ஸ்டூவர்ட் மேடர் எனும் விக்கி விற்பன்னர் !

TechTables-SM (1)ஸ்டூவர்ட் மேடர் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் ஸ்டூவர்ட் மேடர் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று பொருள் இல்லை. இப்போது தான் தற்செயலாக அவரைப்பற்றி தெரிந்து கொண்ட நிலையில் இந்த அறிமுக முயற்சி.

மேம்போக்கான தேடலில் மேடர் பற்றி தெரிந்து கொண்ட அடிப்படையான தகவல்களே வியக்க வைக்கின்றன. அவற்றை பார்க்கும் முன், மேடரை தெரிந்து கொண்ட விதம் பற்றி சில குறிப்புகள்.

விக்கி என்றால் என்ன? (what is a wiki? ) எனும் கேள்விக்கான விடையை இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போது தான், ஸ்டூவர்ட் மேடர் கண்ணில் பட்டார். ஆனால் நேரடியாக இல்லை. அவரை தேடிச்செல்ல வேண்டியிருந்தது. அதுவும் தற்செயலாக நிகழ்ந்தது எனலாம்.

இந்த கேள்விக்கான தேடல் பட்டியலில் தொடர்புடைய சுட்டிக்காட்டல்களில் ’விக்கியின் ஐந்து பயன்கள்’ (5 uses of wiki ) எனும் சுட்டிக்காட்டல் ஈர்ப்புடையதாக தோன்ற அதற்கான தேடலை சொடுக்கிய போது, இரண்டாவதாக ’5 செயல்திறன் வாய்ந்த விக்கி பலன்கள்’ (5 Effective Wiki Uses ) எனும் கட்டுரையில் தான் ஸ்டூவர்ட் மேடர் பெயரை பார்க்க முடிந்தது. வெப்சைட் மேகசைன் எனும் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரையில், விக்கியை வர்த்தக நோக்கில் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் எனும் ஐந்து வழிகளை விவரித்திருக்கிறார்.

ஐந்து வழிகளும் சுருக்கமாக, ஆனால் விக்கியின் ஆற்றல் பற்றி தெளிவாக விளக்குவதாக அமைந்திருந்ததால், யார் இந்த ஸ்டூவர்ட் மேடர் என தெரிந்து கொள்ளும் ஆவலில் அவரைப்பற்றி தேடிய போது தான், ’விக்கிபேட்டர்ன்ஸ்’ (Wikipatterns) எனும் புத்தகத்தை அவர் எழுதியிருப்பது தெரிய வந்தது. இந்த புத்தகம் காரணமாகவே மேடர் பற்றி தனியே எழுத தோன்றியது.

ஒருவித்தில் விக்கி என்றால் என்ன? எனும் கேள்விக்கான முழுமையான பதிலை புரிந்து கொள்ள உதவும் புத்தகமாக இதை கருதலாம். விக்கி என்பது கூட்டு முயற்சிக்கான மென்பொருள் என்பதை கடந்து அதன் உண்மையான பொருளை உள்வாங்கி கொள்வது அவசியம். அதற்கு மேடரின் புத்தகம் உதவுகிறது.

வர்த்தக உலகில் உள்ளவர்கள் தங்கள் குழுவுக்கான கூட்டு முயற்சிக்காகவும், செயல்திறன் மேம்பாட்டிற்காகவும் விக்கி மென்பொருளை எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது. விக்கியின் கட்டற்ற தன்மைக்கேற்ப இந்த புத்தகத்தின் உள்ளட்டக்கத்தை தனது இணையதளத்தில் அத்தியாயங்களாக பட்டியலிட்டிருக்கிறார்.

புத்தக உள்ளடக்கத்தை பறவை பார்வையாக அணுகும் போதே அதன் செறிவான தன்மை ஈர்க்கிறது.

sவிக்கியை பயன்படுத்தும் சாம்பின்களுடான உரையாடல் எனும் தலைப்பிலான அத்தியாயங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாயங்களில் விக்கியை கூட்டு முயற்சிக்காக பயன்படுத்தும் வழிகளை விளக்கியுள்ளார் மேடர்.

ஐந்து நிமிடங்களின் உண்மையான மதிப்பு என்ன? என்பது உள்ளிட்ட பொருள் பொதிந்த தலைப்பிலும் அத்தியாயங்கள் அமைந்துள்ளன. தனியே நேரம் ஒதுக்கு படிக்க வேண்டிய புத்தகமாக இது அமைகிறது.

விக்கி பற்றி பேசுபவர்களும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.

ஸ்டூவர்ட் மேடர், விக்கி ஆலோசகராக இருப்பதோடு, போக்குவரத்து வரைபடமாக்கல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்த துறையில் அவரது பங்களிப்பு கணிசமானதாக இருக்கிறது. கோவிட்-19 பாதிப்புக்கு பின் போக்குவரத்து திட்டமிடல் சார்ந்த இவரது கட்டுரைகளும் கவனிக்கத்தக்கவையாக இருக்கின்றன.

மேலும் அறிய: https://www.stewartmader.com/wikipatterns/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “ஸ்டூவர்ட் மேடர் எனும் விக்கி விற்பன்னர் !

  1. Ravichandran R

    மிக அருமையான பகிர்வு! ஆங்கில விக்கிபீடியாவின் பலம் மற்றும் வீச்சு அறிந்து எழுத்தாளர் ஜெயமோகன் ‘தமிழ் விக்கி’ என்னும் புதிய இணைய தளம் உருவாக்கலில் இணைந்திருக்கிறார்….மிக உன்னத இலக்குகளுடன்…இன்னும் ஓரிரு நாட்களில் அது …லைவ் ஆகப்போகிறது! இந்த சூழலில்…இந்த கட்டுரை …விக்கியின் ஆதார நோக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு தரும்!

    Reply

Leave a Comment to Ravichandran R Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *