Tagged by: இணையதளம்

டொமைன் ரகசியம்-1

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், “டாட் டிகே’ மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் […]

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான,...

Read More »

கனடாவில் டொமைன் அலை

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ விடுவதாகவே தோன்றுகிறது. இப்போது விழித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களுக்கான சொந்த முகவரியை பதிவு செய்து கொண்டு விடலாம்.இந்தியர்கள் எப்படியோ, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பலர் இன்டெர்நெட்டில் தங் களுக்கென தனி அடை யாளத்தை உறுதி செய்து கொள்ளும் சொந்த இணையதள முகவரிகளை உருவாக்கி வருகின்றனராம். இதனை படித்ததும் சொந்த இணையதளமெல்லாம் […]

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ...

Read More »

கையுறைகளை காண வாருங்கள்

அழகான ஒரு கையுறை. அதனை சாலை நடுவிலோ அல்லது வேறு ஏதோ பொது இடத்திலோ பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன செய்ய தோன்றும்? கையுறையை எடுத்துக் கொள்வீர்களா? அல்லது விட்டுச் செல்வீர்களா? என்று உங்களது நேர்மையை பரிசோதிப்பதற்கான கேள்வி அல்ல இது. . இப்போது ஒரே கையுறைக்கு பதிலாக பல கையுறைகள் சிதறிக் கிடக்கும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அமெரிக்க பெண்மணி ஒருவர் இது போன்ற அனுபவத்தை […]

அழகான ஒரு கையுறை. அதனை சாலை நடுவிலோ அல்லது வேறு ஏதோ பொது இடத்திலோ பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு...

Read More »

விலைக்கு வந்த பெல்ஜியம்

கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணையதளத்தில் சகஜமானதுதான். வினோதமான பொருட்கள் இபேயில் ஏலத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. அதே போல ஊர்களும், நாடுகளும் இபேயில் விலைக்கு வருவதும் நடந்திருக்கிறது. இபே மூலம் ஒரு முழு கிராமமே விற்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அது உண்மையாக நிகழ்ந்தது. . ஆனால் நாடுகள் விற்பனைக்கு வருவது என்பது உண்மை என்பதை விட கேலியாகவோ, விளையாட் டாகவோதான் அமைந்திருக்கிறது. […]

கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணை...

Read More »

இசைப்பறவை சிறகுகள் விரிக்க.

இது இசையின் பொற்காலமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். டிஜிட்டல் இசையின் வருகையும், இன்டெர்நெட்டின் ஆற்றலும் இணைந்து இசைப்பிரியர்களுக்கு எண்ணற்ற கதவுகளை திறந்து விட்டிருக்கின்றன. இந்த கதவுகள் வழியே அவர்கள் விரும்பும் இசை தடையின்றி தவழ்ந்து வருகின்றன. இசைக்கான இணையதளங்களும் பாடல்களை டவுன்லோடு செய்யும் சாப்ட்வேர்களும் போதாது என்பது போல பிடித்தமானதாக இருக்கக்கூடிய பாடல்களை பரிந்துரை செய்யக்கூடிய இணைய சேவைகளும் அறிமுகமாகியிருக்கின்றன. கேட்க வாய்ப்பில்லாத ஆனால் கேட்க நேர்ந்தால் உச்சிக்குளிர்ந்து போய் விடக்கூடிய பாடல்களையும், […]

இது இசையின் பொற்காலமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். டிஜிட்டல் இசையின் வருகையும்,...

Read More »