சிறந்த இணையதளங்களை கண்டறிவது எப்படி?

என்னுடைய முதல் இமெயில், யாஹுவுடையது. ஆனால், அதை பயன்படுத்தவே இல்லை. அதன் பிறகு, பிரதானமாக பயன்படுத்தியது ரெடிப் இமெயில் தான். இடையே இண்டியாடைம்சில் இமெயில் ஒரு துணை இமெயில் துவங்கினேன். பின்னர் தான் ஜிமெயில் பக்கம் வந்தேன். இப்போது, வேறு வழியில்லாமல் தான் ஜிமெயிலை பயன்படுத்துகிறேனே தவிர, ஜிமெயில் அல்லது கூகுளின் எந்த சேவையும் விருப்பத்தேர்வு அல்ல. ( கூகுல் தேடலையும் சேர்த்தே சொல்கிறேன்).

தேவை எனில், வேறு நல்ல இமெயில் சேவைக்கு மாறும் விருப்பமும் இருக்கிறது. ஜோஹோ மெயில் உள்ளிட்ட சேவைகளை பரிசீலிக்கும் எண்ணம் உண்டு. இந்த பட்டியலில் ஹே மெயிலையும் சேர்த்துக்கொள்ளலாம். அதற்காகவே, இந்த இமெயில் புராணம்.

ஹேமெயில் (Hey.com ) பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். இப்போது தொடர்புடைய குறிப்புகள் மட்டும். ஹேமெயில், இமெயிலை புதுமையாக அணுகும் முயற்சி எனும் வரணனையோடு அறிமுகமாகி, பரவலாக அதற்கான அங்கீகாரத்தையும் பெற்ற சேவை. 2020 ம் ஆண்டில் கட்டணச்சேவையாக அறிமுகமான போது, அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம்.

இமெயிலையும், இணைய நாட்காட்டியையும் இணைத்து இப்போதும் சேவை அளித்து வருகிறது.

ஹே மெயிலை 2020 ம் ஆண்டில் சிறந்த இணையதளங்களில் ஒன்று என்றும் சொல்லலாம். ஆனால், சிக்கல் என்னவெனில், 2020 ம் ஆண்டு சிறந்த இணையதளங்கள் என தேடினால், கூகுளில் இந்த தளத்தையோ, இது போன்ற இன்னும் பிற 2020 சிறந்த தளங்களையோ அடையாளம் காண முடியவில்லை. ( நீங்களே பரிசோதித்துப்பார்க்கலாம்)

2020 சிறந்த தளங்கள் தேடலுக்கான கூகுள் பட்டியலில், வடிவமைப்பு நோக்கிலான பட்டியலே முன்வைக்கப்படுகிறதே தவிர, உள்ளடக்கம் நோக்கிலான தளங்களின் பட்டியல் இல்லை.

இத்தகைய தளங்களை தேட வேண்டும் எனில் வேறு வழிகளை தான் நாட வேண்டும்.

நிற்க, ஹே மெயில் போன்ற தளங்களை பட்டியலிட்டு அடையாளம் காட்ட ஒரு இணையதளம் இருக்கிறது. டூல்பைண்டர் (https://toolfinder.co/) எனும் அந்த தளம் பற்றி இணைய மலரில் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.