திரைக்கதை என்றால் என்ன?- அட்கின்சன் அளிக்கும் விளக்கம்!

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த வரிசையில் கிளிப் அட்கின்சனை (Cliff Atkinson ) குறிப்பிட விரும்புகிறேன்.

உடனே அட்கின்சனும் திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருப்பதாக நினைக்க வேண்டாம். அட்கின்சன் திரைத்துறையுடன் நேரடி தொடர்பு இல்லாதவர், தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்து இயங்கி வருபவர். ஆனால், திரைப்படங்களின் ஆதார அம்சத்தில் அவருக்கு நாட்டமும் அதைவிட முக்கியமாக நிபுணத்துவமும் இருக்கிறது. கதை சொல்லல் தான் அந்த அம்சம்.

ஆங்கிலத்தில் ஸ்டோரி டெல்லிங் என குறிப்பிடப்படும் கதை சொல்லலை மையமாக வைத்து தான் அட்கின்சன் தனது பெஸ்ட் செல்லர் புத்தகமான ’பியாண்ட் புல்லட் பாயிண்ட்ஸ்’ (BEYOND BULLET POINTS ) புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் பவர் பாயிண்ட் பிரசண்டேஷன்களுக்கான வழிகாட்டி நூல்.

அதாவது சிறந்த முறையில் பிபிடி பிரசண்டேஷன்களை உருவாக்குவது எப்படி என வழிகாட்டும் வகையில் அட்கின்சன் இந்த புத்தக்கத்தை எழுதியிருக்கிறார்.

பிபிடி வழிகாட்டி என்றதுமே, கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு, அகண்ட திரையில் மார்க்கெட்டிங் வித்தை காட்டுபவர்களுக்கான வழிகாட்டுதல் என நினைத்து விலகிச்சென்று விட வேண்டாம். வழக்கமான வழிகாட்டி நூல்களில் இருந்து மாறுபட்டது மட்டும் அல்ல மிகவும் மேம்பட்டது இந்த நூல். அதைவிட முக்கியமாக இந்த புத்தகம் அலுப்பூட்டாமல், சும்மா வாசிக்கும் போது வழுக்கி கொண்டு செல்வது போல சுவாரஸ்யமாக இருக்கும்.

ஏனெனில், அட்கின்சன் இந்த புத்தகத்தை கதை சொல்லியிருக்கிறார். பார்ப்பவர்களை கட்டிப்போடும் வகையில் காட்சி விளக்கம் ( பிபிடி) செய்வது எப்படி என பாடமும் நடத்தியிருக்கிறார். அதன் பாலபாடம் தான் கதை சொல்லல்.

ஒரு நல்ல காட்சி விளக்கம், அடிப்படையில் அழகான ஒரு கதை சொல்ல வேண்டும் என்கிறார் அட்கின்சன். காட்சி விளக்கம், வரி வடிவை அதிகம் சார்ந்திராமல், காட்சி அம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். வரி வடிவ சுமை ஸ்லைடுகளை தொங்க வைக்காமல், அழகான காட்சிகளோடு, இணைந்து போகும் வகையில் வாசகங்கள் துணை நிற்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

இப்படி எழுத்தும், காட்சியும் கலந்த பாணியை, இரட்டை ஊடக வழி என்றும் சொல்கிறார். இதை எளிதாக புரிய வைப்பதற்காக அவர் திரைக்கதை உதாரணத்தை பயன்படுத்துகிறார். சிறந்த பல்லூடக காட்சி விளக்கத்தை உருவாக்குவதற்கான வழி எழுத்து மற்றும் காட்சிகளை ஒருசேர திறம்பட கையாள்வது என்பர், திரைப்பட இயக்குனர்கள், இதை நன்கு உணர்ந்திருக்கின்றனர் என்கிறார்.

திரைப்பட உருவாக்கலை திட்டமிட எழுத்து வடிவே சிறந்த என்பதை இயக்குனர்கள் அறிந்திருக்கின்றனர், இதற்கு திரைக்கதை என்று பெயர் என்றும் சொல்கிறார். திரைக்கதைக்கான எளிமையான, ஆனால் அருமையான விளக்கம்.

ஒரு திரைக்கதை, நாவலை விட குறைந்த அளவிலானது, ஏனெனில் கதை சொல்லலில், காட்சிகளும், வசனங்களும் முக்கிய அங்கம் வகிக்கப்போவதை அறிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மிகச்சிறந்த திரைக்கதை, எல்லாவற்றையும் அவற்றின் அடிப்படைக்கு சுருக்கி, கதையின் மைய கவனத்திற்கு தொடர்பில்லாத எல்லாவற்றையும் விலக்குகிறது என்கிறார்.

அட, திரைக்கதை என்ன ஒரு அழகான விளக்கம் இல்லையா!

ஒரு திரை எழுத்தாளர், திரைக்கதை எழுது முடித்த பின், அது மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு சாதனமாகிவிடுகிறது. ஏனெனில் அது எல்லோரையும் ஒரே பக்கத்தில் இருக்கச்செய்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

அட்கிசன் பற்றியும் காட்சி விளக்க கதை சொல்லல் பற்றியும் இன்னும் நிறைய இருக்கிறது.

https://ptgmedia.pearsoncmg.com/images/9780735627352/samplepages/9780735627352.pdf

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *