டிஜிட்டல் பாலின இடைவெளி பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

The-Costs-Of-Exclusionபெண்களுக்கான இணைய வசதி எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பெண்கள் இணையத்தை அணுகும் வாய்ப்பு மற்றும் எத்தனை சதவீத பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர் போன்ற விஷயங்கள் குறித்து யோசித்திருக்கிறீர்களா?

பெண்களுக்கான இணையம் பற்றி இதுவரை யோசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இனி வரும் காலங்களில் இது பற்றி நாமும் சரி நம்முடைய அரசாங்களும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை அண்மையில் வெளியாகியுள்ள ’ஏ4ஏஐ’ (a4ai) அமைப்பின் ஆய்வறிக்கை தெளிவாக உணர்த்துகிறது.

இணைய உலகில் பரவலாக அறியப்பட்ட ’டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு’ போல, ’டிஜிட்டல் பாலின இடைவெளி’ நிலவுவதையும், இந்த இடைவெளி கவலைத்தரும் அளவுக்கு ஆழமாக இருப்பதையும் இந்த அறிக்கை உணர்த்துகிறது.

டிஜிட்டல் இடைவெளி

டிஜிட்டல் டிவைடு என்று சொல்லப்படும் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை அணுக வாய்ப்புள்ளவர்களுக்கும், இதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்குமான இடைவெளியை குறிக்கிறது.

இதே போல, இணையத்தை பயன்படுத்துவதில் ஆண்களுக்கும், பெண்களுக்குமான வேறுபாடு டிஜிட்டல் பாலின இடைவெளி (digital gender gap ) என குறிப்பிடப்படுகிறது. இணையத்தை பயன்படுத்த வாய்ப்பில்லாத பெண்களின் எண்ணிக்கை என இதை புரிந்து கொள்ளலாம். இந்த எண்ணிக்கை உலகின் பல நாடுகளில் மிகவும் குறைவாக இருப்பதை ஏ4ஏஐ அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இணைய வசதிக்கான செலவை குறைத்து, அனைவருக்கும் இணைய வசதியை சாத்தியமாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வலை அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களின் இணைய பயன்பாடு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பு

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஆப்பிரிக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட, ‘டிஜிட்டல் பாலின இடைவெளியின் பொருளாதார விளைவுகள்” எனும் தலைப்பிலான இந்த அறிக்கை, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் டிஜிட்டல் பாலின இடைவெளி காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் ஒரு லட்சம் கோடி அளவில் இந்த நாடுகளுக்கு ஜிடிபியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் இன்னமும் கோடிக்கணக்கானோர் இணையத்தை பயன்படுத்தும் சாத்தியம் இல்லாமல் இருக்கின்றனர் என்றால் பெண்கள் விஷயத்தில் இது மேலும் மோசமாக இருப்பதாக துவங்கும் இந்த அறிக்கை, 21 சதவீத ஆண்கள் இணையத்தை அணுகும் வாய்ப்பில்லாத நிலையில் இருப்பதற்கு மாறாக பெண்களில் 52 சதவீதத்தினர் இணையத்தை அணுக வாய்ப்பில்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது.

இந்தியா உள்ளிட்ட 32 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியாகியுள்ள அறிக்கை, பெண்கள் இணையத்தை அணுகுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டுவதோடு, இதன் பாதிப்புகளையும் அலசியுள்ளது.

இணைய வசதியின்மையால் ஏற்படும் பாதிப்புகளில் பொருளாதார நோக்கிலான பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் இது ஏற்படுத்தும் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இணைய வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த பாலின இடைவெளி கடந்த பத்தாண்டுகளில் பெரிதாக மாறிவிடவில்லை எனத்தெரிவிக்கும் அறிக்கை, பெண்களில் பலர் இணைய வசதி பெறாததால் அரசாங்கங்களுக்கு 24 பில்லியன் டாலர் அளவில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

ஐந்து அம்சங்கள்

உலகின் பல நாடுகளில் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்துவதாகவும், வாங்கும் தன்மை, ஊதிய வேறுபாடு, போன்களின் விலை உள்ளிட்ட அம்சங்கள் இதற்கான அடிப்படை காரணங்களாக அமைவதாக தெரிவிக்கிறது.

பெண்கள் இணையத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை குறைக்க அரசு தரப்பில் போதுமான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இல்லாத நிலையில், இதனால் பத்தாண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர் அளவுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

டிஜிட்டல் பாலின இடைவெளி தொடர அனுமதிக்க கூடாது என்றும் எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் அறைகூவல் விடும் அறிக்கை இதற்கான வழிகளையும் பரிந்துரைத்துள்ளது. இணைத்திற்கான உரிமை, கல்வி, அணுகல் வசதி, பெண்களுக்கான உள்ளடக்கம், பிரத்யேக திட்டங்கள் ஆகிய ஐந்து அம்சங்களை அரசாங்கங்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றம் தேவை

டிஜிட்டல் பாலின இடைவெளியை குறைப்பதன் மூலம், அதாவது மேலும் அதிக பெண்கள் இணையத்தை பயன்படுத்துவதை சாத்தியமாக்குவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 524 பில்லியன் டாலர் அளவுக்கான பொருளாதார வாய்ப்புகள் இருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் போது, தனியுரிமை மற்றும் பாதுகாப்பான பயன்பாட்டில் ஆண்களைவிட அதிக பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் இருப்பதை அறிக்கை படம் பிடித்து காட்டுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் இணைத்தை பயன்படுத்தும் வாய்ப்புள்ள பெண்களில் பலர் தொழில்முனைவு மற்றும் வர்த்தகத்தில் முன்னேறியுள்ளதையும் உதாரணங்களுடன் இந்த அறிக்கை விவரிக்கிறது.

இணைய வசதி அனைவருக்கும் சாத்தியமாகமல் இருப்பதையும், பெண்கள் விஷயத்தில் இதன் பாதிப்பு இன்னும் மோசமாக இருப்பதையும் இந்த அறிக்கையின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். இதை கருத்தில் கொண்டு டிஜிட்டல் பாலின இடைவெளியை குறைக்கும் வகையில் ஏ2ஏஐ, வலை அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த நோக்கில் நம்முடைய பங்களிப்பும் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

டிஜிட்டல் பாலின இடைவெளி தொடர்பான முழு அறிக்கையை வாசிக்க: https://webfoundation.org/docs/2021/10/CoE-Report-English.pdf

  •  தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.