இந்த தளம் கொரோனா வாசிப்பான்

7187308d-6e98-4bb2-9078-28dffed4fbdfகொரோனா காலத்தில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என நோக்கும் இடம் எல்லாம் கொரோனா செய்திகள் தான் என்பதால், கொரோனா செய்திகள் போதுமே என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் கொரோனா அல்லாத தகவல்களை தேடிச்செல்வதும் இயல்பாக இருக்கிறது. அதிலும் எதிர்மறை செய்திகளில் இருந்து தப்பித்து ஓடும் வேட்கை தீவிரமாகவே உண்டாகிறது.
இப்படி கொரோனா அயர்ச்சிக்கு நடுவே, ஆசுவாசம் அளிகும் கொரோனா செய்தி தளமாக கொரோனா ரீடர் (https://coronareader.com/ ) விளங்குகிறது.
இந்த தளம் ஒரே இடத்தில் கொரோனா தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள வழி செய்கிறது. இணையத்தில் வெளியாகும் கொரோனா செய்திகளையும், கட்டுரைகளையும் தொகுத்தளிப்பதன் மூலம் இதை செய்கிறது.
இதன் இடைமுகமும் மிக எளிமையாக இருக்கிறது. ஒரு பக்கம் கொரோனா செய்திகள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. அதற்கு அருகிலேயே கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அல்ஜஸிரா, சிஎன்.என். பிபிசி உள்ளிட்ட நம்பகமான தளங்களில் இருந்து செய்திகள் , கட்டுரைகள் இடம் பெறுகின்றன.
செய்திகளையும், கட்டுரைகளையும் கிளிக் செய்து, வாசிப்பதற்கு வெளியே செல்லும் தேவையில்லாமல், தளத்திலேயே வாசிக்கலாம்.
கொரோனா மிகைத்தகவல்களில் சிக்கி கொள்ளாமல், அதே நேரத்தில் கொரோனா முக்கிய போக்குகளை தெரிந்து கொள்ள விரும்பினால், கொரோனா ரீடர் பயனுள்ளதாக இருக்கும்.
இதே போல, இந்திய மாணவர் ஒருவர், கொரோனா செய்திகளை சுருக்கமாக தெரிந்து கொள்ள கோவிட் ஷார்ட்ஸ் எனும் இணையதளத்தை உருவாக்கியுள்ளார்: https://covidshorts.s3.ap-south-1.amazonaws.com/index.html?ref=producthunt#

இணைய வாசிப்புக்கு உதவும் புதுமையான இணைய சேவை தொடர்பான அறிமுகம் இணைய மலர் மின்மடலில் இடம்பெற்றுள்ளது: https://cybersimman.substack.com/p/–63d
புதிய இணைய சேவைகளை அறிமுகம் செய்து கொள்ள இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்; https://cybersimman.substack.com/
இணைய மலர் மின்மடலை டெலிகிராம் சேனலிலும் பின் தொடரலாம். – https://t.me/valaiputhithu

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.