டெலிட் செய்யப்படும் விக்கி கட்டுரைகளுக்கு இடமளிக்கும் மாற்று விக்கிபீடியா

3fcb6633a14cbbaf496d63ec3cb6bb9fவிக்கிபீடியாவை அறிந்தவர்கள் அவசியம் டெலிஷன்பீடியா (https://deletionpedia.org/en/Main_Page) தளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக விக்கிபீடியா செயல்பாட்டின் மீது விமர்சனமும், அதிருப்தியும் கொண்டவர்கள் இந்த மாற்று விக்கிபீடியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

விக்கிபீடியா விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தளம் இல்லை தான். பயனாளிகள் பங்களிப்பால் உருவாவதால் துவக்க காலத்தில் அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பினர். தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இப்போது விக்கிபீடியா மையமாக்கப்பட்ட எந்த ஒரு களஞ்சியத்தாலும் உருவாக்க முடியாத தகவல் களஞ்சியமாக உருவாகியுள்ள சூழலில், அதனுள் நிலவும் குழுச்சண்டைகள் பற்றியும், சார்பு நிலை பற்றியும் விமர்சனங்களை வைக்கின்றனர்.

எடிட் வார்ஸ் என குறிப்பிடப்படும் விக்கிபீடியாவின் திருத்தல் யுத்தகங்கள் பெயர் பெற்றவை. அதாவது சர்ச்சைக்குறிய விக்கிபீடியா கட்டுரைகளில் தகவல்களை சேர்ப்பதிலும் நிக்குவதிலும் இடைவிடமால் நடைபெறும் மோதல்களே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது தவிர விக்கிபீடியா குழு நிர்வாகிகள் அல்லது எடிட்டர்கள் மத்தியில் நிலவும் சார்பு பற்றியும் நிறைய புகார்கள் உண்டு.

இந்த குறைகள், புகார்களை எல்லாம் மீறி தான் விக்கிபீடியா மகத்தான இணைய களஞ்சியமாக உருவாகி கொண்டிருக்கிறது. ஏனெனில், விக்கிபீடியாவின் குறைகளை களைவதற்கான வழிமுறை அதன் அடிப்படை செயல்பாட்டில் இருக்கிறது என்பது தான்.

விக்கிபீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால், மாற்றங்களையும், திருத்தங்களையும் மேற்கொள்ள ஏற்ற வகையில் அதன் நெறிமுறைகள் அமைந்துள்ளன. பிரச்சனை அல்லது மோதல் என வந்தால், முறையீடு, மேல் முறையீடு, இரு தரப்பையும் சரி பார்த்தல் என எல்லா வழிகளும் இருக்கின்றன. மிகவும் பிரச்சனைக்குறிய விஷயம் எனில், பொது கருத்து எட்டப்படும் வரை பக்கங்கள் முடக்கி வைக்கப்படுவதும் உண்டு.

விக்கிபீடியா உலகம் கூடி இழுக்கும் தகவல் தேர். அதன் செயல்பாடு தொடர்பாக ஏதேனும் பிரச்சனை என்றால், விமர்சன கல்லெறிவதை தவிர ஆக்கப்பூர்வமான வழிகள் இருக்கின்றன.

விக்கிபீடியாவின் தன்மையை உணர்ந்து கொண்டு அதில் உள்ள குறைகளை சரி செய்ய முயலும் தன்னார்வலர்களாலேயே அந்த களஞ்சியம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

ஆனால் விக்கிபீடியாவை விட இணையம் பெரியதும், பரந்ததும் அல்லவா? அதனால் தான் டெலிஷன்பீடியா போன்ற தளங்கள் உருவாக்கப்படுகின்றன.

தமிழில் அழி களஞ்சியம் என பொருள் கொள்ளக்கூடிய டெலிஷன்பீடியாவை, விக்கிபீடியாவில் இருந்து நீக்கப்படும் கட்டுரைகளை சேமித்து வைக்கும் தளம் என்று வர்ணிக்கலாம்.

விக்கிபீடியா நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இணைய களன்சியம். அதில் தினமும் ஆயிரக்கணக்கில் புதிய கட்டுரைகள் சேர்க்கப்படுவது போலவே, பல்வேறு காரணங்களுக்காக கட்டுரைகள் நீக்கப்படுகின்றன. தகுதியற்ற கட்டுரைகள் என விக்கி நிர்வாகிகளால் கருதப்படும் கட்டுரைகள் நீக்கப்பட்டு வருகின்றன.

விக்கிபீடியாவில் எதற்காக எல்லாம் கட்டுரைகள் நீக்கப்படுகின்றன என்பதை அறிய, எந்த காரணங்களுக்கு எல்லாம் விக்கிபீடியாவில் இருந்து கட்டுரைகள் அகற்றப்படலாம் எனும் விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். காப்புரிமை மீறிய கட்டுரைகள், பிழையான தகவல்களை கொண்டவை, போதிய ஆதாரங்கள் இல்லாதவை, முற்றிலும் பயனற்றவை என கருதப்படுபவை எல்லாம் அகற்றப்படலாம் என அறிய முடிகிறது.

கட்டுரைகள் நீக்கத்திற்கான விதிமுறைகளும், அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் தெளிவாக இருந்தாலும், நடைமுறையில் இவை தவறாக பயன்படுத்தப்படலாம். அப்படி நிகழ்ந்தால் அதை சுட்டிக்காட்டவும், தட்டி கேட்கவும் வழி இருக்கவே செய்கிறது.

எந்த காரணத்திற்காக அகற்றப்பட்டிருந்தாலும் சரி, அவை எத்தனை பயனற்றவையாக இருந்தாலும் சரி, விக்கிபீடியாவில் இருந்து நீக்கப்படும் கட்டுரைகளுக்கு என்ன ஆகிறது எனும் கவலை நியாயமானது தானே. அதைவிட முக்கியமாக, அந்த கட்டுரை ஏன் நீக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்கான சாத்தியம் இருக்க வேண்டும் தானே. இதை தான் டெலிஷன்பீடியா செய்கிறது.

downloadடெலிஷன்பீடியா தளம் விக்கிபீடியாவில் இருந்து நீக்கப்படும் கட்டுரைகளை கண்டறிந்து, அவற்றை உடனடியாக சேமித்து வைக்கிறது. கட்டுரை நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ளலாம். இவை விக்கிபீடியாவின் திருத்தல் வரலாறு பக்கங்களில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

ஆக, விக்கிபீடியாவில் இருந்து நீக்கப்பட்டால் அந்த கட்டுரைகள் இணையத்தில் இல்லாமல் போவதாக பொருள் இல்லை. அவற்றை மீட்டெடுத்து ஆவணப்படுத்த டெலிஷன்பீடியா இருக்கிறது.

இந்த மீட்டெடுப்பை தான் இணைய கலாச்சாரத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. அதாவது இணையத்தின் தன்மையையும், அதன் அருமையையும் புரிந்து கொண்ட தனிமனிதர்களும், குழு மனிதர்களும் அதை காக்கும் வகையில் செயல்படுவதன் அடையாளம் டெலிஷன்பீடியா.

இது விக்கிபீடியாவுக்கு போட்டி தளமோ மாற்று தளமோ அல்ல. அதனுடன் தொடர்புடைய தளம்.

ஆய்வு நோக்கிலும் சரி, விக்கிபீடியா செயல்பாட்டை புரிந்து கொள்ளவும் சரி டெலிஷன்பீடியா நாம் கவனம் செலுத்த வேண்டிய முயற்சி.

நிற்க இங்கு சில சுவாரஸ்யமான விஷயங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

  • டெலிஷன்பீடியா தளம் 2008 ல் உருவாக்கப்பட்டது. இந்த தளம் தொடர்பான பதிவு விக்கிபீடியாவில் உருவாக்கப்பட்டது. அது நீக்கப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டு பின்னர் அந்த பதிவு தொடர தீர்மானிக்கப்பட்டது. விக்கிபீடியா சமூகத்தின் ஜனநாயக தன்மைக்கு எடுத்துக்காட்டு இது.
  • டெலிஷன்பீடியா தொடர்பான ரெட்டிட் தளம் விவாதத்தில், இதில் இடம்பெறும் நீக்கப்பட்ட கட்டுரைகளில் பல எத்தனை அபத்தமானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. https://www.reddit.com/r/InternetIsBeautiful/comments/sv54g8/deletionpedia_a_website_that_allows_you_to_view/
  • விக்கிபீடியா சமூகத்திற்குள் இரண்டு முக்கிய பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் எந்த ஒரு கட்டுரையும் நீக்கப்படக்கூடாது என கருதும் ஆரத்தழுவின் பிரிவினர். இன்னொரு பிரிவினர் தரம் காக்க, தகுதியற்ற கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என வாதிடும் நீக்க பிரிவினர். இந்த இரு பிரிவினரிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று கொண்டே இருக்கிறது.
  • 2008 ல் துவக்கப்பட்ட டெலிஷன்பீடியா ஒரு சில மாதங்களுக்கு பின் செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், டென்மார்க் மென்பொருளாலர் காஸ்பர் (Kasper Souren), நீக்கப்படும் விக்கிபீடியா கட்டுரைகளை மீட்டெடுக்க விரும்பிய போது, டெலிஷன்பீடியா எனும் தளம் இருந்த்தையும் பின்னர் காணாமல் போனதையும் அறிந்து, அதிர்ஷ்டவசமாக அதே பெயரை வாங்கி டெலிஷன்பீடியாவின் அடுத்த வடிவத்தை நடத்தி வருகிறார். முன்னாள் விக்கிபீடியா பங்கேற்பாளரான இவர் இந்த தளத்தை துவக்கியதற்கான காரணத்தை டெய்லி டாட் தளத்திற்கான பேட்டியில் விளக்கியுள்ளார். https://www.dailydot.com/irl/deletionpedia-wikipedia-deleted-articles/
  • டெலிஷன்பீடியா தளம் விக்கி மென்பொருள் கொண்டு விக்கிபீடியா போலவே நடத்தப்படுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.