கொரோனா கால கலை வெளிப்பாடுகள்

2020globalVI-2-1536x1152கொரோனா கால பாதிப்பை மதுரையோ, நெல்லையோ எப்படி எதிர்கொள்கிறது என நமக்குத்தெரியவில்லை. அதாவது இதற்கான பதிவுகள் இல்லை. அதே போல, ஐதராபாத்தோ, கொல்கத்தாவோ எப்படி கொரோனாவை எதிர்கொள்கிறது என்றும் தெரியவில்லை.

அமெரிக்காவின் பெனிசில்வேனியா நகரம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வைரல் இமேஜினேஷன்ஸ் (https://viralimaginations.psu.edu/ ) இணையதளத்தை பார்க்கும் போது இப்படி தான் கேட்கத்தோன்றுகிறது. ஏனெனில், பெனிசில்வேனியாவில் வசிப்பவர்கள், கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதை கலாப்பூர்வமாக வெளிப்படுத்துவதை பதிவு செய்து வருகிறது.

கொரோனா கால கற்பனைகள் என புரிந்து கொள்ளக்கூடிய இந்த தளம், பெனிசில்வேனியா மக்களின் கொரோனா கால கலை படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

கொரோனா வைரஸ், பொருளாதார நோக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மனரீதியாகவும் மிகவும் பாதித்துள்ளது. இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள பலரும் பலவிதமான வழிகளை நாடி வருகின்றனர். சிலருக்கு ஒவியமும், கவிதைகளும் வடிகாலாக அமைந்துள்ளன.

இப்படி, ஓவியம் வாயிலாக அல்லது எழுத்து வடிவில் கொரோனா அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது. இதற்கான இணைய காட்சிப்பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கொரோனா கால படைப்புகளை சமர்பிக்கலாம். ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட படைப்புகளையும் பார்க்கலாம்.

ஓவியம் மற்றும் எழுத்து வடிவம் என இரண்டுக்கும் தனித்தனி பகுதிகள் உள்ளன. பெனிசில்வேனியா பகுதி மக்கள், கொரோனாவை எதிர்கொள்ளும் விதத்தை கலை வடிவில் இந்த தளம் பதிவு செய்து கொண்டிருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.