டிஸ்லைக் பட்டனை மீட்டுக்கொண்டு வர ஒரு சேவை!

return-youtube-dislike-count-extension-1024x704டிஸ்லைக் பட்டனை யூடியூப் மறைக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பினால் அதை மீட்டெடுக்கலாம் தெரியுமா? இதற்கு வழி செய்யும் பிரவுசர் நீட்டிப்பு சேவை  ரிட்டர்ன்மைடிஸ்லைக்பட்டன் (https://www.returnyoutubedislike.com/) எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ளது. டிமிட்ரி செலிவினோவ் (Dmitry Selivanov, )எனும் மென்பொருளாளர் இந்த எதிர் சேவையை உருவாக்கியுள்ளார்.

கூகுளுக்கு சொந்தமான யூடியூப் அண்மையில் தனது மேடையில் வீடியோக்களை டிஸ்லைக் செய்யும் வசதியை நீக்கியது. ஏற்கனவே இந்த நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் முயற்சித்து பார்த்திருந்த யூடியூப் தற்போட்து, அனைத்து வீடியோக்களுக்குமாக இதை அறிமுகம் செய்துள்ளது.

எந்த ஒரு வீடியோவையும் விரும்புவதாக தெரிவிக்க லைக் வசதி உதவுவது போல, ஒரு குறிப்பிட்ட வீடியோ தொடர்பான விருப்பமின்மையை தெரிவிக்க டிஸ்லைக் வசதி உதவுகிறது.

ஒரு வீடியோவை லைக் செய்வது போல, டிஸ்லைக் வசதி தேவையா என பலர் கேட்கலாம். ஆம், டிஸ்லைக் வசதி தேவை தான் என பலர் வாதிடலாம். டிஸ்லைக் வசதி குறிப்பிட்ட உள்ளடக்கம் தொடர்பான அதிருப்தியை தெரிவிக்கும் வசதி.

பொதுவாக ஒரு வீடியோவின் செல்வாக்கை அறிய எத்தனை பேர் அதனை லைக் செய்துள்ளனர் எனும் விவரும் ஒரு காரணியாக அமைகிறது. எனில், அதன் எதிர் வடிவமான டிஸ்லைக் அம்சமும் இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால், நடைமுறையில் டிஸ்லைக் பட்டன் பெரும்பாலும், உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட உருவாக்குனர்களுக்கு எதிராக பயன்படுத்துப்படுவதாக தெரிய வந்ததை அடுத்து இந்த வசதியை நீக்குவதாக யூடியூப் தெரிவித்தது. அதாவது அதிருப்தியை தெரிவிப்பதற்கு பதிலாக, வீடியோ உருவாக்குனர்கள் மீது அதிருப்தியை காண்பிக்கும் வகையில் பலரும் ஒன்று சேர்ந்த்து திட்டமிட்டு டிஸ்லைக் வசதியை பயன்படுத்துவதாக ஒரு புகார் இருக்கிறது.

இந்த நிலையை தவிர்க்கவே யூடியூப் டிஸ்லைக் பட்டனை ஒளித்து வைக்க தீர்மானித்துள்ளது. ஆம், இந்த பட்டன் இருக்கும், ஆனால் அதன் எண்ணிக்கை விவரம் வெளிப்படையாக தெரியாது. வீடியோவை திருத்தும் உரிமை கொண்டவர் மட்டுமே அதை பார்க்க முடியும்.

தேவையில்லாமல் டிஸ்லைக் பட்டன் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் யூடியூப் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தாலும், இணைய வட்டாரத்தில் இது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இந்த பின்னணியில் தான், டிஸ்லைக் பட்டனை மீட்டெடுக்கும் வகையிலான சேவை அறிமுகம் ஆகியுள்ளது. குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் செயல்படக்கூடிய இந்த நீட்டிப்பு சேவையை தரவிறக்கம் செய்து கொண்ட பின், யூடியூப் தளத்தில் எந்த வீடியோவை பார்த்தாலும், அதில் மறைக்கப்பட்டிருக்கும் டிஸ்லைக் விவரம் வழக்கம் போல தோன்றும். அவ்விதமாக இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

டிஸ்லைக் பட்டனை நீக்கியது சரியா, தவறா எனும் கேள்வியை மீறி, டிஸ்லைக் பட்டன் தேவை என பயனாளிகளில் சிலர் நினைத்தாலும் அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது. அந்த உரிமையை யூடியூப் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அலட்சியம் செய்ய அல்லது நிராகரிக்க தீர்மானித்தாலும் பாதகம் இல்லை, நம்மால் எதிர்ப்பை காட்ட முடியும், டிஸ்லைக் பட்டனை மீண்டும் கொண்டு வர முடியும் என இந்த சேவை உணர்த்துகிறது.

இதே போல இன்னொரு சேவையும் அறிமுகம் ஆகியிருக்கிறது. அதன் விவரம் இணைய மலர் மின் மடலில்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.