கூகுளில் கண்டறிய முடியாத ’குட்டிநாய்’ இணையதளம்

bபுத்தம் புதிய இணையதளங்களை கூகுளில் கண்டறிவது கடினமாகி கொண்டே இருக்கிறது. ஒரு சில இணையதளங்கள் விஷயத்தில் கூகுளில் கண்டறிவது என்பது சாத்தியம் இல்லாமலே போகிறது. சந்தேகம் இருந்தால் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் டைனிடாக்ஸ் இணையதளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள்.

கூகுள் தேடலில் நிச்சயம் முதல் பக்கத்தில் இந்த தளத்தை காண முடியவில்லை. அடுத்த பக்கத்திலும் இல்லை. முதல் பக்க முடிவுகளில், டைனிடாக்ஸ் தொடர்பான புகைப்படங்களே முன்னிறுத்தப்பட, ஸ்மால்டாக்ஸ்பிளேஸ் எனும் தளமும், வுமன்ஸ்டே எனும் தளமும் முதல் இரண்டு முடிவுகளாக தோன்றுகின்றன.  மூன்றாவது முடிவு டைனிடாக்ஸ் எனும் இன்ஸ்டாகிராம் கணக்கு வருகிறது.

ஆச்சர்யபடும் வகையில் பிங் (/www.bing.com/) தேடியந்திரத்தில் டைனிடாக்ஸ் தேடலுக்கான முதல் முடிவே அந்த இணையதளம் தான். டக்டக்கோ தளத்தில், முதல் முடிவு இல்லை என்றாலும், முதல் பக்கத்திலேயே இந்த தளம் வந்துவிடுகிறது.

அதற்காக கூகுளில் இந்த தளம் பட்டியலிடப்படவில்லை என்றில்லை, கூகுள் தேடலில் இந்த தளம் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதற்கு கூகுளுக்கான காரணங்கள் இருக்கலாம். அதன் அல்கோரிதம் தளங்களுக்கு எப்படி முன்னுரிமை அளித்து வரிசைப்படுத்துகின்றன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கூகுள் தேடல் முடிவுகளில் டைனிடாக்ஸ் தளம் முன்னிலை பெறதாததை கேள்விக்குள்ளாக்குவது ஏன் அவசியம் என்று பார்ப்பதற்கு முன், இந்த தளத்தில் அப்படி என்ன சிறப்பு என பார்த்துவிடலாம்.

Screenshot 2021-11-09 at 14-43-59 Tiny Dogsடைனிடாக்ஸ் தளத்தை அற்புதமான தளம் என்றோ, மகத்தான தளம் என்றோ சொல்ல முடியாது. எளிமையான ஐடியா கொண்ட சுவாரஸ்யமான தளம் என இதை வர்ணிக்கலாம்.

செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பவர்களுக்கு அந்த நாயின் மினியேச்சர் வடிவ பொம்மையை உருவாக்கித்தரும் நோக்கத்துடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாயின் புகைப்படங்களை இந்த தளத்தில் சமர்பித்தால் போதுமானது. அந்த படங்களை கொண்டு, உள்ளங்களையில் வைத்துக்கொள்ளும் அளவில் குட்டி நாயை பொம்மையாக உருவாக்கித்தரப்படுகிறது. கைவேலைப்பாடு பயன்படுத்தப்படுவதால் பொம்மை நாய் அழகாகவே இருக்கிறது. இதற்கான கட்டணமும் செலுத்த வேண்டும்.

ஆக, கம்பிளி கொண்டு கைவேலைப்பாடு மூலம் நேர்த்தியாக உருவாக்கப்படும் பொம்மையாக தங்கள் அபிமான நாயை குட்டி நாயாக வாங்கி கொள்ளலாம் என்பதே இந்த தளத்தின் சிறப்பு.

நிச்சயம் செல்லப்பிராணி பிரியர்களுக்கு இந்த தளம் ஈர்ப்புடையதாக இருக்கும். இந்த தளத்தை உருவாக்கியவரும் நாய்கள் மீது பாசம் கொண்டவராக தான் இருக்க வேண்டும்.

இனி விஷயத்திற்கு வருவோம். இந்த புதுமையான இணையதளம் ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான தளமாக இருக்கிறதே என கூகுள் மூலம் மேலதிக விவரங்கள் தேடினால், கூகுள் தேடல் பட்டியலில் இந்த தளம் இடம்பெறவே இல்லை. கூகுளில் முன்னிலை பெறும் அளவுக்கு இந்த தளம் பிரபலமானதாகவோ, முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ இல்லாமல் போகலாம். அதைவிட முக்கியமாக, வர்த்தக நோக்கில் வருவாயை அள்ளித்தரும் வகையிலும் இல்லாமல் அமைந்திருக்கலாம்,

எது எப்படியோ, புதிய இணையதளங்களை தேடி கண்டறிய கூகுள் ஏற்ற இடம் அல்ல என்றேத்தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

Screenshot 2021-11-09 at 14-35-49 tinydogs - Google Search

Screenshot 2021-11-09 at 14-35-29 tinydogs at DuckDuckGo

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.