மித்ரன் செயலியும், இந்தியர்களின் நாட்டுப்பற்றும்.

Mitron-app-759ஒரு தொழில்நுட்ப சேவையை உருவாக்க நாட்டுப்பற்று தூண்டுதலாக அமையலாம். ஆனால், நாட்டுப்பற்றை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு சிறந்த தொழில்நுட்ப சேவையை உருவாக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதிலும் நிச்சயமாக, நாட்டுப்பற்றை வர்த்தக நோக்கில் சாதகமாக்கி கொள்வதற்காக உருவாக்கப்படும் திடீர் சேவைகள் சிறந்ததாக இருக்க வாய்ப்பில்லை.

இப்போது சீன செயலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் திடீர் இந்திய செயலிகளை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்.

இந்திய சந்தையில் சீன ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வன்பொருள் உலகில் தான் இப்படி என்றில்லை, மென்பொருள் உலகிலும், டிக்டாக், ஹலோ, கேம்ஸ்கேனர் என்று சீன செயலிகளின் ஆதிக்கம் தான்.

இது ஒரு விதத்தில் இயல்பானது. ’டிக்டாக்’ உள்ளிட்ட செயலிகள், அவற்றின் பயன்பாடு அம்சம் மற்றும் மார்க்கெட்டிங் உத்திகளால் இந்திய சந்தையில் வெற்றி பெற்றுள்ளன. சிறு வீடியோ உருவாக்கு சேவையாக டிக்டாக்கின் நட்பான இடைமுகம் மற்றும் புதிய வீடியோக்களை அறிமுகம் செய்யும் அதன் அல்கோரிதம் ஆகிவற்றை அதன் வெற்றிக்கான முக்கிய அம்சங்களாக சொல்லலாம்.

நாளையே வேறு ஒரு நல்ல செயலி வந்தால், டிக்டாக்கின் சந்தையை காலி செய்துவிடக்கூடும். டிக்டாக் போன்ற செயலிகளின் ஆதிக்கத்தில் உள்ள ஒரே பிரச்சனை, அவற்றின் பிரைவசி கொள்கையும், அவை தகவல் திரட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளன எனும் குற்றச்சாட்டும் தான். மற்றபடி பயனாளிகள் சிறந்தது என கருதினால் டிக்டாக் இந்தியா உள்ளிட்ட எந்த சந்தையிலும் கோலோச்சுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

இந்த பின்னணியில், சீன செயலிகளுக்கு எதிரான உணர்வு சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு பரவலான ஆதரவையும் பெற்று வருகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முட்டலும், மோதலும் நிலவி வரும் நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின் சீனாவுக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில் தீவிரமாகி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சீனா செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுவதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இன்னொரு பக்கம் இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என்று சொல்லப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், நாம் எந்த மாதிரியான இந்திய செயலிகளை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்பது தான் கேள்வி. இதற்கான பதில் மித்ரன் மற்றும் ரீமூவ் சீனா ஆப்ஸ் செயலிகள் தான் என்றால், நம் நிலை பரிதாபம் தான்.

மித்ரன் செயலியின் மகத்துவத்தை பார்ப்பதற்கு முன், ரீமூவ் சீனா ஆப்ஸ் செயலி பற்றி பார்த்துவிடலாம். நாம் பயன்படுத்தும் செயலிகளில் எவை எல்லாம் சீனாவை சேர்ந்தது என இந்த செயலி சுட்டிக்காட்டுகிறது. சீன செயலிகளை நீக்குங்கள் என சொல்லாவிட்டாலும், இந்த செயலி மறைமுகமாக அதை தான் ஊக்குவிக்கிறது. ஒரு செயலி எந்த நாட்டைச்சேர்ந்தது என்பதை கண்டுபிடிப்பது எல்லாம் ஒரு விஷயமே அல்ல எனும் போது, சீன செயலிகளை அடையாளம் காட்டுவதை நோக்கமாக கொண்டு ஒரு சேவையில் என்ன புதுமை இருக்கிறது?

இதனிடையே, விதிமுறை மீறல் என கூகுள் இந்த செயலியை பிளேஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது.

மித்ரன் (Mitron ) செயலியை பொருத்தவரை, டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலி என்பது போன்ற வர்ணையோடு அறிமுகமானது. அதே வேகத்தில் 5 மில்லியன் முறைக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டு பரபரப்பையும் ஏற்படுத்தியது.

டிக்டாக்கிற்கு மாற்று என புகழப்பட்டாலும், முதல் பார்வையிலேயே இந்த செயலி டிக்டாக்கின் நகலே அன்றி, இதில் எந்தவித புதுமையும் இல்லை என்பது புரிந்துவிட்டது. மித்ரன் செயலியின் இடைமுகம் உள்பட அதன் அனைத்து அம்சங்களும் டிக்டாக் போலவே அமைந்திருந்தது.

இது போன்ற ஒரு நகல் செயலியை வைத்துக்கொண்டெல்லாம் டிக்டாக்கை ஒன்றும் செய்துவிட முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க, மித்ரன் செயலிக்கு என தனியே பிரைவசி கொள்கை தெளிவாக இல்லாதது முக்கிய பிரச்சனையாக முதலில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்திய செயலி என கொண்டாடப்பட்டதை மீறி, இதை உருவாக்கியது யார் என தெளிவாக உணர்த்தப்படாதது அடுத்த பிரச்சனையாக எழுந்தது. ஐஐடி பட்டதாரியால் உருவாக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டாலும், இந்த செயலியின் சுய அறிமுக பக்கத்தில் அதற்கான தகவல் இல்லை என்பது மட்டும் அல்ல, அதில் குறிப்பிடப்பட்டிருந்த இணையதளத்திலும் அதிக விவரங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

மித்ரன் செயலியின் இந்த மர்மம் விரைவில் வெளிப்பட்டது. உண்மையில் இது இந்திய செயலியே அல்ல, பாகிஸ்தானைச்சேர்ந்த இர்பான் ஷேக் என்பவர் உருவாக்கிய செயலியின் மூல நிரலை இந்திய மாணவர் ஷிவங் அகர்வால் என்பவர் விலை கொடுத்து வாங்கி அதை தூசி தட்டி மித்ரன் செயலியாக உலாவ விட்டிருக்கிறார் எனும் தகவலும் அம்பலமானது.

விஷயம் என்னவெனில், பாகிஸ்தானியர் டிக்டாக்கை அப்படியே நகலெடுத்து டிக்டிக் எனும் பெயரில் ஒரு செயலியாக்கி அதன் நிரலை, விற்பனைக்கு வைத்திருக்கிறார். இது போல செயலிகள் மற்றும் சேவைகளின் நிரலை வாங்கி விற்பதற்கு என்றே உருவாக்கப்பட்ட கோடுகென்யன் (https://codecanyon.net/) எனும் தளத்தில் இந்த செயலியை அவர் விற்பனைக்கு பட்டியலிட்டிருக்கிறார்.

பாகிஸ்தானியரிடம் இருந்து செயலியை வாங்கியதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஒரு நகல் செயலியை வாங்கி அதை உருமாற்றி இந்திய செயலியாக சந்தைப்படுத்துவதில் என்ன பெருமை இருக்கிறது. அதிலும், பிரைவசி அம்ச கொள்கைகளில் கவனம் செலுத்ததாதால் கூகுள் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இப்படி இருக்கிறது நமது சீன எதிர்ப்பு செயலிகளின் முயற்சி!

மித்ரன் செயலி பற்றிய செய்தி: https://indianexpress.com/article/technology/tech-news-technology/mitron-app-pakistan-connection-cyber-expert-5-million-users-vulnerable-6435884/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.