக்கவிளைவுகளை கொண்டதாக இருப்பதை அறிய முடிகிறது.

அவற்றில் முக்கியமானது, ஜூம் சந்திப்புகள் நம்மை களைப்படைய வைக்கின்றன என்பதாகும். ஜூம் சந்திப்புகள் ஏன் நம்மை களைப்படைய வைக்கின்றன? எனும் கேள்வியை மையமாக கொண்டு பிபிசி இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில், இதற்கான காரணங்கள் அலசி ஆராயப்படுகின்றன.

இந்த கட்டுரையில், கியான்பெய்ரோ பெட்ரிகிலியரி ( Gianpiero Petriglieri ) எனும் வல்லுனர் வீடியோ சந்திப்புகள் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன:

நேரடி சந்திப்புகளை விட, வீடியோ சந்திப்புகளுக்கு கவனம் அதிகம் தேவை. ஏனெனில், முக உணர்வுகள், பேசும் தொணி, குரலின் தன்மை, உடல் மொழி உள்ளிட்ட பேச்சு அல்லாத அறிகுறிகளை நாம் கூடுதலாக கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த கூடுதல் கவனம் நம் ஆற்றலை உறிஞ்சுகிறது என்கிறார் பெட்ரிகிலியரி. மேலும், நாம் ஒன்றாக இருப்பதாக மனம் உணர்ந்தாலும், நம் உடல் இவ்வாறு இல்லை என்பதை உணர்கின்றன. இந்த முரண் உணர்வு ஏற்படுத்தும் பாதிப்பும் களைப்படைய வைக்கிறது என்கிறார் அவர்.

நேர் வழி பேச்சு போல், வீடியோ பேச்சில் இயல்பாக உரையாடலில் நம்மால் இளைப்பாற முடிவதில்லை என்றும் அவர் சொல்கிறார்.

மவுனமும் இன்னொரு பிரச்சனை என்கிறார். நேர் வழி பேச்சில், மவுனம் இயல்பாக அமைகிறது. ஆனால், வீடியோ சந்திப்புகளில் மவுனம், தொழில்நுட்பம் பற்றிய கவலையை உண்டாக்கி, சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்.

அது மட்டும் அல்ல, நம்முடைய வாழ்க்கையில் வேலை, குடும்பம், உறவினர்கள் என வெவ்வேறு அம்சங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு அவற்றுக்குரிய இடம் இருந்த நிலை மாறி, இப்போது வீட்டிலேயே எல்லாவற்றையும் மேற்கொள்ள நேர்வதும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.

நம்முடைய சமூக பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இடம் இருந்தது நொறுங்கிவிட்டது என்று இந்த நிலை குறிப்பிடும் பெட்ரிகிலியரி, நாம் மது அருந்தும் இடத்திலேயே, நம்முடைய பேராசிரியர் அல்லது பெற்ரோரை சந்தித்து பேசினால் எப்படி இருக்கும், அது போல தான் இப்போது நிகழ்கிறது என்கிறார்.

வீடியோ சந்திப்புகளை நாம் விரும்பி மேற்கொள்வது என்பது வேறு, நம் மீது இவை திணிக்கப்படுவது வேறு என்றும் அவர் சொல்கிறார். நாம் தற்காலிகமாக இழந்திருக்கும் தொடர்புகளை வீடியோ அழைப்புகள் நினைவூட்டுகின்றன என்றும் அவர் சொல்கிறார். ஒவ்வொரு முறை சக ஊழியரை வீடியோவில் பார்க்கும் போது, நாம் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதாகவும், இது எல்லா தரப்பினருக்கும் களைப்பை உண்டாக்குகிறது என்கிறார் அவர்.

வீடியோ சந்திப்புகளால் ஏற்படும் களைப்பு குறித்து, பெட்ரிகிலியரி தனி கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறார். நாம் எல்லோரும் ஜூம்பிகளாகி கொண்டிருக்கிறோம் என அதில் அவர் எச்சரிக்கிறார். அதாவது, ஜூம் சந்திப்புகளால் களைத்துப்போகிறவர்கள் என்கிறார்.

களைத்துப்போகிறோம், நொறுங்கிப்போகிறோம், உறிஞ்சப்படுகிறோம்’ என்று தான் இந்த கட்டுரையை அவர் துவக்குகிறார். ஜூம் கூட்டங்களால் இப்படி தான் உணர்கிறோம் என்பவர், வீடியோவில் பார்த்துக்கொண்டாலும், நேரில் சந்திக்க முடியாத உணர்வு ஒருவித மெய்நிகர் துயரத்தை உண்டாக்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

”பார்க்கிறோம், ஆனால் இல்லாததையும் உணர்கிறோம்’, என வீடியோ சந்திப்புகள் தொடர்பான தனது சக வல்லுனர் கார்னல் என்பவர் கூறுவதை சுட்டிக்காட்டி, வீடியோ சந்திப்புகள் உணர வைக்கும், இழப்பு பற்றி பேசுகிறார்.

மேலும் திணிக்கப்பட்ட வீடியோ சந்திப்புகளில் பரிவை எதிர்பார்க்க முடியாது என்று கூறுபவர், வீடியோ சந்திப்புகளில் நாம் ஒன்றாகவும் இல்லை, பிரிந்தும் இல்லை எனும் நிலையை உணர்கிறோம், நம்முடைய கண்கள் பரஸ்பரம் பார்த்துக்கொண்டாலும், உடல்கள் அதை உணர முடியாதது பெரும் களைப்பை ஏற்படுத்துகிறது என்றும் விளக்குகிறார்.

இவை எல்லாம் சேர்ந்து தான் நம்மை ஜூம்பிகளாக்கி, சோர்ந்து போக வைக்கிறது என்கிறார் அவர்.

நாம் ஜூம் சந்திப்புகளில் மூழ்கி கொண்டிருக்கலாம் தவறில்லை, ஆனால், பெட்ரிகிலியரி போன்றவர்கள் சொல்வதையும் கொஞ்சம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அப்போது தான், வீடியோ சந்திப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கான வழி தேட முடியும்.

ஆதார செய்திகள்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.