விவசாயிகளின் குரலை உரக்க ஒலிக்கும் டிராலி டைம்ஸ்

Ex3pgUjUcAQOXxUஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு முரசு நாளிதழ் துவங்கப்படவில்லை. இதற்கு முன் நடைபெற்ற அரபு வசந்தம் போராட்டத்தின் போதும், அந்த போராட்டத்திற்கான நாளிதழ் துவங்கப்படவில்லை. நம்ம அய்யாக்கன்னு விவசாயிகளோடு தலைநகர் தில்லிக்குச்சென்று போராட்டம் நடத்திய போதும், அவர்களுக்காக என்று ஒரு சிறு நாளிதழ் வெளியிடப்படவில்லை.

ஆனால், வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தனக்கான ’டிராலி டைம்ஸ்’ எனும் தனி நாளிதழை பெற்றிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விவசாய தன்னார்வலர்களால் துவக்கப்பட்டிருக்கும் டிராலில் டைம்ஸ் நாளிதழ், இன்னொரு விதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழில், அச்சு பதிப்பிலான பல பத்திரிகைகள் மூடப்பட்டு வந்த காலத்தில், அச்சு வடிவில் டிராலி டைம்ஸ் அறிமுகமானதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா உண்டாக்கிய பொதுமுடக்க சூழலில், தமிழில் பல முன்னணி நாளிதழ்களும், பத்திரிகைகளும் தற்காலிகமாக முடங்கும் நிலை ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஒரு சில பத்திரிகைகள் அச்சு பதிப்பை நிறுத்திக்கொள்வதாகவும் அறிவித்தன. புதிய தலைமுறை பத்திரிகையில் துவங்கி கல்கி வரை அச்சு பதிப்பு முடிவுக்கு வந்ததற்கான காரணம் ஆய்வுக்குறியது.

டிஜிட்டல் யுகத்தில் அச்சு வடிவிலான பத்திரிகைகளின் தேவை மற்றும் தாக்கம் குறித்த கேள்விகள் பல எழுகின்றன.

இந்த பின்னணியில், இந்திய தலைநகரின் விளிம்பில் விவசாயிகளின் உணர்வெழுச்சியான போராட்டத்தின் மத்தியில் டிராலி டைம்ஸ் நாளிதழ் அச்சு வடிவில் வெளியாகியுள்ளது.

டிராலி டைம்ஸ் நாளிதழ் தற்போது டிஜிட்டல் பதிப்பை பெற்று, அதற்கான இணையதளத்தையும் கொண்டுள்ளது என்றாலும், அச்சு பதிப்பே இதன் முதன்மையானதாக தொடர்கிறது. நாளிதழின் நோக்கம் மற்றும் தேவையை இது தெளிவாக உணர்த்துகிறது.

டிராலி டைம்ஸ் நாளிதழை இன்னமும் அறியாதவர்களுக்காக இந்த சுருக்கமான அறிமுகம்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து, கடந்த 2020 ம் ஆண்டு இறுதியில்  விவசாயிகள் பெருந்திரளாக போராட்டம் நடத்த துவங்கிய நிலையில், விவசாயிகள் எதற்காக போராட்டுகின்றனர் என்பதை விளக்குவதற்கும், போராட்ட கள நிகழ்வுகளை அதில் பங்கேற்கும் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும், டிராலி டைம்ஸ் நாளிதழ் துவங்கப்பட்டது.

மேலும், விவசாயிகள் போராட்டத்தை வெகுஜன ஊடகங்கள் உரிய கவனத்தோடு செய்தி வெளியிடவில்லை எனும் ஆதங்கம் பரவலாக இருந்த நிலையில், விவசாயிகளின் குரலை உரக்க ஒலிப்பதற்காக டிராலி டைம்ஸ் நாளிதழ் துவங்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்திற்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பாக பல்வேறு விதமான தவறான கருத்துக்களும், கற்பிதங்களும் உலா வந்து சூழலில், போராட்டம் பேசப்படும் விதத்தை தாங்களே தீர்மானிப்பது அவசியம் எனும் உணர்வில், விவசாய தன்னார்வலர்கள் குழு இணைந்து டிராலி டைம்சை கொண்டு வந்தது.

போராட்டத்தை கொச்சைப்படுத்தும் மற்றும் உள்நோக்கம் கற்பிக்கும் முயற்சிகளுக்கு பதிலடி தரும் வகையில் டிராலி டைம்ஸ் உதயமானது. பஞ்சாபி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் போராட்ட கள செய்திகளை தாங்கிய நான்கு பக்க நாளிதழாக முதல் பதிப்பு வெளியானது. செய்திகள், தலையங்கம், விவசாய போராட்ட வரலாறு உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றிருந்தன.

டிராலி டைம்ஸ் நாளிதழ், போராட்டத்தை ஒருங்கிணைக்கும் விவசாய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ வெளியீடு அல்ல. இந்த போராட்டத்தின் தன்னெழுச்சியான தன்மையால் ஊக்கம் பெற்ற இளைஞர்களால் இந்த நாளிதழ் துவங்கப்பட்டது.

பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள், வேளாண் சட்டத்திற்கு எதிரான அழைப்பை ஏற்று டிராக்டர்களில் போராட்ட களத்திற்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். இவர்களில் பலர் அங்கேயே தங்கவும் செய்தனர். போராட்ட களத்தில் குவிந்த விவசாயிகளுக்கான தங்குமிட ஏற்பாடு, உணவு வசதி என தேவைப்பட்ட பலவித உதவிகளை தன்னார்வலர்கள் ஊக்கத்துடன் செய்யத்துவங்கினர்.

இந்த பின்னணியில் தான், போராடும் விவசாயிகளுக்கு தகவல் பகிர்விலும் உதவி தேவை என உணர்ந்த இளைஞர்கள் சிலர் இது பற்றி விவாதித்த போது, டிராலி டைம்ஸ் நாளிதழுக்கான எண்ணம் பிறந்தது. நவ்கிரண் நாத், குர்தீப் தலிவால், அஜய் பால் நாத், சுர்மீத் மாவி உள்ளிட்டோர் இணைந்து இந்த நாளிதழை துவகினர்.

இவர்கள் ஒவ்வொருவருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். நவ்கிரண் புகைப்பட கலைஞர் மற்றும் தொழில்முறை பல் மருத்துவர் என்றால், தலிவால் தொழில்முறை புகைப்பட கலைஞர். அஜய் பாயும் மருத்துவர். சுர்மித் பஞ்சாபி திரைக்கலைஞர்.

நரிந்தர் பைந்தர் என்பவரது டிராக்டர் வாகனத்தில் அமைந்தபடி குழுவினர் விவாதித்த போது நாளிதழ் எண்ணம் உண்டானது என்பதால், இந்த வாகனத்தை குறிக்கும் வகையில் டிராலி டைம்ஸ் என பெயரிட்டனர்.

முதல் பதிப்பு நான்கு பக்கங்களில் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

போராட்ட களம் தொடர்பாக வெளியே பலவிதமாக பேசப்பட்டு வந்த நிலையில் களத்தில் உள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் வகையில் டிராலி டைம்ஸ் அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக, ஒரு போராட்ட களத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே அதிக தொலைவு இருந்தாதாலும் உண்டான தகவல் பரிமாற்ற தேவையையும் நிறைவேற்றும் வகையில் நாளிதழ் அமைந்திருந்தது.

முதல் பதிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பதிப்பு 5,000 பிரதிகள் வெளியானது. விவசாயிகள் இதை தங்கள் நாளிதழ் எனும் உணர்வுடன் வாங்கி படித்தனர். அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பஞ்சாபி மற்றும் இந்தியில் வெளியானது.

இப்போது, டிஜிட்டல் வசதிகள் பல வந்துவிட்டாலும் வயதான விவசாயிகள் இன்னமும் அச்சு பதிப்பிற்கு பழகியவர்கள் என்பதால் தன்னார்வலர்கள் அச்சு பதிப்பாக இதை நடத்தி வருகின்றனர்.

எனினும், இளம் தலைமுறையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று டிராலி டைம்ஸ் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டிஜிட்டல் வடிவிலும் வழங்கி வருகின்றனர். இதற்காக டிராலி டைம்ஸ் இணையதளமும் உண்டாக்கப்பட்டுள்ளது.

தற்போது டிராலி டைம்சின் 26 ம் பதிப்பு அச்சு வடிவில் வெளியாகியுள்ளது. இணையத்த்திலும் பதிவேற்றப்படுவதோடு, இதற்கான டிவிட்டர் பக்கம் மூலமும் போராட்ட செய்திகள் பகிரப்படுகின்றன.

டிராலி டைம்ஸ் இணையதளம்: https://www.trolleytimes.online/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.