வனவிலங்குகளை காக்க ஒரு பிரவுசர்

இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிரவுசரை மாற்றும் எண்ணம் இருந்தால் அல்லது ஒரு மாற்று பிரவுசரை பயன்படுத்திப்பார்க்கும் எண்ணம் இருந்தால் வைல்டு பிரவுசரை (https://wildbrowser.com/ ) நீங்கள் பரிசீலிக்கலாம்.

ஆனால், ஒரு புதிய பிரவுசர் அல்லது மாற்று பிரவுசர் என்பதை விட, வன உலாவி என பொருள்படும் இந்த பிரவுசரை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ள இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. இந்த பிரவுசர் உருவாக்கப்பட்ட நோக்கம் தான் அது.

ஆம், இணையத்தில் உலாவும் போதே வனவிலங்கு பாதுகாப்பிற்காகவும் பங்களிப்பு செலுத்தும் வகையில் வைல்டு பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் மூலம் இணையத்தில் உலாவும் போது, கிடைக்கும் விளம்பர வருவாயை முழுவதும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக இந்த பிரவுசர் அறிமுகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தேடும் போது, மரம் வளர்ப்பதற்கான நன்கொடை அளிக்க வழி செய்யும் இகோஷியா தேடியந்திரத்தை இந்த பிரவுசர் நினைவுபடுத்துகிறது. மொபைல் போனில் பயன்படுத்த ஏற்ற வகையில், வேகமான இணைய அனுபவத்தை அளிப்பதாக சொல்கிறது.

ஜோசப் மற்றும் ஜூலியா மெகோவான் தம்பதி இந்த பிரவுசரை உருவாக்கியுள்ளனர். ஆர்டிக் துருவ பகுதியில் சுற்றுலா சென்றிருந்த போது, அங்கு கண்ட காட்சிகளில் மெய்மறந்துள்ளனர். குறிப்பாக அங்கிருந்த ஆர்டிக் பிரதேச நரி அவர்களை மிகவும் ஈர்த்துள்ளது. ஆனால், இந்த நரி இனமே அழியும் நிலையில் இருப்பதை தெரிந்து கொண்ட போது, உலக வனவிலங்குகளை காக்கும் ஊக்கம் பெற்று அதற்கு உதவும் வகையில் இந்த பிரவுசரை உருவாக்க தீர்மானித்துள்ளனர்.

https://cybersimman.substack.com/p/4c0

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.